சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு: காங்., உறுதி

லக்னோ: உ.பி., சட்டசபை தேர்லை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு
வழங்கப்படும். மாநிலத்தில் முதல்வர் பதவி லோக்ஆயுக்தா வரம்பில் கொண்டு வரப்படும். ஆயோத்தி இடிப்பு வழக்கில் கோர்ட் சுமுக தீர்வு காணப்படும். அனைத்து அரசியல் கட்சிகளும் கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும். உ.பி., மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும். பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படும். மாநிலத்தில் வெற்றி பெற்றால் நேர்மையான ஆட்சி வழங்குவோம். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும் ஒரு பெண் போலீசார் நியமிக்கப்படுவார். பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களின் திருமணத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என கூறியுள்ளது. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment