சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இதில் முதல்வர் ஜெயலலிதா மீதும், அதிமுக மீதும் சரமாரியாக தாக்குதல் தொடுத்தார். பேட்டியில் தேமுதிகவின் அனைத்தும் எம்எல்ஏக்களும்
ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயார்.. அதே போல் அதிமுகவினர் ராஜினாமா செய்ய தயாரா என முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேரடி சவால் விடுத்தார்.
மேலும் தனது பேட்டியில் தேமுதிக தனித்துப் போட்டியிட ஒருபோதும் யாருக்கும் அஞ்சாது என்று விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'ஆளும் கட்சி மக்கள் பிரச்சனையை பேசவிடாமல் தடுப்பது, அவர்களது பயத்தை காட்டுகிறது. தேமுதிகவிற்கு இறங்குமுகம் தான் கூறிய ஜெயலலிதாவிற்கு தான் இனி இறங்குமுகம்' என்று விஜயகாந்த் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தன்னை பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது எனக் கூறிய முதல்வருக்கு, 'உங்களை பார்த்தால்(ஜெ) கூட தான் எனக்கு அருவருப்பாக இருக்கிறது' என காட்டமாக பேசினார்.***
என் கட்சிக்காரர்களை தலை குணிய விடமாட்டேன்:
தொடர்ந்து ஆவேசமாக பேசிய அவர் 'நான் தலை குணிந்தாலும் எனது கட்சிக்காரர்களையும், மக்களையும் தலை குணிய விடமாட்டேன்' என்று கூறினார். மேலும் அவர் 'பாராட்டுகளை தெரிவிக்க மட்டும் சபையில் நேரம் ஒதுக்கும் ஜெயலலிதா, மக்களின் பிரச்சனை பற்றி பேசுவதற்கு நேரம் ஒதுக்காதது ஏன்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 'தகுதியில்லாதவர்களுக்கு பதவி கிடைத்தால் இப்படி தான் நடந்து கொள்வார்கள் என என்னை பற்றி விமர்சித்த ஜெயலலிதாவிற்கு என்ன தகுதி இருக்கிறது' என்று ஆவேசமாக விஜயகாந்த் கூறினார்.***
மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்:
தேர்தல் வெற்றி என்பது மக்கள் கையில் தான் உள்ளதே தவிர, எந்த கட்சியும் முடிவு செய்ய முடியாது என்று கூறிய விஜயகாந்த், மக்கள் மனது வைத்தால் தான் பதவியும் அதிகாரமும் கிடைக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 6 மாத ஆட்சியிலே மக்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர் என்று கூறிய விஜயகாந்த், மக்களை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளார் ஜெ என்று கூறியுள்ளார். ***
'திருநெல்வேலிக்கே அல்வாவா... தேமுதிகவிற்கே சவாலா...:
ஜெயலலிதாவின் சவால் குறித்து செய்தியாளர்கள் விஜயகாந்திடம் கேட்ட போது 'திருநெல்வேலிக்கே அல்வாவா... திருப்பதிக்கே லட்டா.... தேமுதிகவிற்கு சவாலா...' என்று கூறினார். மேலும் என்னை மிரட்டி பணியவைக்கும் எண்ணம் ஜெயலலிதாவிற்கு இருந்தால், அது ஒருபோதும் நடக்காது என்று விஜயகாந்த் கூறினார். தொடர்ந்து கூட்டணி கட்சி தர்மம் பற்றி எல்லாம் ஜெயலலிதா பேசக்கூடாது என்று கூறினார்.***
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்:
தனியார் தொலைக்காட்சியில் நீங்கள் கை நீட்டியது போல் காட்சிகள் வருகிறது என்று விஜயகாந்திடம் செய்தியாளர் கேட்டதற்கு, முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொலைக்காட்சியில் நான் மட்டும் கை நீட்டி பேசியதாக ஒளிபரப்பட்டது. அதிமுகவினர் கூட தான் கை நீட்டி பேசினார்கள்.. அந்த காட்சிகளை அவரது(ஜெ) சொந்த தொலைக்காட்சி காட்டாதது ஏன், இனி இதுபோல் ஏமாற்ற வேலைகள் நடக்காமல் இருக்க தூர்தர்ஷன் சேனலில் சட்டசபை நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.***











Leave a comment