அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்க    ளின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது. 

மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் உருளைக்கிழங்கு முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.

உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.

இந்த துர்நாற்றத்திற்கு வாயோ, பற்களோ காரணம் அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும். உருளைகிழங்கு சாப்பிடுவதன் மூலம் ஆரம்ப கால புற்றுநோயை தடுக்கும்

ஆரம்ப புற்று நோய் இருப்பின் கேரட் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து புற்றுநோயை தடுக்கலாம் 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட  2- வகுப்பு ரெயில் கட்டண உயர்வு வாபஸ்: பாராளுமன்றத்தில் புதிய மந்திரி அறிவிப்பு 

பாராளுமன்றத்தில் கடந்த 14-ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டை அப்போது ரெயில் மந்திரியாக இருந்த தினேஷ் திரிவேதி தாக்கல் செய்தார். இதில் சாதாரண ரெயில், புறநகர் ரெயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 பைசாவும் ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. 2-ம் வகுப்பு ஏ.சி. சேர்கார் ஆகியவற்றின் கட்டணங்கள் கிலோ மீட்ட ருக்கு 30 பைசா வரை உயர்த்தப்பட்டது. 

ரெயில் கட்டண உயர்வுக்கு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தினேஷ் திரிவேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே உத்தர விட்டார். இதனால் மத்திய அரசுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது. 

இது தொடர்பான சமரச முயற்சியை ஏற்க மம்தா பானர்ஜி மறுத்து விட்டார். கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட வேண்டும், தினேஷ் திரிவேதியை நீக்கி விட்டு தனது கட்சியைச் சேர்ந்த முகுல்ராயை ரெயில் மந்திரியாக நியமிக்க வேண்டும் என்று உறுதிப்பட தெரிவித்தார். 

வேறு வழியின்றி மத்திய அரசு இதை ஏற்றுக்கொண்டது. தினேஷ் திரிவேதி ரெயில்வே மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப்பதில் முகுல்ராய் புதிய ரெயில் மந்திரியாக பொறுப்பேற்றார். அடுத்த கட்டமாக ரெயில் கட்டண உயர்வும் இன்று வாபஸ் பெறப்பட்டது. இன்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் ரெயில் மந்திரி முகுல்ராய் கட்டண உயர்வு வாபஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். 

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்புக்கான கட்டண உயர்வையும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம், ஏ.சி. சேர்கார், ஏ.சி. 3-ம் வகுப்பு கட்டண உயர்வையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். அவற்றுக்கான பழைய கட்டணமே நீடிக்கும். அதே சமயம் ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. 2-ம் வகுப்பு கட்டண உயர்வில் மாற்றம் செய்யப்படவில்லை. அவற்றுக்கான கட்டண உயர்வு நீடிக்கும் என்றும் தெரிவித்தார். 

கட்டண உயர்வை திரும்ப பெறுவதற்கான தீர்மானத்தை ரெயில் மந்திரி முகுல்ராய் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ராதாபுரத்திற்குள் நுழைய 144 தடை உத்தரவு


 
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்யும் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் தனிநபர்கள் ராதாபுரம் தாலுகாவிற்குள் ஏப்ரல் 2ம் தேதி மாலை வரை நுழைய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நெல்லை கலெக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூடன்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுக்களின் அறிக்கை மற்றும் அணுமின் திட்டத்திற்கு எதிரான மனு விரிவாக ஆராயப்பட்டதில் நில நடுக்கம், சுனாமி போன்றவை அப்பகுதியில் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும், கூடன்குளம் அணுமின் நிலையம் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை கொண்டதும் என்பது தெரிய வந்துள்ளது.அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காது என்பதும், அப்பகுதி மக்களிடையே ஏற்படும் சந்தேகங்களுக்கு மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதில் அளித்துள்ளதை கருத்தில் கொண்டு அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பது தெரிய வந்துள்ளது.

மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத நிலையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கூடன்குளம் அணுமின்நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில் கூடன்குளம் அணுமின் நிலையப் பணிகள் நேற்று(19ம் தேதி) முதல் செயல்படத்துவங்கியுள்ளது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு உதவுவதோடு, கூடன்குளம் பகுதி பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கும், கூடன்குளம் அணுமின் நிலையத்தில் சட்டப்படி பணிபுரிபவர்களை தடுக்காமல் இருப்பதற்காகவும், அவர்களை பாதுகாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாக்கவும், கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்வது, அவர்களை தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், அமைப்புகள்,இயக்கங்கள் மற்றும் நபர்கள் நேற்று(19ம் தேதி) மாலை 3 மணி முதல் வரும் ஏப்ரல் 2ம் தேதி மாலை 3 மணி வரை ராதாபுரம் தாலுகாவிற்குள் நுழைய 144 தடை உத்தரவு பிறப்பபிக்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் செல்வராஜ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ஜாம்பவான் மலர்!

 

உலகிலேயே மிகப் பெரிய மலர் எந்த தேசத்தில் உள்ளது? தென் கிழக்கு பசிபிக் நாடான இந்தோனேஷியாவில் சுமாத் திரா தீவில் உள்ளது. பூமியில் வேறு எங்கும் காண முடியாத பல அற்புத மலர்கள் இங்கே காணப்படுகின்றன. அவற்றில் ராபிள்ஸியா ஆர்னால்டு என்ற மலரும் ஒன்று! உலகிலேயே இதுதான் மிகப் பெரிய மலர். ஒரே ஒரு மலரின் எடை மட்டும் 7 கிலோ வரை இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறுக்களவு 3 அடி. மகரந்தத் தண்டுகளையும், தேன் பையையும் தாங்கி நிற்கும் மையப் பகுதி மட்டும் 30 செ.மீ. குறுக்களவில் இருக்கும். பூவின் மெல்லிய இதழோ 60 மில்லி மீட்டர் தடிமன் கொண்டது. இதன் அதிகபட்ச தடித்த பாகம் 180 மி.மீ. தடிமனில் இருக்கும்.

பூவின் நடுவில் உள்ள கிண்ணம் போன்ற பகுதி யில் 10 லிட்டர் தண்ணீர் ஊற்றலாம். அந்தளவுக்கு மிகப்பெரிய கிண்ணம் போன்ற பள்ளம் உள்ளது. இந்த நிறம் என்று எதையும் வரையறுத்துச் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு ஆக்டோபஸ் உடலின் மேற்புறம் போன்ற நிறத்தில் இருக்கும். கிட்டத்தட்ட மாமிசம் போன்ற தோற்றத்தில் இருக்கும். இதன் மொட்டு பெரிய முட்டைக்கோஸ் போன்ற தோற்றத்தில் காணப்படும். ஒரு பூ மொட்டு நிலையில் இருந்து முழு வளர்ச்சி அடைந்து மலர்வதற்கு சுமார் ஒரு மாதம் ஆகும். சரி... மலர்ந்தவுடன் நல்ல மணம் வீசும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்! ஏனெனில், இது மலர்ந்ததும் துர்நாற்றம் வீசும். யாரும் இதை ஒரு மலர் என்றே நினைக்க மாட்டார்கள். மலர்ந்து ஒன்றிரண்டு நாட்கள் ஆனபின் வாடிவிடும். அதோடு மலர் காலி.1918ம் ஆண்டு ஸ்டாம் போர்ட் ராபளீஸ் மற்றும் ஆர்னால்டு என்ற இரு ஐரோப்பியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சுமாத்தி ராவுக்கு வந்தனர். அப்படி வந்த இவர்கள், ஆய்வில் ஈடுபட்ட போதுதான் இந்த பிரமாண்ட மலரைக் கண்டனர்.

ராப்ளீஸும், ஆர்னால்டும் சேர்ந்து கண்டதால் அவர்களின் பெயரைக் கொண்டே ‘‘ராப்ளீஸியா ஆர்னால்டு’’ என்று இதற்கு பெயர் சூட்டி னார்கள்.
இந்தச் செடி ஒட்டுயிர் வகையைச் சேர்ந்தது. எனவே மற்ற தாவரங்களின் தண்டுகளிலும் வேர்களிலும் ஒட்டிக்கொண்டு வளர்கின்றது. இதற் கென்று தனியாக இலையோ தண்டோ கிடையாது. மற்ற செடிகளைப் போல இதனால் பூமியில் இருந்து தண்ணீர் மற்றும் உப்புச் சத்தைக் கிரகிக்கவும் முடியாது. இதேபோன்று கிழக்காசி யாவில் ‘‘ஸ்டிங்கிங் கார்ப்ஸ் விலி’’ என்று மற்றொரு பெரிய மலரும் இருக்கிறது. இதுவும் பெரிய மலர்தான். இதிலும் துர்நாற்றம் வீசும். ஆனால், இது ராப்ளீஸியா ஆர்னால்டு மலர் அளவுக்கு பிரமாண்டம் இல்லை! 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

இலங்கையை ஆதரித்த நாடுகள் திடீர் விலகல்: மன்மோகன்சிங் அறிவிப்பால் ராஜபக்சேவுக்கு நெருக்கடி 

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெறுகிறது. இதில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான வரைவு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு 23 அல்லது 24-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல மாதங்களாக பல்வேறு நாடுகளுக்கு தனது பிரதிநிதிகளை அனுப்பி ஆதரவு திரட்டியது. அந்த நாடுகளும் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதாக உறுதி அளித்து இருந்தன. 

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் அறிவித்து உள்ளார். இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. என்றாலும் டெல்லி மேல்-சபையிலும், ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். 

ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவு கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்த பல நாடுகள், அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக அந்த முடிவில் இருந்து பின்வாக்கத் தொடங்கி விட்டன. 

குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் பெரும்பாலானவை இலங்கைக்கு எதிரான முடிவை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன. இந்தியாவின் அணுகு முறையை கவனித்து, ஓட்டெடுப்பின்போது முடிவை தீர்மானிக்கலாம் என்று பல நாடுகள் திட்டமிட்டு இருந்தன. அந்த நாடுகள் ஆதரவையும் இப்போது இலங்கை இழக்கும் நிலை உருவாகி இருக்கிறது என்று ஜெனீவாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்து விடலாம் என்ற ராஜபக்சேயின் இறுதி கட்ட முயற்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இலங்கை அரசு பெரும் கவலை அடைந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 47 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் 46 நாடுகள் வாக்களிக்கலாம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே 22 நாடுகள் அறிவித்து விட்டன. 

இப்போது இந்தியாவும் ஆதரிப்பதால் ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 23 ஆகி சம நிலையில் உள்ளது. மேலும் பல நாடுகள் ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் தீர்மானம் வெற்றி பெறும் நிலை உருவாகி இருக்கிறது.
 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


அமெரிக்கா விசா பெறுவதற்கு இனி நேர்காணல் கிடையாது 
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் சிலர் அந்நாட்டு விசா எடுத்து அங்கு பணி செய்தோ அல்லது வசிக்கவோ செய்கின்றனர். அவர்கள் தங்களின் விசா முடிவுறும் காலத்தைப் பொறுத்து புதுப்பித்து வருகின்றனர்.
 
அதன்படி, பி1, பி2, சி மற்றும் டி பிரிவு விசாவில் சென்றுள்ளவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது விசாவினை புதுப்பித்து வருகின்றனர். அவர்கள் விசாவை புதுப்பிக்கும்போது நேர்காணல் இருக்கும். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே விசா புதுப்பிக்கப்படும்.
 
ஆனால் இந்த முறை தற்போது மாற்றப்பட்டுள்ளதாக துணைத்தூதரக விவகாரங்கள் துறையின் உதவி செயலாளர் ஜானிஸ் ஜேக்கப் கூறியுள்ளார். மேலும், இந்த புதிய முறை வர்த்தகர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு பொருந்தும்.
 
இந்த புதிய முறை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. ஆனால் பாதுகாப்பு கருதி இவர்கள் எப்போது வேண்டுமானாலும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் கூறினார்.
நன்றி 
தினகரன். 

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

               
                            சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 94,977 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ‌திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 26,220 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் 20,678 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் 12,144 வாக்குகளும் பெற்றுள்ளனர். 
                           வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற வந்தபோது அவருடன் பலர் முண்டியடித்து வந்ததன் விளைவாக அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் மற்றும் வெற்றி சான்றிதழ் பெறும்போது, வேட்பாளருடன் 4 பேர் இருக்க அனுமதி என்பது தேர்தல் விதி. முத்துச்செல்வி, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, தேர்தல் விதியின்படி, 4 பேர் மட்டுமே வந்தனர். ஆனால் இன்று அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற வந்தபோது, 10க்கும் மேற்பட்டவர்கள் முத்துச்செல்வியுடன் வந்தனர். அவர் போட்டோவிற்கு போஸ் கொடுக்க தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டதன் விளைவாக அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 

கடந்த 5 ஆண்டுகளில் உலக அளவில் அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில் ஆசியா முதலிடம் பிடித்தது. ஆசியாவில் இந்தியா முதலிடம் பிடித்தது. 
தற்போது ஒவ்வொரு நாடும் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அதிக அளவில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள், நவீன போர்க் கருவிகள், விமானங்களை வாங்கி குவித்து வருகின்றன. அந்த வகையில் அதிக ஆயுதங்கள் வாங்கிய நாடுகளை ஸ்டாக்கோல்ம் சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனம் (எஸ்ஐபிஆர்ஐ) பட்டியலிட்டுள்ளது. 

அதன் விவரம்: கடந்த 2002,06ம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2007,11ம் ஆண்டுகளில் உலக அளவில் பரிமாறப்பட்ட ஆயுதங்கள் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்தது. அதில் ஆசிய பிராந்தியங்களின் இறக்குமதி மட்டும் 44 சதவீதம். ஐரோப்பா (19%), மத்திய கிழக்கு நாடுகள் (17%), வட, தென் அமெரிக்கா (11%), ஆப்ரிக்கா (9%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

2007,11ல் ஆசியாவின் மொத்த ஆயுத இறக்குமதியில் 10 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென்கொரியா (6%), சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 5 சதவீதம், சிங்கப்பூர் (4%) அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. மேலும், மொத்த சர்வதேச ஆயுத இறக்குமதியில் இந்த 5 நாடுகளின் பங்கு 30 சதவீதம். 2002,06 காலத்துடன் ஒப்பிடுகையில், 2007,11ல் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 38 சதவீதம் அதிகரித்தது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் தமிழகம் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்த கரையில் நேற்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது 43 பெண்கள் உள்பட 178 பேரை போலீசார் கைது செய்து பாளை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வந்தனர். 

போலீசாரால் அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. ஆனால் தங்களை கைது செய்ததை கண்டித்து அவர்கள் சாப்பிட மறுத்துவிட்டனர். இன்று காலை அவர்கள் நாம்தமிழர் இயக்கத்தை சேர்ந்த வக்கீல் சிவகுமார் அளித்த உணவை சாப்பிட்டனர். பின்னர் அவர்களை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக வேன்களில் கொண்டு சென்றனர். மதியம் அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூடங்குளம் போராட்டக்காரர்களை அடைப்பதற்காக திருச்சி மத்திய சிறையில் உள்ள கேம்ப் சிறை வளாகத்தை சிறை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். 
இங்கு 4 ஆயிரம் பேர் வரை அடைக்கப்பட்டது உண்டு. இந்த கேம்ப் சிறை வளாகத்துக்கென கழிவறை வசதிகள் உள்ளன. தேவைப்படும்போது சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வசதி செய்யப்படும். அதன்படி தற்போது இந்த கேம்ப் சிறை வளாகத்தில் சின்டெக்ஸ் டேங்கு கள் அமைக்கப்பட்டு வருகிறது. 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கே முழுவதும் வழங்கவேண்டும்: 
தஞ்சையில் தா.பாண்டியன் பேட்டி 
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுவதுமாக தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என்று தா.பாண்டியன் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை வரவேற்கிறோம். அறிவித்து உள்ள ரூ.500 கோடி திட்டத்தினை பட்ஜெட் அறிவிப்பிலேயே சேர்க்க வேண்டும். போராட்டக் குழுவினரையும் அழைத்து பேசவேண்டும்.
 
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழ் நாட்டில் நிலவும் மின் தட்டுபாடு தீரும் வகையில் முழுவதும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இதனை வலியுறுத்தும்.
 
அணு மின் நிலையத்தை எதிர்த்து போராடும் குழுவினர் மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளுடன் கலந்து பேசி பாதுக்காப்புக்கும், வளர்ச்சிக்கும் ஏற்ற கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.
 
தமிழ்நாட்டில் பிற பகுதி நலனை மறந்து கூடங்குளத்தில் வசிப்போர் தடுக்கும் நிலையில் ஈடுபட வேண்டாம். மத்திய அரசு வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பித்த மறுநாளே மத்திய ரெயில்வே அமைச்சர் மாற்றப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
இது மத்திய அரசு கட்டுப்பாட்டை இழந்து இருப்பதை காட்டுகிறது. வரிக்கொள்கையை பொறுத்தவரை இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ரூ.30 ஆயிரம் கோடி திரட்ட இருப்பதை கைவிட வேண்டும். மறைமுகவரியாக ரூ.48 ஆயிரம் கோடி விதித்து இருப்பதும், மானியத்தை குறைப்பதும் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.ரூ.ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கி இருப்பது உத வாத செயலாகும்.
 
125 போர் விமானங்கள் வாங்க இருப்பது அரசின் அகம் பாவத்தினை காட்டுகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயத்துறை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது கண்டனத்திற்குரியது.
 
மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரங்களில் தேவையற்ற நிலையில் நுழைந்து இந்தியாவின் ஒருமைப்பாட்டை நிலையை சீரழித்து வருகிறது. இது குறித்து பாட்னாவில் நடைபெற உள்ள அகில இந்திய இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் விவாதிக்க உள்ளோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 

பட்டுக்கோட்டை- தஞ்சை-அரியலூர் அகல ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்பது பட்டுக்கோட்டை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். படிப்பு, வேலை மற்றும் பல்வேறு முக்கிய பணிகளுக்காக இந்த பகுதி மக்கள் தஞ்சை செல்ல வேண்டிய சூழ்நிலையே இன்னும் நிலவி வருகிறது. எனவே இந்த ரெயில்பாதை பணியை உடனே தொடங்க வேண்டும் என்று பல வருடங்களாக போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த பணிக்காக 1934ல் நிலம் கையப்படுத்தப்பட்டது. பிறகு 2000-ம் ஆண்டில் அகல ரெயில்பாதை அமைக்க மறுசர்வே செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை ரெயில் பாதை அகைக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் அனைத்து கட்சியினர், அனைத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்துக்கு கம்யூனிஸ்டு தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டாக்டர் செல்லப்பன், நகர செயலாளர் சுகுமார், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் மணிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வக்கீல் காமராஜ் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த போராட்டத்துக்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக இருசக்கர வானங்களில் தஞ்சைக்கு ஊர்வலமாக சென்று கலெக்டரிம் மனு கொடுப்பது போன்ற தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று போராட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


 மூளையில் பதிவாகி வாட்டி வதைக்கும் சோகங்களை ரப்பர் வைத்து அழிப்பது போல அழிக்க வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பழங்கால நினைவுகளை அசைபோட்டு பார்ப்பது சுகம்தான். ஆனால், சிலருக்கு அது சுமையாக அமைந்து விடுகிறது. கணவன், மனைவி அல்லது குடும்ப உறுப்பினர்களின் திடீர் மறைவு, காதல் ஏமாற்றம், தொழில் நஷ்டம், சொத்துகளை இழத்தல் போன்றவற்றை மறக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது தீராத மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் கனடாவின் மெக்கில் பல்கலையின் நரம்பியல் நிபுணர் டெரன்ஸ் காடர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் தெரியவந்தது பற்றி அவர் கூறியதாவது:

தசை பாதிப்பு, விபத்து போன்றவற்றால் சிலர் கையை இழக்கின்றனர். ஆனால், கையை இழந்த பிறகுகூட சில வேளைகளில் அவர்கள் கை வலிப்பதாக உணர்கின்றனர். கை இருந்தபோது ஏற்பட்ட வலியின் தாக்கம் இது. பிளாஷ்பேக் தகவலை மூளை அசை போடுவதால்தான், இல்லாத கைகூட அவர்களுக்கு வலிக்கிறது. இது மட்டுமின்றி, கடந்த கால சம்பவங்கள் சிலருக்கு நிரந்தர சோகத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதுவும் முந்தைய ரகத்தை சேர்ந்ததுதான்.
புதிதாக ஒரு வலி ஏற்படும்போதோ, சோக நினைவுகளில் மூழ்கும்போதோ மத்திய நரம்பு மண்டலத்தில் பிகேஎம் ஸீட்டா என்ற புரோட்டீன் என்சைம் அளவு அதிகரிக்கிறது. 

இதனால் நியூரான்கள் இடையே தகவல்கள் சிறப்பாக பரிமாறப்படுகின்றன. எப்போதோ வலி, சோகம் ஏற்பட்டது பற்றிய தகவல்களை மூளை அலசுகிறது. புதிய வலி, சோகத்துடன் பழைய சோகமும் சேர்ந்துகொள்கிறது. நரம்பு மண்டலத்தில் இந்த என்சைம் அளவை குறைத்தால், அதாவது, என்சைமை ரப்பர் வைத்து அழிப்பது போல அழித்தால் பழைய சோகங்கள், வலிகள் தாக்காது. நீண்ட கால சோகம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க இது நல்ல மருத்துவ முறையாக பயன்படும். இவ்வாறு காடர் கூறினார். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பாகிஸ்தான் பார்லிமென்ட் நாளை கூடுகிறது. இரு அவை கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உரை நிகழ்த்துகிறார். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு மே 2ம் தேதி எந்த தகவலும் தெரிவிக்காமல் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபோதாபாத் நகரில் திடீர் தாக்குதல் நடத்தி அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். தொடர்ந்து ஆளில்லா சிறிய ரக விமானம் டிரோன்கள் மூலம் திடீர் திடீரென அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. 

இதில் தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டாலும் அப்பாவி பொதுமக்கள், பாகிஸ்தான் வீரர்களும் பலியாயினர். அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அமெரிக்க படைகளை வெளியேற்ற உத்தரவிட்டது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் நாளை பாக். பார்லிமென்ட் கூட்டு கூட்டத்துக்கு, அதிபர் சர்தாரி உத்தரவிட்டுள்ளார். இதில் அவர் உரை நிகழ்த்துகிறார். அப்போது அமெரிக்க உறவு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற்பகல் 12.35 மணியளவில் தொடங்கி 1.30 வரை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூடங்குளம் தொடர்பாக அமைச்சர்களிடம் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அணுமின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்காது : ஜெ

அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக வல்லுநர் குழு அறிக்கை குறித்தும், போராட்டக்குழு அறிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து, 'கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு இருக்காது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி
தினகரன்

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati