பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை ரோஷினி உடற்பயிற்சி மன்ற 3ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பட்டுக்கோட்டை அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டி, மிஸ்டர் ரோஷினி கிளாசிக் 2012 ஆணழகன் போட்டி நடந்தது. 60 கிலோ எடை பிரிவில் அஜீஸ் முதலிடம், காளீஸ்வரன்
இரண்டாமிடம், செந்தில்குமார் மூன்றாமிடமும், 65 கிலோ எடை பிரிவில் அப்துல் பூட்டோ முதலிடம், அழகர் இரண்டாமிடம், அக்பர் அலி மூன்றாமிடமும் பிடித்தனர்.
பெஞ்ச் பிரஸ் போட்டி 53 கிலோ உடல் எடை பிரிவில் விஜயகுமார் முதலிடம், சிவா இரண்டாமிடம், செல்வமணி மூன்றாமிடமும், 59 கிலோ எடை பிரிவில் ஸ்ரீதரன் முதலிடம், அஜீஸ் இரண்டாமிடம், ஆனந்தராஜ் மூன்றாமிடமும் பிடித்தனர். 66 கிலோ பிரிவில் சுகுனேஸ்வரன் முதலிடம், முருகானந்தம் இரண்டாமிடம், கவியரசன் மூன்றாமிடமும், 74 கிலோ பிரிவில் மதன் முதலிடம், பரமசிவம் இரண்டாமிடம், வீரபிரகாஷ் மூன்றாமிடமும் பிடித்தனர்.
83 கிலோ பிரிவில் நெடுஞ்செழியன் முதலிடம், செந்தில்குமார் இரண்டாமிடம், மதியழகன் மூன்றாமிடமும் பிடித்தனர். மேலும் ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை அஜீஸ், மிஸ்டர் பெஞ்ச் 2012 பட்டத்தை ஸ்ரீதரன் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வலுதூக்கும் சங்க செயலாளர் ஜலேந்திரன், அகில இந்திய நடுவர் அமீர்பாஷா, இந்திய இரும்பு மனிதன் பட்டம் பெற்ற உலக வலுதூக்கும் வீரர் நாடிமுத்து ஆகியோர் பரிசு வழங்கினர். செந்தில்குமார் நன்றி கூறினார்.











Leave a comment