நெல்லை : நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சு வார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகம் வந்தபோது இந்த
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தாக்குதலை கண்டித்து கூடங்குளத்தில் கடைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. மேலும் தாக்குதலை கண்டிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நோக்கி பேரணியும் நடைப்பெற்றது. இதனால் மத்திய நிபுணர் குழுவுடனான பேச்சு வார்த்தையை போராட்டக்குழுவினர் புறக்கணித்தனர்.











Leave a comment