
மெல்பர்ன்: இந்தியாவுடனான இரண்டாவது 20 ஓவர் போட்டியிலும் வெற்றி பெறுவோம் என்று ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் டேவிட் ஹஸி நம்பிகை தெரிவித்துள்ளார். நாளை நடைபெறும்
போட்டியிலும் நாங்கள், 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற விரும்புகிறோம் என்றும் இப்படி வெற்றி பெறுவதை முக்கியமானதாக கருதுகிறோம் என்றும் அவர் கூறினார்.
மேலும், சொந்த மண்ணில் மெல்பர்ன் மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெறுவதை விட சந்தோஷம், வேறு எதுவும் இருக்க முடியாது என்றும், இந்த அருமையான சூழல் உலகில் வேறு எங்கும் கிடைக்காது என்றும் டேவிட் ஹஸி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் ஹஸி 42 ரன்கள் எடுத்ததுடன், 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் என்பது குறிப்பித்தக்கது











Leave a comment