டோக்கியோ: ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை
அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2060ல், ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும். இதே சூழல் தொடர்ந்தால், 2110ல், 4 கோடியே 29 லட்சமாகி விடும். <உ<லகில், ஜப்பானில் தான் சராசரி மனித ஆயுள் அதிகம். 2010 கணக்கெடுப்பின்படி, அங்கு சராசரி மனித ஆயுள், 86.39 ஆண்டுகள். இது, 2060ல், பெண்களைப் பொறுத்தவரை, 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய, 79.64 ஆண்டுகளில் இருந்து, 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்த மக்கள் தொகை குறைவுக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக, தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம், தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால், அதில் ஈடுபடுவதில்லை. அதோடு, கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியில், 19 ஆயிரம் பேர் பலியாயினர்.
சுனாமியால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால், பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள், குழந்தைகளைப் பெறுவதை விரும்பவில்லை.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment