இந்த ஆண்டின் புதிய துவக்கமான சமச்சீர் கல்வி 10‡வது அரசு பொது தேர்வின் மாதிரி கேள்வித்தாள் தொகுப்பு மாணவர்கள் அதிக தேர்ச்சிபெறுவதற்கும், அதிக மதிப்பெண் பெறுவதற்கும் உதவும் என்ற ஆசிரியர்களின் ஆலோசனையில் 5 (ஐந்து) பாடப்பிரிவுகளுக்கும் மாதிரி கேள்விதாள் அடங்கிய கேள்விதாள் (னிலிdeயி ஞற்eவிமிஷ்லிஐ Pழிஸ்ரீer) தமிழ் &ஆங்கில தொகுப்பு
மாணவர்களுக்காக டிஜிடெக் கம்ப்யூட்டரில் ரூ.125/‡ க்கு கிடைக்கும்.
100% தேர்ச்சிக்கும், அதிக மதிப்பெண் பெறவும் இந்த மாதிரி கேள்வித்தாள் அதிக பயனளிக்கும் பயனளிக்கும்.

டிஜிடெக் கம்ப்யூட்டர்,
கல்லுVரி எதிரில்,
கல்லுVரி சாலை,
அதிராம்பட்டினம்.
செல் :9944286062,9994068870
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


வெளிநாடு...! வெளிநாடு என்ற மோகம் சற்றே நமதுVரில் குறைந்துள்ளது என்பது இங்கு புதிய தொழில்கள் மற்றும் தொழில் உதவிகள் செய்யும் நண்பர்கள் அனைவரின் அரவணைப்பிலும் வெளிச்சமாய் சுடர்கொண்டு தெரிகிறது. துபையில் உனக்கு ரூ.15000 சம்பளம் ஓவர் டைமும் உண்டு என்று கூறும் விசா வழங்கும் நிறுவனத்திற்கு நமது மக்கள் கூறும் பதில் சென்னையில் வாகனத்திற்கு டிரைவராய் சென்றாலே ரூ.15,000 சம்பளம் கிடைக்கின்றது என்று கூறும் இளம் சகோதரர்கள் தற்பொழுது ஊரில் கால்பதித்தும் உள்ளார்கள் என்பது சந்தோசத்திற்குரிய செய்தியாய் இருக்கிறது.
மேலும் நம்முடைய படிப்புச் சான்றுகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வெளிவந்தவுடன் அவர்களையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தூண்டுகோளாய் முன்வாருங்கள்.....
நம்மை சூழ்ந்துள்ள சமுதாயம் காவல்துறையினர், அரசு அலுவலகர்கள் அனைவரும் நம்முடைய சூழ்நிலையை அறிந்துகொண்டு நமக்கு (மனிதர்களுக்கு) வழங்கக்கூடிய மரியாதைகளை கொடுப்பதில்லை. நாமும் வெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற அச்சத்தில் அவர்களின் வார்த்தைகளுக்கு தலையசைக்க கூடியவர்களாய் இருக்கின்றோம். இனி வரும் சமுதாயம் நம் வாழ்க்கையில் சரித்திரம் படைக்கட்டுமே.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


பட்டுக்கோட்டை- தஞ்சை- அரியலூர் அகல ரெயில் பாதை திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்: போராட்ட குழுவினர் தீர்மானம்
1946-1949 ஆம் ஆண்டில் முதல்முறையாக சர்வே செய்யப்பட்டு, தொடர்ந்து 1996-2000 ஆம் ஆண்டில் மீண்டும் சர்வே செய்யப்பட்டு தனிப்பட்ட சிலரின் வியாபார லாப நோக்கத்திற்காக (பட்டுக்கோட்டை-தஞ்சை தனியார் பேருந்து உரிமை யாளர்கள்) அரசு அதிகாரிகள் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். பல லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு கிடப்பில் போட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நடந்து முடிந்துள்ள பணிகள், நிலம் சர்வே செய்யப்பட்டு நிலம் ஒதுக்கீடு பணிகள் முடிந்து ரெயில்வே கையகப்படுத்தி விட்டது. அதற்கு ஆதாரமாக கிராம பதிவேடுகளில் அவை பதிவும் செய்யப்பட்டுள்ளன.
 
இத்திட்டத்திற்கு 2000 ஆம் ஆண்டின் சர்வே படி ரூ.100 கோடி மட்டுமே செலவுதொகை கணக்கிடப் பட்டது. தஞ்சை, ஒரத்த நாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை உள்பட 5 ரெயில் நிலையங்கள் முடிவு செய்யப்பட்டு அதில் பட்டுக்கோட்டை, தஞ்சை தவிர மற்றவை கிராமப்புற ரெயில் நிலையங்களாக மட்டுமே கட்டவேண்டும். அடிப்படை பணிகள் எல்லாம் முடிந்து நிதி ஓதுக்கீடு செய்து பணிகள் தொடங்க வேண்டியது மட்டுமே உள்ளது. இதற்கிடையே பட்டுக் கோட்டை, மன்னார்குடி ரெயில் பாதை திட்டத் திற்கு ரூ.140 கோடி ஒதுக்கப் பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு இனிமேல்தான் நிலம் கைய கப்படுத்தி, சர்வே செய்தல் என ஆரம்ப கால கட்ட பணிகளே இன்னும் தொடங்கப்படவில்லை.
 
தற்போதைய பொருளாதார மற்றும் சந்தை சார்ந்த வளர்ச்சி பணிகளில் பட் டுக்கோட்டை முழுவதும் தஞ்சையை சார்ந்தே உள்ள தால் பட்டுக்கோட்டை தஞ்சை ரயில்பாதைபணி அடிப்படை தேவையாக கரு தப்படுகிறது. தமிழகத்தில் மற்ற பகுதிக ளில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட் டிணம், முத்துப்பேட்டை மற்றும் மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகள் அதனை சார்ந்த 100-க்கணக்கான இரண்டாம் கட்ட கிராமங்கள், தொடர்ந்து குக்கிராமங்கள் எல்லாம் வளம் பெற வாய்ப்பு இருக்கிறது.
தஞ்சையில் பணிபுரியும் ஊழியர்கள், படிக்கும் மாணவ- மாணவியர்கள் பெருமளவில் இந்த பகுதியில் இருந்து செல்வதால் தனியார் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் குப்பை வண்டிகளை போல மக்களை திணித்து செல்கின்றன. சில நிமிட இடைவெளி மட்டுமே அடுத்தடுத்த பேருந்து களுக்கு இடையில் இருப்பதால் உயிரை பணயம் வைத்தே பஸ்கள் இயக்கப் படுகிறது. இதனால் விபத்துக்களும் அடிக்கடி நடை பெறுகிறது. சிலரை திருப்தி படுத்துவதற்காக அரசு அதி காரிகள் மற்றும் அரசி யல்வாதிகள் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.பல ஆண்டுகளாக தனித்து நின்று இத்திட்டத்திற்காக குரல்கொடுத்த அனைத்து அமைப்பினரும் ஒன்றிணைந்த பட்டுக்கோட்டை- தஞ்சை-அரியலூர் அகல ரெயில் பாதை போராட்ட குழுவை அமைத்து பெரிய அளவில் போராட திட்டமிட்டுள்ளனர். இந்த குழுவினர் வரும் மார்ச் மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரை போராட்டத்தின் முதல் அடையாள பேராட்டமாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
 
தஞ்சை மாவட்டம் முழு வதும் அனைத்து நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் போராட்டகுழு அமைத்து தீவிரமாக முழுமையான அளவில் போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு வகையிலும் போராட போரட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


இன்று இரவு பயங்கர சூரிய புயல் பூமியை தாக்கும்: செயற்கைகோளுக்கு ஆபத்து
சூரியனில் அடிக்கடி புயல் ஏற்பட்டு வருகிறது. இன்று ஏற்படும் சூரிய புயல் பூமியை தாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்று மாலையில் தொடங்கி நாளை காலைக்குள் இது பூமியை தாக்கலாம் என்று கணித்துள்ளனர். இது சக்தி வாய்ந்த புயலாக இருக்கும். எனவே இதன் தாக்குதலால் செயற்கை கோள்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தகவல் தொடர்புகள் போன்றவை பாதிக்கப்படலாம்.

விமாங்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். 1972-ம் ஆண்டு சக்தி வாய்ந்த சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கியது. அப்போது அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்பட்டன. இந்த புயலும் அதே போல சக்தி வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மணிக்கு 40 லட்சம் மைல் வேகத்தில் சூரிய புயல் பூமியை நோக்கி வரும் என்று கணித்துள்ளனர். விமானங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் புயல் தாக்கும் வாய்ப்புள்ள பகுதி வழியாக செல்ல வேண்டாம் என விமானங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


பிளஸ்-2 தேர்வில் காப்பி அடித்த 3 மாணவர்கள் சிக்கினர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது.  பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தனித் தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 1,874 மையங்களில் இன்று பிளஸ்-2 தேர்வு நடந்தது. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இதனை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர். தேர்வில் காப்பி அடித்தால் 2 வருடம் சிறை தண்டனை என்றும், நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த அளவு கூடுதல் கண்காணிப்பு இருந்தும், விழுப்புரத்தில் 3 மாணவர்கள் காப்பியடித்தற்காக பிடிபட்டனர். உடனே அவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் இவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
இந்த மாணவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் எனவும் தவறு நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati




ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் பூமியின் மேற்பரப்பு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘நிளிசிணி’ திட்டம் என்ற ஆய்வை நடத்தி வரும் இந்த மையம், பூமி எவ்வாறு சுழல்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சமுத்திரங்கள் அதன் பரப்பளவு, கடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஐஸ் பாறைகளின் சலனம் ஆகியவற்றை துல்லியமாக அறிய முடியும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமி மேற்பரப்பில் மஞ்சள் நிறம் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் புவியீர்ப்பு அதிகமாக உள்ளதாகவும் நீல நிறம் உள்ள இடங்களில் குறைவாக உள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati




பெட்ரோல் விலை உயர்வை தள்ளிப்போட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் நாளை அல்லது அதற்கு மறுநாள் முதல் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ள கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

இதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தன. கடந்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது எண்ணெய் விலை உயர்வு இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 
அதேபோல், உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்காக கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கிடையில் ஈரான், சிரியா பிரச்னை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்தது. 

இதனால் தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தன. பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது உ.பி.யில் சமாஜ்வாடி அமோக வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதன் குரல் ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பதில் மத்திய அரசு குழம்பி போய் உள்ளது.

குறைந்தபட்சம் 5 அல்லது 6 ரூபாய் உயர்த்த வேண்டும் எனவும், இதற்கு மேலும் காலம் தாழ்த்த கூடாது எனவும் எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை கடந்த இரண்டு நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாளை அல்லது அதற்கு மறுநாள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். எண்ணெய் நிறுவனங்கள் கேட்டு கொண்டது போல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 உயர்த்துவது என்றும் எதிர்ப்பு கிளம்பினால் பின்னர் அதனை ஓரளவு குறைத்து கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி 
தினகரன்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அறியாமையின் உச்சத்தில் காயல்பட்டினம் !


 தூத்துக்குடி மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஒரு ஊர்தான் காயல்பட்டினம். இது படிப்பறிவு பெற்ற மக்களை, பெரும் செல்வந்தர்களை, தொழில் அதிபர்களை கொண்ட ஒரு ஊர். இவர்கள் உலகம் முழுவதிலும் பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வேலைகளில் பரவிக்கிடந்து அளப்பரிய அந்நிய செலவாணியை இந்தியாவுக்கு கொண்டு  வருபவர்கள். ஒரு காலத்தில் இந்த ஊரில் வாழ்ந்த அறிஞர்கள் மக்கள் பணிகளில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அப்படிப்பாட்ட ஊரில் இருந்து சிலர்  நமது விஞ்சான வடிவேலு அபுல் கலாமின் தம்பிகள் ஆகி கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றனர்.

அபுல்கலாம் கூடங்குளம் மக்களுக்கு 500 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை, அடுக்குமாடி பசுமை வீடுகள், இன்டர்நெட்டு, பிராடு பேண்டு என்று தேர்தல் வாக்குறுதியை விட கேவலமாக வாக்குறுதிகளை அள்ளி விசினார். ஆனால் இதையெல்லாம்  ஏனோ போபாலில் விசவாய்வு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஜனாதிபதியாக இருந்தும்  வழங்கவில்லை.  அணு குண்டையும் அதே நேரம் குழந்தைகளையும் நேசிக்கும் ஒரே அதிசய விஞ்சானியின் தம்பிகளாக காயல்பட்டினம் மக்களில் சிலர் மாறி கூடங்குளம் அணு உலை வேண்டும் என்ற போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று காயல்பட்டினம்  முஸ்லிம் லீக் கட்சி ( இவர்கள்தான் நாக்பூரில் பிஜேபிக்கு பஞ்சாயத்து தேர்தலில் ஆதரவு கொடுத்தவர்கள்)  கூட்டிய கூட்டத்தில் காயல்பட்டினத்தின் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சங்கங்கள்,  குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகியவற்றின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டார்கள். வேடிக்கை என்னவென்றால் இதில் பிஜேபியும் கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்றும் அதற்காக ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் வருகிற மார்ச் 6  தேதி நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

தமிழக அளவில் உள்ள எந்த கட்சிகளோ, அமைப்புகளோ இந்த ஊரில் மட்டும் தங்களது வீரியத்தை இழந்து விடும் ஒரு அவல நிலைமை தற்போது நிலவி வருகிறது. மாநில அளவிலான மனித நீதி மக்கள் கட்சி, மத்திய அளவிலான SDPI கட்சி, போன்றவற்றின் தலைவர்களும், முக்கிய பொறுப்பாளிகளும் அணு உலை என்பது ஆபத்து என்பதை உணர்ந்துள்ளனர்.  SDPI கட்சியின் மாநிலத்தலைவர் தேகலான் பாக்கவி கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். தங்கள் கட்சி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடர்ந்து  கடுமையாக எதிர்க்கும் என்று பல கூட்டங்களில் தெரிவித்துள்ளார். 

அதுபோல் மனித நீதி கட்சியின் தலைவரும் ராமநாதபுர எம்.எல்.எ. வுமான ஜாவாஹிருல்லா கூடங்குளம் அணு உலை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் கூடங்குளம் உண்ணாவிரத போராட்ட பந்தலிலேயே பேசினார். மேலும் அதனை தங்களது கட்சியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் கடுமையாக எதிர்ப்பதாக குரல் கொடுத்தார். நிலைமை இப்படி இருக்க காயல்பாடினத்தை சார்ந்த இந்த கட்சிகளின் கிளைகள் மட்டும் தலைமையின் கருத்து மாறுபட்டு தங்கள் ஊர் என்கிற ஒரு குறுகிய மாயையில் அணு உலையை திறக்க வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளனர். ஹிந்து முன்னணியின் குரலாக ஒலிக்கும் முஸ்லிம் லீக்குக்கு இவர்கள் துணை போயி இருக்கிறார்கள்.

இதுபோல் இவர்கள் செய்யும் காரியம்  காயல்பட்டினத்து மொத்த மக்களையும் சுயநலம் கொண்டவர்களாக உலகுக்கு காட்டும் ஒரு விசயமாகும்.  இந்த கட்சிகள், சங்கங்கள் இந்த  நாசகார அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அதை ஆதரித்து குரல் எழுப்புவதே இங்கு கண்டனத்துக்கு உரியது. இதே காயல்பட்டினம் மக்கள்தான் dcw என்கிற தாரங்கதார கெமிக்கல் வொர்க்ஸ் என்கிற நிறுவனத்தை கடுமையாக் எதிர்த்தார்கள். இதனால் தங்கள் ஊருக்கு பாதிப்பு உண்டாகும் என்று சொல்லி  உலகம் முழுவதும் வாழும் காயல்பட்டினம் மக்களை கொண்டு அங்குள்ள இந்திய தூதரகங்களில் மனுக்களை கொடுக்க செய்தார்கள். 

இச்செயலை  நாமும் வரவேற்கிறோம். ஆனால் அதை விட மோசமான ஒன்றுதான் அணு உலை. மேலும் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் காயல்பட்டினத்திற்கு வசூலுக்காக வந்த போது ஓடக்கரை ஹிந்து முன்னணியை சேர்ந்த சுகு என்கிற சுகுமாரன் அவர்களை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த ஓடக்கரை சுகுதான் காயால்பட்டினத்து மக்களுக்கு பல வழிகளில் கேடுகளையும், துயரங்களையும் ஏற்படுத்தியவர். பல சமயங்களில் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில்  காயல்பட்டினத்தில் மதகலவரம் உண்டாக்கியவர் என்று நம்பாபடுபவர். இப்படி இருக்க வசூலுக்கு வந்த அப்பாவி கூடங்குளம் மக்களை இந்த சுகு தாக்கும்போது காயல்பட்டினம் மக்களில் பலர் வேடிக்கை பார்த்துள்ளனர். 

நமக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக நாசகார திட்டம் என்று தெளிவாக தெரிந்த ஒரு திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கலாமா? இதை நியாய உள்ளம் கொண்ட காயல்பட்டினம் மக்கள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான பிரச்சாரங்கள் முடிக்கி விடப்பட வேண்டும். மனித நீதி மக்கள் கட்சி, மற்றும் SDPI  போன்ற கட்சிகளின் மாநில தலைவர்கள் உடனே சம்மந்தபட்ட காயல்பட்டின கிளை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது அணு உலைக்கு எதிரான போராட்டங்களை காயல்பட்டினத்தில் தெரு முனை பிரச்சாரங்கள், மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் முடுக்கிவிடப்பட வேண்டும். நல்ல விசயங்களுக்கு முன்னோடிகளாக திகழும் காயல்பட்டினம் மக்கள் இதை செய்வார்கள் என்று நம்புவோம். 


                     மின்னஞ்சல் வழியாக: அபூ காதீஜா: குலசேகரன்பட்டினம்.
thanks to asiananban
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அதிரை சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கியப் பே ரவையின் மதரஸத்துல் மஸ்னி இருவகைக் கல்வி இல்லம்..
.
Masjid Image (87) அல்லாஹ்வின் அருட்கொடையாக இந்த கல்வி நிறுவனம் கடந்த 6 மாத காலமாக 

சமுதாய மக்களுக்காக உழைத்து வருகிறது .இந்த மதரஸாவில் 30 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்
சிறப்பான முறையில் கல்வி பயின்று வருகின்றனர்.
* இப்பள்ளியில் குர் ஆன்,ஹதிஸ் ,வரலாற்றுப் பாடங்கள் ,இஸ்லாத்தின் அடிப்படை விளக்கங்கள்-அரபிக்,தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பயிற்சிகள் போதிக்கப்படுகிறது. 
* தஜ்விதுடன் குர்ஆன் மனனம்,ஹாபிஸ்களை உருவாக்கி வருகிறோம், இங்கு கல்வி கற்று வருகின்றவர்கள் 
மிகவும் ஏழ்மையுடையவர்களும்,அனாதைகள் மட்டுமே உள்ளார்கள்.
* மதரஸாவின் அமைப்பு சுற்றுச் சூழலும் காற்றோட்டமும், பசுமையான மரங்கள் நிறைந்த சூழலில் அமைந்துள்ளது
* இவர்களுக்காக அரபிக் உஸ்தாத்கள்,ஆங்கிலம்,தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் பயிற்சி அளித்துவருகிறார்கள். 

விருப்பம் உள்ளவர்கள் வசதி இல்லாத ஏழ்மையான குழந்தைகளை சேற்த்து பயன் அடயும்மாறு கேட்டுகொள்கிறோம்.

தொடர்புக்கு :
தலைவர் : மௌலவி MF  சேக் தாவூத்து (   மிஸ்பாஹி. மதனி ) புதுமனைத்தெரு
( M.S.M. லைன், ஆதம் நகர் இமாம்) 
து தலைவர் : அஹமது அஸ்ரப் .C.M.P. லைன் 
பொதுச் செயலாளர் ;M .அப்துல் கரீம் .ஹாஜ நகர் 
செயலாளர் : M . முகமது அஸ்லம் .மேலத்தெரு
து செயலாளர் : S . ஹாஜ நசுருதீன் .மேலத்தெரு
பொருளாளர் : H . செய்து இபுராஹிம் .மேலத்தெரு
து பொருளாளர் : M.R. ஜமால் முகமது .மேட்டுத்தெரு
அமைப்பாளர் : B. அஹமது மரைக்கான் .மேட்டுத்தெரு
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

பெங்களூரு நீதிமன்ற கலவரம்: 4 வழக்கறிஞர்கள் கைது

பெங்களூரு நீதிமன்ற கலவரம்: 4 வழக்கறிஞர்கள் கைதுநேற்று நடந்த பெங்களூரு நீதிமன்ற கலவரம் தொடர்பாக இன்று 4 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சட்ட விரோத சுரங்க தொழில் காரணமாக கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெடி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
 
அப்போது, அவரை படம்பிடிக்க முயன்ற சில பத்திரிக்கையாளர்களை வழக்கறிஞர்கள் தாக்கினர். பின்னர், இது கலவரமாக மாறியது. மேலும், இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati