மும்பை: ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக் வடிவில் அச்சிடும் திட்டத்தில் சோதனை முயற்சியாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது.கள்ள நோட்டு பிரச்னையை தவிர்க்கவும், கரன்சிகள் கிழியாமல் தடுக்கவும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி
திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக குறைந்த அளவில் 10 ரூபாய்  நோட்டுகளை அச்சிட்டு சோதனை நடத்த முடிவு செய்துள்ளது. இந்திய பருவ நிலை மாற்றங்களால் அதற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பரிசோதிக்கப்படும். பிறகு மத்திய அரசின் அனுமதி பெற்று  அதிகளவில் பிளாஸ்டிக் கரன்சி அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இதுபற்றி சண்டிகரில் ரிசர்வ் வங்கியின் கூடுதல் பொது மேலாளர் மங்களா கூறுகையில், பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் இப்போதுள்ள காகித நோட்டுகளைவிட நீண்ட காலம் உழைக்கக் கூடியவை.அதிக வெப்பம், கடும் குளிர், கடலோர பகுதிகள் என பல பருவமுறைகள் கொண்ட நம்நாட்டில் முதல்கட்டமாக 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளின் தாக்குபிடிக்கும் தன்மை சோதனை செய்யப்படும்.அது வெற்றிகரமாக அமைந்தால் அரசு அனுமதி பெற்று பிளாஸ்டிக் கரன்சி அச்சிட்டு வெளியிடப்படும். எனினும், அதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்றார்
நன்றி தினகரன்




These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati