தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணம் 1 சதவீதம் குறைகிறது 

தமிழ்நாட்டில் புதிதாக வீடு, மனை மற்றும் நிலங்களையும், சொத்துக்களையும் பதிவு செய்யும்போது அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் பேரில் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி முத்திரைத்தாள் கட்டணம் 6 சதவீதமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கம் மற்றும் பில்டர்ஸ் அசோசியேசன் உள்ளிட்ட கட்டுமான சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இதை ஏற்று முத்திரைத்தாள் கட்டணத்தை குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது 6 சதவீதமாக இருக்கும் முத்திரைத்தாள் கட்டணம் 5 சதவீதமாக குறைக்கப்படும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 2 சதவீத சர்சார்ஜ் மற்றும் 1 சதவீத பதிவு கட்டணம் ஆகியவை தொடர்ந்து நீடிக்கும். ஒட்டுமொத்த சொத்துக்கான முத்திரைத்தாள் கட்டணம் 9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைகிறது.

ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கான பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரமாக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி
மாலைமலர் 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


அமெரிக்காவில் பறக்கும் கார் அறிமுகம் ஆகிறது 
அமெரிக்காவில் மசாசு செட் மாகாணத்தில் உள்ள டெர்ராபுஜியா என்ற நிறுவனம் பறக்கும் கார் தயாரித்துள்ளது. இந்த காரில் விமானத்தில் உள்ளது போன்று இறக்கைகள் உள்ளன. அவை விண்ணில் பறக்கும் போது 30 வினாடிகளில் பறவை போன்று தனது சிறகை (இறக்கையை) விரிக்கும்.
 
தரை இறங்கி கார் ஆக மாறியவுடன் அவை மடிந்து விடும். பெட்ரோல் மூலம் விண்ணில் பறக்கும் இந்த கார் மணிக்கு 110 மைல் வேகத்தில் 460 மைல் தூரம் பறக்க கூடிய திறன் படைத்தது. இந்த காரின் விலை
ரூ.1 கோடியே 40 லட்சம். அடுத்த மாதம் (ஏப்ரல்) 6 முதல் 15-ந் தேதி வரை நியூயார்க்கில் சர்வதேச ஆட்டோ கண்காட்சி நடக்கிறது.
 
அதில் கார் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்போதே இந்த காருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பறக்கும் கார்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டெர்ராபுஜியா கம்பெனியின் அதிகாரி அன்னா ரேக் டயட்ரிச் தெரிவித்துள்ளார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ஐ.நா. சபையில் 22-ந்தேதி கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்?: திங்கட்கிழமை அறிவிப்பு 
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மனித உரிமை மீறல்களும் நடந்தன. இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் மீது வரும் 22-ந்தேதி ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. ஐ.நா. சபை மனித உரிமை கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகளில் 22 நாடுகள் சிங்கள ராணுவம் செய்த கொடூரங்களை உணர்ந்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்து இருக்கின்றன.
 
கடந்த புதன்கிழமை இரவு சேனல்-4 தொலைக்காட்சியில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படும் காட்சிகள் ஒளிபரப்பான பிறகு மேலும் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக திரும்பியுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் இந்தியாவின் நிலை என்ன? என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. தமிழர்களுக்கு எதிராக செயல்படும் சிங்கள தலைவர்களுக்கு மத்திய அரசு ஆதரவாக இருப்பதால், ஐ.நா. சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று தகவல்கள் வெளியானது. பாராளுமன்றத்தில் பேசிய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் பேச்சும் இதையே சூசகமாக வெளிப்படுத்தியது.
 
ஆனால் ஐ.நா.சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து, இலங்கைக்கு எதிரான ஒரு நிலையை இந்தியா எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக 2 தடவை பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
 
தமிழ்நாட்டில் இருந்து ஓங்கி ஒலிக்கும் இத்தகைய ஒருமித்த குரல் மத்திய அரசை சற்று யோசிக்க வைத்துள்ளது. தமிழக தலைவர்களை சமரசம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை இது தொடர்பாக சந்தித்து பேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் 2 தடவை முயன்றார். ஆனால் மத்திய அரசு இலங்கைக்கு சாதகமாகவே இருப்பதால் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிவசங்கர் மேனனை சந்திக்க மறுத்துவிட்டார்.
 
இது மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொள்ளாததும் மத்திய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக மாறியுள்ளது. தற்போது தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனநிலையும் இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்க வேண்டும் என்றே உள்ளது. எனவே மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஐ.நா.சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
 
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் சூசகமாக தெரிவித்தார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இத்தகைய எச்சரிக்கைகளுக்குப் பின்னணியில் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் ஆதரவு குழுவினரே காரணம் என்று அமெரிக்காவுக்காக இந்திய தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Income Tax 



 இன்று 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நாம் எவ்வளவு ஊதியம் வாங்கினாலும் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை.

ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி விதிக்கப்படும்.

ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்படும்.

ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி விதிக்கப்படும்.

இதுவரை ரூ.1.8 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி இல்லை. ரூ. 1.8 லட்சம் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதமும், ரூ. 5 முதல் ரூ. 8 லட்சம் வரையிலான பட்ஜெட்டுக்கு 20 சதவீதமும், ரூ. 8 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேரடி வரிகள் சட்ட மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தும்படி சிபாரிசு செய்திருந்தது. ஆனால், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பிரணாப் முகர்ஜி, அதை ஏற்காமல் விட்டுவிட்டார் 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


உலகில் உயரமான மனிதர் வளர்வது நிறுத்தப்பட்டது: அமெரிக்க டாக்டர்கள் சிகிச்சை 
உலகில் உயரமான மனிதராக துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான்கோசனா இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு உலகில் உயரமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அவருடைய உயரம் 8 அடி 3 அங்குலம்.
 
அவர் தொடர்ந்து உயரமாக வளர்ந்து கொண்டே இருந்தார். இது பல்வேறு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே உயரத்தை கட்டுப்படுத்த அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
 
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஹார்மோன் கோளாறால் அவர் உயரமாக வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹார்மோனை கட்டுப்படுத்தினார்கள். இதன் மூலம் சுல்தான்கோசனா தற்போது வளர்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அமெரிக்காவில் ஒரு வயது மகனை தண்ணீரில் அமுக்கி கொன்ற இந்திய பெண்
அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் நேகாபடேல் (30). அமெரிக்கா வாழ் இந்தியரான இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு இஷான் என்ற ஒரு வயது மகன் இருந்தான்.
கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இவர் தனது மகன் இஷானை வீட்டில் இருந்த குளியலறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார். பின்னர் அவனது உடலை 13 மணி நேரம் காரில் வைத்தப்படி சுற்றி திரிந்தார்.   அவனது, பிணத்தை யாருக்கும் தெரியாமல் வீசி எரிய முயன்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “இஷானை பெற்ற பிறகு நான் உடல்ரீதியாக மிகவும் அவதிப்பட்டேன். இதனால் அவன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது அதன் காரணமாக இவனை கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகின. பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில், ஏ,சி வகுப்புகள் என கிலோமீட்டருக்கு குறிப்பிட்ட பைசா கட்டண உயர்வு இருந்தது 
கட்டணம் உயர்வு  
விவரம்:

* பயணிகள் ரெயில் 2 வது வகுப்புகட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

* எக்ஸ்பிரஸ் ரெயில்வே கட்டணம் கிலோமீட்டருக்கு 3 பைசா வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

* படுக்கை வசதி ரெயில் பயணிகளுக்கு கிலோமீட்டருக்கு 5 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது.

* ஏ.சி முதல் வகுப்பு பயணிகளுக்கு கிலோமீட்டருக்கு 30 பைசா உயர்த்தபட்டு உள்ளது.

* ஏ.சி 3அடுக்கு படுக்கை வசதிக்கு கிலோமீட்டருக்கு10 பைசா உயர்த்தபட்டு உள்ளது.

* ஏ.சி 2 அடுக்கு படுக்கை வசதிக்கு கிலோமீட்டருக்கு 15 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது.

* 300 கீலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு ரூ 12 வரை உயர்த்தபட்டு உள்ளது.

* பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ 3 லிருந்து ரூ 5 ஆக உயர்வு.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


சூரிய காந்த புயல் தாக்கினாலும் அதிர்ஷ்டவசமாக பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களால் காந்த புயல்கள் உருவாகின்றன. சூரியனின் மேற்பகுதியில் கொந்தளிப்பாக காணப்படும் பகுதி, சில நேரங்களில் அதிக வெப்பத்தால் அதில் இருந்து பிய்த்துக் கொண்டு காந்த புயலாக வெளியேறும். இது பல லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாயும். இதனால் செயற்கைக் கோள், மின்சாரம், விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுபோல் அவ்வப்போது நடந்தாலும் இதுவரை பூமிக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை.

இந்நிலையில் மிகப்பெரிய சூரிய புயல் ஒன்று நேற்று காலை 6 மணிக்கு பூமியை தாக்கியது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியது. வழக்கமான சூரிய புயலில் இருந்து இது 10 மடங்கு பெரியது என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். புயல் தாக்கும் போது, செயற்கை கோள், ஜிபிஎஸ், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தனர். ஆனால், நேற்று காலை தாக்கிய சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். சூரிய புயல் தாக்குதலால், பூமியின் காந்த புலத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, சூரியனில் இருந்து பிரகாசமான ஒளி பிய்த்து கொண்டு பூமி நோக்கி அதிவேகமாக புறப்பட்டது. பின்னர் படிப்படியாக சோப்பு நுரையில் இருந்து உருவாகும் உருண்டை போல பெரிதானது. இதுபோன்ற சூரிய புயல் தாக்குதலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், காந்த புயல், ரேடியோ அலை புயல், கதிர்வீச்சு புயல் என்ற 3 வகை புயல்களால் தகவல் தொழில்நுட்பங்கள் பாதிக்கப்படும்.

பெரும்பாலும் இதுபோன்ற புயல்கள் பூமியின் வடதுருவம் அல்லது தென் துருவங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் விமான போக்குவரத்து பாதையில் குழப்பங்கள் நிகழும் என்றனர்.கடந்த 1989ம் ஆண்டு சூரிய காந்த புயல் தாக்கியதில், கனடாவின் கியூபெக் மாகாணத்தில் மின் கடத்தி அமைப்பான கிரிட் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் 60 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினம் பகுதிகளில் மீன்பிடி துறைமுக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மறவக்காடு வாய்க்கால் மீன்பிடி மீனவ சங்க தலைவர் சங்கர், தமிழக மீன்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினம், மறவக்காடு, தம்பிக்கோட்டை ஆகிய பகுதிகளில் அலையாத்தி காடுகள் வழியாக 200க்கும் மேற்பட்ட கடல் வாய்க்கால்கள் உள்ளன.
இந்த வாய்க்கால் மீன்பிடிப்பு ஆங்கிலேயர் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகிறது. கடலிலிருந்து அலையாத்தி காடுகள் வழியாக கடல்நீர் வருவதால் காட்டில் புதிதாக நடப்பட்ட அலையாத்தி மற்றும் இதர செடிகள் செழித்து வளர்வதற்கு உறுதுணையாக உள்ளது. அதோடு மீனவர்கள் இந்த வாய்க்கால் மூலம் வரும் மீன்கள், இறால்கள், நண்டுகள் ஆகியவற்றை பிடித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த வாய்க்கால்கள் தற்போது தூர்ந்து வருகிறது. அப்படி வருவதால் கடல்நீர் வருவது தடைபடும். இதனால் மீன்வரத்து குறைவாக உள்ளது.
ஆதலால் மீன்பிடி வாய்க்கால்களை தூர்வாரி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
நன்றி
தினகரன்

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati