நடுவானில் விமானத்தில் பாம்பு


மெல்பர்ன் : ஆஸ்திரேலியாவில் சரக்கு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறைக்குள் திடீரென பாம்பு வந்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் பிரன்டீர் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று டார்வின் நகரிலிருந்து நேற்று புறப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானி அறைக்குள் திடீரென பாம்பு வந்ததை விமானி பிரடென் பிளென்னர்ஹசெட் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அவர்களின் அறிவுரையை ஏற்று, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

லண்டன் : இங்கிலாந்தில் உயர் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு வேலை செய்வதற்கு தரப்படும் விசாவை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. மேல்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல நினைப்பவர்களுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் உயர்படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், படிப்புக்கு பின் பணி என்ற திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு வேலை செய்யும் வகையில் விசா வழங்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அல்லாத மற்ற அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இது பொருந்தும். 

படிப்பை முடித்தவுடன் 2 ஆண்டுகளுக்கு வேலை உறுதி என்பதால், படிப்பு செலவை நிச்சயம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இந்திய மாணவர்கள் செலவைப் பற்றி கவலைப்படாமல் இங்கிலாந்து சென்றனர். அத்துடன் அனுபவம் கிடைப்பதால் இந்தியாவிலோ, வேறு நாடுகளிலோ நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. 

இந்நிலையில், இதுபோன்ற விசாவை இன்று முதல் ரத்து செய்வதாக அந்நாட்டு உள்துறை அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. இப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், தேர்தல் பிரசாரத்தின் போது வெளிநாட்டினர் வருகையை கட்டுப்படுத்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
இதனால் இந்த ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்களும் வேறு வழியில் விசா பெற்றால் மட்டுமே தொடர்ந்து இங்கிலாந்தில் பணியாற்ற முடியும். 

இல்லாவிட்டால் தாயகம் திரும்ப வேண்டியதுதான். இது இந்திய மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் அரசின் இந்த முடிவால் வெளிநாட்டு மாணவர்கள் வருகை கடுமையாக பாதிக்கும் என பல்கலைக்கழகங்களும், பிரிட்டிஷ் கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


கொல்கத்தா : ஐபிஎல் 5வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் சென்னை அணியை மும்பை அணி வென்றது. 2வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி & கொல்கத்தா அணிகள் இடையே நேற்றிரவு நடந்தது. முன்னதாக மழையால் ஆட்டம் தாமதமானது. மழை நின்றதும் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாசில் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் அடுத்தடுத்து 3 விக்கெட் இழந்து 20 ரன்களே எடுத்தனர். 

பிறகு 54 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த அந்த அணி 12 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. அதிகபட்சமாக லஷ்மி சுக்லா 26 ரன் எடுத்தார். 98 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் சேவக், ஆரோன் பின்ச் ஜோடி 49 ரன் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தது.

பின்ச் 30 ரன்னில் ஆட்டமிழக்க, இர்பான் பதான் வந்து அதிரடியை தொடங்கினார். சேவக் 20 ரன்னில் பெவிலியன் திரும்ப, பதானுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். பதான் பவுலர்களை பந்தாட 20 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 42 ரன் குவித்தார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்க டெல்லி அணி 100 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற் றது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ரஷ்ய பயணிகள் விமானம் இயந்திர கோளாறால் அவசரமாக தரையிறங்க முயன்றபோது, தரையில் மோதி இரண்டாக உடைந்து நொறுங்கியது. இதில் 31 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ரஷ்யாவின் ஏடிஆர்.72 என்ற பயணிகள் விமானம், நேற்று காலை சைபீரியாவின் டியுமென் விமான நிலையத்தில் இருந்து சர்கெட் நகருக்கு புறப்பட்டது. அதில் 2 பைலட்கள், ஊழியர்கள் மற்றும் பயணிகள் என மொத்தம் 43 பேர் இருந்தனர். 30 கி.மீ. தூரத்தில் நடுவானில் பறந்தபோது திடீரென தரையை நோக்கி பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தரையில் மோதி தீப்பிடித்து 2 துண்டாக நொறுங்கியது. 

விமான விபத்தை நேரில் பார்த்தவர்கள் சைபீரிய எமர்ஜென்சி அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 12 பேரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். விபத்தில் பலியான 31 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் இரினா ஆண்டிரிநோவா கூறுகையில், ''விபத்தில் பலியான 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்க பைலட் முயன்றபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. பைலட்களின் தவறாகவும் இருக்கலாம். பைலட் அறையின் தகவல் பரிமாற்றங்களை பதிவு செய்யும் கருப்பு பெட்டி கிடைத்துள்ளது. அதை ஆராய்ந்த பிறகே காரணம் தெரிய வரும்'' என்றார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 
பால் மண்டலத்தில் பூமியைப் போல மிதமான வெப்பநிலையுடன் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக வானவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, பிரான்சின் கிரனோபில் நகரில் உள்ள கிரகங்கள் மற்றும் வானியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவியர் போன்பில்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: பால் மண்டலத்தில் சுமார் 16,000 கோடி கிரகங்கள் (ரெட் ட்வார்ப்) உள்ளன. இதில் 40 சதவீதம் பூமியைப் போலவே (சூப்பர் எர்த்) உள்ளன. 

அவற்றின் மேற்பரப்பு தண்ணீர் ஓடுவதற்கேற்ப உள்ளதுடன், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற மிதமான வெப்பநிலையும் உள்ளன. இவை ஒவ்வொ ன்றும் பூமியைப் போல 1 முதல் 10 மடங்கு பெரியதாக உள்ளன. எனினும், நட்சத்திரங்களின் அளவோடு ஒப்பிடும்போது 80 சதவீதம் மட்டுமே இருக்கும். இவை சூரியனோடு ஒப்பிடும்போது, மங்கலாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளன. ஜூபிடர் மற்றும் சனி கிரகங்களைப் போல மிகமிக தொலைவில் இவை அமைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 5வது சீசன் தொடக்க விழா சென்னையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி, பிரபுதேவா, சல்மான் கான், கரீனா கபூர் உட்பட பிரபலங்கள் பங்கேற்றனர். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து கிரிக்கெட்டின் புதிய பரிமாணமாக 20 ஓவர் போட்டிகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், கடந்த 2008ல் தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமியர் லீக் டி20 போட்டித் தொடர் வெற்றிகரமாக 5வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

அணிகளின் உரிமம், வீரர்களுக்கான ஒப்பந்தம் எல்லாமே சர்வசாதாரணமாக கோடிகளில் புழங்கும் ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர்களுடன் வெளிநாடுகளை சேர்ந்த பிரபல வீரர்களும் இணைந்து விளையாடுகின்றனர். கடந்த ஆண்டு விளையாடிய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், இம்முறை 9 அணிகள் மட்டுமே களமிறங்குகின்றன. மொத்தம் 54 நாட்களில் 76 போட்டிகள் நாடு முழுவதும் 12 மைதானங்களில் நடைபெற உள்ளன.

முதலாவது சீசனில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்து 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த 2வது சீசனில் கில்கிறிஸ்ட் தலைமையிலான ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 2010 மற்றும் 2011ல் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் கோப்பையை வென்றுள்ளன.

இந்த ஆண்டும் சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், 5வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் சென்னை . மும்பை அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டி உட்பட சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 8 லீக் ஆட்டங்களும் ஒரு பிளே ஆப் மற்றும் பைனல் என மொத்தம் 10 ஆட்டங்கள்  நடைபெற உள்ளன. மே 27ம் தேதி இறுதிப் போட்டி நடக்க உள்ளது.

இந்த நிலையில், 5வது சீசனுக்கான வண்ணமயமான தொடக்க விழா சென்னையில் இன்று தொடங்கியது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த விழாவில் டோனி, ஹர்பஜன், டிராவிட், கங்குலி உட்பட 9 அணிகளின் கேப்டன்களும் உறுதிமொழி ஏற்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி இந்தியாவில் முதல் முறையாக இசை மழை பொழிகிறார்.

பிரபுதேவா, கரீனா கபூர் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். சல்மான் கான், பிரியங்கா சோப்ரா என நட்சத்திர பட்டாளமே அணிவகுப்பதால், தொடக்க விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பலத்த பாதுகாப்பு: ஐபிஎல் சீசன் 5 தொடக்க விழாவுக்காக பிரபல வீரர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் சென்னையில் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் தொடக்க விழா இரவு 7.30க்கு தொடங்குகிறது.
* தொடக்க விழா சோனி செட் மேக்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
* சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி, 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7.5 கோடி பரிசு காத்திருக்கிறது. மூன்றாவது மற்றும் 4வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3.75 கோடி கிடைக்கும்.
* நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாழ்த்தி ‘வா மச்சான் வா’ என்ற பாடலை சென்னை ரைனோஸ் அணி கேப்டன் விஷால் (செலிப்ரிடி லீக் கிரிக்கெட்) சென்னையில் நேற்று வெளியிட்டார்.
* ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், எஸ்36 என்ற அவரது இசைக் குழுவினருடன் இணைந்து ஏப்.6ம் தேதி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இசை மழை பொழிய உள்ளார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ரஷியாவில் விமானம் வெடித்து 29 பேர் பலி
ரஷ்ய நாட்டில் உள்ள ரோஷினா விமான நிலையத்தில் இருந்து ஒரு பயணிகள் விமானம் சர்கட் என்ற இடத்துக்கு புறப்பட்டு சென்றது. 2 என்ஜின்கள் கொண்ட ஏ.டி.ஆ.-72 என்ற அந்த விமானத்தில் மொத்தம் 43 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 39 பேர் பயணிகள். 4 பேர் விமான ஊழியர்கள்.
 
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடுவானில் விமானம் வெடித்து சிதறியது. இதனால் பயங்கர சத்தத்துடன் நெருப்பு பந்து போல விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 29 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
 
பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் தவிர 12 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் டியூமனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தகவலை ரஷிய அவசர கால பிரிவு அமைச்சகம் தெரிவித்துள்து. மேலும் விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


பட்டுக்கோட்டை - தஞ்சை இடையே ரெயில் திட்டத்தை தொடங்க வேண்டும்: டி.ஆர்.பாலுவிடம் வர்த்தகர்கள் மனு
பட்டுக்கோட்டை - தஞ்சை வழியே புதிய வழித்தடம் அமைக்க, 1932 ஆம் ஆண்டிலேயே சர்வே செய்யப்பட்ட வழித்தடத்தில் விரைந்து பணியினை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வர்த்தக சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,
ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள், ஜீனியர் சேம்பர் ஆப் காமர்ஸ்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், அகில இந்திய மருத்துவ சங்கம் மற்றம் நகர வர்த்தகர்கள் சார்பில் மத்திய ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.
பட்டுக்கோட்டை - தஞ்சை வழித்தடம் 1932ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்திலேயே திட்டமிடப்பட்டு 1949 ம் ஆண்டு ரயில்வே நிர்வாகத்தினால் ஏற்றுகொள்ளப்பட்டு 1997 -- 98ம் ஆண்டில் 100.77 கோடி மதிப்பில் திட்டமதிப்பிடப்பட்டது. 
பட்டுக்கோட்டையிலிருந்து தினசரி 5நிமிட இடைவெளியில் தஞ்சை செல்லும் பேருந்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் செல்கின்றனர். பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை மற்றும் பிற நகர்பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் டன்னுக்கு குறையாமல் நெல், உப்பு. தேங்காய், உலர்கருவாடு மற்றும் விவசாய பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் சாலைவழியே கொண்டு செல்லப்படுகின்றன.
பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர். பேராவூரணி போன்ற பகுதிகளுக்கு சில்லரை சரக்குகள் மற்றும் ஜவுளிகள் ஏற்றிவரும் வாகனங்கள் அனைத்தும் சாலையையே பயண்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துக்களும் நடக்கின்றன. பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாமல் மேல் சிகிச்சைக்காக தஞ்சை செல்லும் நோயாளிகள் போக்குவரத்து நெரிசலாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போல பஸ், பாஸ் வைத்துள்ள மாணவ மாணவியர்கள் தனியார் பேருந்தில் செல்லமுடியாமல் சிரமமப்படுகின்றனர். மேலும் இவர்கள் கல்லூரிக்கு செல்ல பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடியே செல்வதால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும் இருக்கிறது.   பேருந்து கட்டணங்கள் அதிகளவில் இருப்பதால் ஏழை எளியவர்கள் சிரமப்படுகிறார்கள்.
பட்டுக்கோட்டை - தஞ்சை வழித்தடத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை,ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் திருவையாறு என ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கி வருவதால் வர்த்தக நோக்கத்திலும் இத்திட்டம் வெற்றிகரமானதாக அமையும்.
தஞ்சை மாவட்டத்தின் வருவாய் நிர்வாக பகுதிகள் தஞ்சை - பட்டுக்கோட்டை பகுதியில் அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக மாவட்ட தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்து போக வேண்டிய அவசியமும் இருப்பதால்
பட்டுக்கோட்டை - தஞ்சை ரயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்கிட இந்த பகுதி மக்களின் 80 ஆண்டுகால கணவு திட்டமான இந்த திட்டத்தை நிறைவேற்றி தரும்படி கோரிக்கை மனுவினை கொடுத்து அவர் நெடுஞ்சாலை துறையில் செய்த சாதனையால் பொதுமக்கள் பெரும் நன்மை அடைந்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.
இதில் பட்டுக்கோட்டை - தஞ்சை போராட்ட குழு தலைவர் கந்த கல்யாணம், இமானுவேல்ராஜ் உள்ளிட்டவர்கள் மன்னார்குடிக்கு வந்த டி.ஆர் பாலுவிடம் நேரில் சென்று கொடுத்தனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ஐபிஎல் 20-20 ஐந்தாவது சீசன் போட்டி தொடக்க விழா, சென்னையில் நாளை மாலை கோலாகலமாக நடக்கிறது. இதில் அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, நடிகர் அமிதாப்பச்சன் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20-20 போட்டிகள், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 4 சீசன் போட்டிகள் நடந்துள்ளன. இதைத் தொடர்ந்து 5-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மறுநாள் (4-ம் தேதி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
5-வது சீசனை பிரமாண்ட துவக்க விழாவுடன் நடத்த ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை வண்ணமயமான துவக்க விழா நடக்கிறது. பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி கலந்து கொண்டு உற்சாகத்தோடு பாடுகிறார். நடிகர் அமிதாப்பச்சன், நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், பிரபுதேவா ஆகியோரது நடனங்களும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. தொடக்க விழாவை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
தொடக்க விழா நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களும் வைக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர்.

நாளை மறுநாள் தொடங்கி 51 நாட்களுக்கு இந்த திருவிழா நடக்கிறது. மொத்தம் 76 ஆட்டங்கள் நடக்க உள்ளன. நடப்பு சாம்பியன் சென்னை, மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூர், புனே, ஐதராபாத், டெல்லி ஆகிய 9 அணிகள் கலந்து கொள்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 9 ஆட்டங்கள் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 லீக் ஆட்டங்களில் இங்கு மோதுகிறது. இதுதவிர 1 பிளேஆப் சுற்று ஆட்டமும் இறுதிப்போட்டியும் இங்கு நடக்கிறது. இதுதவிர மும்பை, டெல்லி, ஐதராபாத், ஜெய்ப்பூர், தர்மசாலா, புனே, விசாகப்பட்டினம், மொகாலி, கட்டாக் ஆகிய நகரங்களிலும் போட்டி நடக்கிறது. நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் துவக்க ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன.

இறுதிப்போட்டி மே 27-ம் தேதி நடக்கிறது. புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 3 ஆட்டங்கள் நடக்கிறது. முதல் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். இது எலிமினேட்டர் சுற்றாக கருதப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த சீசனில் பல்வேறு முன்னணி அணியில் ஆடிய நட்சத்திர வீரர்கள் வேறு அணிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் சர்வதேச போட்டிகளில் ஆடி வருவதால் அந்த அணியை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் இணைய உள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

புதுக்கோட்டை எம்.எல்.ஏ விபத்தில் பலி

அன்னவாசல் அருகே இன்று காலை ரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முத்துக்குமரன் பலியானார். கட்சிப் பிரமுகருக்கு அஞ்சலி செலுத்த சென்றவருக்கு இந்த சோகம் நேர்ந்தது.

கடந்த சட்டசபை தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.பி.முத்துக்குமரன் (43). இவரது சொந்த ஊர் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார்.

புதுக்கோட்டை அருகே உள்ள அன்னவாசலை சேர்ந்த கட்சி பிரமுகர் பழனிச்சாமி என்பவர் நேற்று இறந்துவிட்டார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 9.30 மணிக்கு முத்துக்குமரன் காரில் புறப்பட்டார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் முருகானந்தம் சென்றார். எம்எல்ஏவின் டிரைவர் சண்முகம் இன்று பணிக்கு வரவில்லை. அதனால், வேறு டிரைவரை ஏற்பாடு செய்திருந்தார். புது டிரைவர் மணிகண்டன் (31) காரை ஓட்டிச் சென்றார்.

இலுப்பூர் அருகே சொக்கநாதன்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, கார் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த எம்எல்ஏ முத்துக்குமரன், உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார். முருகானந்தமும் டிரைவரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான முத்துக்குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்த தகவல் பரவியதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த முத்துக்குமரன், பி.காம் பட்டதாரி. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர் புதுக்கோட்டை பெரியண்ணன் அரசுவை எதிர்த்து போட்டியிட்டார். இவரது மனைவி சுசீலா, விழுப்புரம் கோர்ட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


சென்னையில் 2 பேருக்கு பன்றிக் காயச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வடமாநிலங்களுக்கு சென்று வருபவர்கள் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்று பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வாரம் வேலை நிமித்தமாக டெல்லி சென்றார். பிறகு சென்னை வந்த அவருக்கு 100 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல், உடல்வலி, தும்மல் போன்றவை ஏற்பட்டன. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. இதையடுத்து, கிருஷ்ணனின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், இவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி தங்கராஜன் தலைமையிலான குழுவினர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 2 பேரின் வீடுகளுக்கு சென்று டாமி புளு மாத்திரைகளை கொடுத்தனர். கிருஷ்ணனுக்கு பன்றிக் காய்ச்சலில் பாதிப்பு குறைவாக இருப்பதால், அவரை ஒரு வாரத்துக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினர்.
அறிகுறிகள் இருந்தால் உஷார்

அதிக காய்ச்சல், சளி தொந்தரவு, உடல் வலி, தலை வலி, தொடர்ந்து தும்மல், தொண்டை வறண்டு போதல், வயிற்று போக்கு, வாந்தி, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் முன்னெச்சரிக்கையாக பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொது சுகாதார துறை தகவல்
இதேபோல் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி தங்கராஜன் தலைமையிலான குழுவினர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 2 பேரின் வீடுகளுக்கு சென்று டாமி புளு மாத்திரைகளை கொடுத்தனர். கிருஷ்ணனுக்கு பன்றிக் காய்ச்சலில் பாதிப்பு குறைவாக இருப்பதால், அவரை ஒரு வாரத்துக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினர்.ரவிக்கு பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தனியார் மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 2 பேருடைய உறவினர்கள், பெற்றோர், குழந்தைகள், அக்கம் பக்கத்தினருடைய சளி, ரத்த மாதிரிகள் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொது சுகாதார துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பன்றிக்காயச்சல் முழுமையாக கட்டுப்பட்டுள்ளது. வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களால்தான் இந்த காய்ச்சல் பரவுகிறது. எனவே, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சென்று வருபவர்கள் கட்டாயமாக மருத்துவமனைகளில் பரிசோதித்து கொள்ள வேண்டும். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 11 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் பரவுவது அதிகமாக இருந்தால் அதனை தடுப்பதற்கு தனியாக சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


 ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்காவின் மிரட்டலை சீனா நிராகரித்து விட்டது. மற்றநாடுகள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியுள்ளது. இதனிடையே, ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப்போவதாக தென் கொரியா அறிவித்துள்ளது. 

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இந்த நோய்க்கான நவீன சிகிச்சைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், புற்றுநோய்க்கு எதிரான இந்த மருத்துவ முயற்சிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினைதான். அது, புற்றுநோய் உயிரணுக்கள் அழிக்கப்படும்போது பாதிப்புக்குள்ளாகி இறந்துபோகும் ஆரோக்கியமான உயிரணுக்களால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள்! புற்றுநோய் சிகிச்சையில் உள்ள இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வை சொல்ல வந்திருக்கிறது புற்றணுக்களை தேடிக் கொல்லும் திறனுள்ள டி.என்.ஏ. நானோ ரோபோ! `டி.என்.ஏ. ஓரிகேமி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நானோ ரோபோவை உருவாக்கியிருப்பவர் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஷான் டக்ளஸ். 
 ரோபோ தெரியும், அதென்ன டி.என்.ஏ. நானோ ரோபோ? 
 மனித மரபணுக்கள் டி.என்.ஏ. எனும் மூலக்கூறுகளால் ஆனவை. டி.என்.ஏ.வால் ஆன, நானோ அளவுடைய ரோபோ டி.என்.ஏ. நானோ ரோபோ எனப்படுகிறது. டி.என்.ஏ.வை பல வடிவங்களில் உருவாக்கும் திறனுள்ள தொழில்நுட்பம்தான் டி.என்.ஏ. ஓரிகேமி! டி.என்.ஏ.வின் வேதியியல் கட்டமைப்பினை புரிந்துகொள்ளும் டி.என்.ஏ. மாடலிங் சாப்ட்வேரில், நமக்கு தேவையான ஒரு வடிவத்தை `க்ளிக் செய்தால், டி.என்.ஏ.வைக் கொண்டு அந்த வடிவத்தை அது உருவாக்கிவிடும். இந்த டி.என்.ஏ. ஓரிகேமி சாப்ட்வேரை பயன்படுத்தி சிப்பி வடிவத்தில் உள்ள ஒரு டி.என்.ஏ. நானோ ரோபோவை உருவாக்கினார் ஆய்வாளர் ஷான் டக்ளஸ். இதற்குள் புற்றுநோய் மருந்தை வைத்து, அதை நோயாளியின் உடலுக்குள் செலுத்தி புற்றணுக்களை அழிப்பதே டக்ளஸின் திட்டம். இந்த சிப்பி நானோ ரோபோக்கள், புற்றணுக்களை எதிர்கொள்ளும்போது மட்டும் தன்னுள் இருக்கும் மருந்தை வெளியேற்றி அவற்றைக் கொல்ல வேண்டும். அதற்காக சிப்பி நானோ ரோபோவுக்கு இரண்டு பூட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஜிப் போல திறந்து மூடிக்கொள்ளும் தன்மையுடைய இந்த பூட்டுகள் ஒவ்வொன்றும் `ஆப்டாமர் எனப்படும் டி.என்.ஏ. இழைகளாலானவை. இவை குறிப்பிட்ட ஒரு மூலக்கூற்றை எதிர்கொள்ளும்போது மட்டும் திறந்துகொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டவை. இந்த நானோ ரோபோக்களின் சிகிச்சை திறனை பரிசோதிக்க, ரத்த புற்றணுக்களான லியூக்கீமியா உயிரணுக்களின் மேற்புறத்தில் இருக்கும் மூலக்கூறுகளை எதிர்கொள்ளும்போது திறந்துகொண்டு மருந்தை வெளியேற்றும் வண்ணம் ஒரு சிப்பி நானோ ரோபோ வடிவமைக்கப்பட்டது. பின்னர் அந்த சிப்பிக்குள், உயிரணுக்களின் வளர்ச்சியை தடை செய்து அவற்றை கொல்லும் திறனுடைய ஒரு மருந்து வைக்கப்பட்டது. 
 இறுதியாக, மருந்து தாங்கிய சிப்பி நானோ ரோபோக்கள் ஆரோக்கியமான ரத்த அணுக்கள் மற்றும் ரத்த புற்றணுக்கள் கலந்த ஒரு உயிரணு கலவைக்குள் செலுத்தப்பட்டன. மூன்று நாட்கள் கழித்து, ரத்த புற்றணுக்களுள் பாதி அழிக்கப்பட்டன. ஆனால் ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களில் ஒன்றுகூட பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த சிப்பி நானோ ரோபோவுக்குள், புற்றணுக்களின் செயல்பாடுகளை தடை செய்யும் திறனுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை புகுத்தி உடலுக்குள் செலுத்தினால், லியூக்கீமியா உயிரணுக்களை ஒன்று விடாமல் மொத்தமாக அழித்துவிடலாமாம். இதன் மூலம் லியூக்கீமியா வகை ரத்த புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சையளிக்க முடியும் என்கிறார் டக்ளஸ். முக்கியமாக, சிப்பி நானோ ரோபோக் களின் ஆப்டாமர் பூட்டுகளை மாற்றுவதன் மூலம், உடலின் எந்த வகையான உயிரணுவையும் தாக்கி அழிக்க முடியும் என்கிறார் டக்ளஸ். இதுதான் மருத்துவ உலகின் தற்போதைய பரபரப்பான செய்தி. எந்தவித பாகுபாடுமின்றி வேகமாக வளரும் திறனுள்ள எல்லா உயிரணுக்களையும் கொன்றுவிடும் தன்மையுள்ளது கீமோதெரபி சிகிச்சை. கீமோதெரபியில் இருக்கும் இந்த முக்கியமான சிக்கலை, இரண்டு பூட்டுகளைக் கொண்ட சிப்பி நானோ ரோபோக்கள் தீர்த்து வைக்கும் என்றும் நம்பிக்கை அளிக்கிறார் டக்ளஸ்.அதாவது, சிப்பி நானோ ரோபோவுக்குள் இருக்கும் மருந்தை வெளியேற்ற அதன் இரண்டு பூட்டுகளை திறந்தாக வேண்டும். இந்த பூட்டுகளை திறக்க, சிப்பி நானோ ரோபோக்கள் சந்திக்கும் உயிரணுக்களின் மேற்புறத்தில் குறிப்பிட்ட சில மூலக்கூறுகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த மூலக்கூறுகள், புற்றணுக்களில் மட்டும்தான் இருக்கும். ஆக, சிப்பி நானோ ரோபோ சிகிச்சையில் புற்றணுக்கள் மட்டுமே கொல்லப்படும். எந்தவித பின்விளைவுகளும் இருக்காது! ஆமாம் என்று ஆமோதிக்கிறார் டென்மார்க்கிலுள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் யூர்கன் ஜெம்ஸ். மேலும், டி.என்.ஏ. ஓரிகேமி தொழில்நுட்பத்தின் மூலம் புத்திசாலியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்பது உண்மைதான். இதை டக்ளஸின் ஆய்வுக்குழு ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கது என்கிறார் ஜெம்ஸ். டி.என்.ஏ. ஓரிகேமி கொடுத்திருக்கும் இந்த டி.என்.ஏ. நானோ ரோபோ, புற்றுநோய் மருத்துவத்துக்கு கிடைத்த ஒரு மகத்தான பரிசு என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்கிறார்கள் பால் ராத்மண்ட் உள்ளிட்ட உலகின் பிற புற்றுநோய் ஆய்வாளர்கள். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati