
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 4ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வந்த போராட்ட குழுவினரும், இந்து முன்னணியினரும் கடுமையாக
மோதிக்கொண்டனர். கல், செருப்பு வீச்சு சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சத்தை போக்க, நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது.
இந்த நிபுணர் குழுவினர், மாநில அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவை சேர்ந்த நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், எஸ்பி விஜயேந்திர பிதரி, யாக்கோபுரம் தங்கராஜ், போராட்ட குழுவை சேர்ந்த புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் மத்திய, மாநில நிபுணர் குழுவின¢ 4ம் கட்ட பேச்சுவார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக முத்துநாயகம் தலைமையிலான மத்திய நிபுணர் குழுவினர் காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் செல்வராஜ், எஸ்பி விஜயேந்திர பிதரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகவும், அணுமின் நிலையத்தை உடனே செயல்படுத்தக் கோரியும் இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் உடையார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடமும், மத்திய குழுவிடமும் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந¢தனர்.
அப்போது, கூடங்குளம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் போராட்ட குழுவினர் 2 வாகனங்களில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். போராட்ட குழுவினரின் வாகனங்களை பார்த்த இந்து முன்னணியினர் அவர்களை தாக்க பாய்ந்தனர். பின்னர், வாகனங்களில் இருந்து இறங்கிய போராட்ட குழுவினர் மற்றும் பெண்களை சரமாரியாக தாக்கினர். அவர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி எறிந்தனர். அப்போது போராட்ட குழுவை சேர்ந்த பெண்களும் செருப்புகளை வீசி, இந்து முன்னணியினர் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினரும் கல், செருப்புகளை வீசித் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
தாக்குதலை கண்டித்து போராட்டக்குழுவை சேர்ந்த பெண்கள், கலெக் டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கல்வீச்சு சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலாளர் உடையார், ஆறுமுகம் உட்பட 11 பேரும், போராட்ட குழுவினருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து தேசிய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தலைவர் மதுசூதன பெருமாள், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்











Leave a comment