பட்டுக்கோட்டையில் மளிகைக்கடை, அரிசி மண்டி, காய்கறி கடை, மீன் மார்க்கெட்டுகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மறு முத்திரையிடாத எடையளவுகளை பறிமுதல் செய்தனர். தொழிலாளர்
நலத்துறையின் கீழ் திருச்சி மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் தாயுமானவர் தலைமையில் தஞ்சை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் பட்டுக்கோட்டை வட்டார பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பட்டுக்கோட் டை நகராட்சி பகுதியில் பெரிய கடைத்தெரு, அறந்தாங்கி சாலை, தேரடித் தெரு பகுதிகளில் உள்ள மளிகைக்கடை, அரிசி மண்டி, காய்கறி மற்றும் மீன் மார்க்கெட், நகைக்கடைகளில் சட்டமுறை எடைய ளவு சட்டம் மற்றும் பொட் டலப் பொருள் விதியின் கீழ் 175 வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடைபெற்றது. இதில் மறுமுத்திரையிடாத 9 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொட்டலப் பொருள் விதிகளின் கீழ் பொட்டலங்களில் பொட்டலமிட்டவர் பெயர், முகவரி, பொருளின் எண்ணிக்கை அல்லது எடை, பொட்டலமிடப்பட்ட மாதம், தேதி, வருடம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, பொட்டலப் பொருள் பற்றி நுகர்வோர் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண், மின்னணு அஞ்சல் முகவரி போன்ற தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 10 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.











Leave a comment