புதுடில்லி: "ஸ்பெக்ட்ரம் விலை ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில், அனைத்து மொபைல் போன் சேவைக் கட்டணங்கள் இரு மடங்காக அதிகரிக்கப்படும்' என, சேவை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. புதிய ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட உள்ள நிலையில், அவை அதிக விலைக்கு ஏலம் விடப்படும் பட்சத்தில், மொபைல் போன் நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். டில்லியில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை, பார்த்தி ஏர்டெல் முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சய் கபூர் உட்பட பல நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள் சந்தித்துப் பேசினர். ஸ்பெக்ட்ரம் விலை அதிகரிக்கும் பட்சத்தில், மொபைல் போன் கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அமைச்சரிடம் தெரிவித்தனர். பின்னர், பார்த்தி ஏர் டெல் நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் சஞ்சய் கபூர் கூறுகையில், "அமைச்சரிடம் இரு முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசினோம். இந்தியாவில் ஒரு மண்டலத்தில் நிர்ணயித்துள்ள ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விலைக்கும், பிற பெருநகரங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை 100 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், மொபைல் போனுக்கான கட்டணம் இருமடங்காக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நிமிடத்திற்கு 2 பைசா என கருதி வருகிறது. ஆனால், விலை அதிகரிக்கப்படும்போது, நிமிடத்திற்கு 30 பைசா வரை உயரும் வாய்ப்புள்ளது' என்றார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Gps Enabled Bus E Tickets Soon Tamil Nadu  சென்னை: சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஆறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் 110வது விதியின்கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

மக்களை இணைப்பதிலும்; நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதிலும்; நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி இன்றியமையாததாக விளங்கும் சாலைப் போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு அளித்து வரும் அரசு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதும்; அதன் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளின் வசதிகளை அதிகரிப்பதும் அவசியமாகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, அரசு பேருந்துகளை இயக்குகின்ற 45 வயதிற்கு மேற்பட்ட ஓட்டுநர்கள் உடல் தகுதியினை அறிந்து, உடல் நலக் குறைவு ஏதேனும் இருப்பின் அதற்கான மருத்துவ வசதி பெற்றுக் கொள்ளும் வகையில், சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆண்டுக்கு ஒரு முறை “முழு உடல் பரிசோதனை” செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தற்போது கருணை அடிப்படையில் பணிபுரிந்து வரும் 338 வாரிசுதாரர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டு அவர்களது பணி நிரந்தரம் செய்யப்படும் என்பதையும்; பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கு 50 பணியிடங்கள் என்ற அடிப்படையில், 400 தொழில்நுட்ப காலி பணியிடங்கள் தொழில்நுட்ப பணி அல்லாத பழகுநர்களுக்கு மூன்று ஆண்டு பயிற்சி அளித்து நிரப்பப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஓய்வு பெற்றும், ஓய்வூதியப் பயன்களை பெறாத தொழிலாளர்களின் நிலையினை கருத்தில் கொண்டு, 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற 2,316 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான 47 கோடியே 71 லட்சம் ரூபாய் இந்த மாதத்திலேயே வழங்கப்படும்.

இதே போன்று, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள 4,688 தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான 96 கோடியே 57 லட்சம் ரூபாய் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வழித் தடப் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு, 31.3.2013 வரை ஓய்வு பெறவுள்ள பணியாளர்களின் பணியிடங்களையும் உள்ளடக்கி, 6,910 ஓட்டுநர்கள், 7,402 நடத்துநர்கள் மற்றும் 2,349 தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 16,661 பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்தப் பணியிடங்களில், 4,511 பதிலி ஓட்டுநர்கள், 4,558 பதிலி நடத்துநர்கள் மற்றும் 88 பதிலி தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 9,157 பதிலிப் பணியாளர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள்.

அரசுத் துறையின் அனைத்து வாகனங்களையும் பராமரித்து வரும் அரசு மத்திய தானியங்கி பணிமனை தனது பராமரிப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில், மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 398 தொழில்நுட்பப் பணியிடங்கள் மற்றும் 171 பிற பணியிடங்கள் என மொத்தம் 569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

பயணிகள் எளிதாக பயணச் சீட்டினை பெறும் வகையில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களைப் (GPS) பயன்படுத்தி மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை அனைத்து பேருந்துகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களால் 300 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் தொலைதூர வழித்தட இயக்கத்தினை சீரமைக்கும் சீரிய நோக்கத்தின் அடிப்படையில், தொலைதூர வழித் தடப் பேருந்துகள் இனி அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும். இதன் காரணமாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தடப் பேருந்துகளின் எண்ணிக்கை 905-லிருந்து 1,761-ஆக அதிகரிக்கப்படுவதை அடுத்து, ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்பதையும்; கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பொது மேலாளர் அலுவலகம் ஒன்று தோற்றுவிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்ற அளவிற்கு பணிமனைகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களால் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும்.

எனது அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக, போக்குவரத்துக் கழகங்களின் சேவை மேலும் செம்மையுறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

How Does Breath Analyser Works Special Review  பெரும்பாலான விபத்துக்களுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் முக்கிய காரணமாகிறது. குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்களால், அவர்கள் மட்டுமின்றி எதிரில் வரும் அப்பாவி வாகன ஓட்டிகளின் உயிர்களையும் பறித்து விடுகின்றனர். மேலும், அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலமும் ஒரு நொடியில் கேள்விக்குறியாகிவிடுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீதங்களை கருத்தில்க்கொண்டு, இதை தடுக்க கடுமையான சட்டங்களை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. ஆனால், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமே!

இதற்கு ப்ரீத் அனலைசர் என்ற கருவிதான் பயன்படுகிறது. இந்த கருவி மூலம் மது அருந்தியவரை துல்லியமாக கண்டிபிடிக்க முடியுமா? பார்க்கலாம் வாங்க.

மது அருந்தியவரின் ரத்த ஓட்டத்தில் ஆல்கஹால் இலகுவாக கலந்துவிடுகிறது. ரத்த ஓட்டத்தில் கலந்த ஆல்கஹால் நுரையீரலில் இருக்கும் ஆல்வியோலை என்ற நுண் துவாரங்கள் வழியாக ஆவியாகி கரியமில வாயுவுடன் சேர்ந்து சுவாசம் மூலம் வெளியேறும்.

இதுபோன்று சுவாசத்தில் ஆவியாக வெளியேறும் ஆல்கஹால் அளவை வைத்தே ஒருவர் எவ்வளவு குடித்துள்ளார் என்பதை மிகத் துல்லியமாக கணக்கிட்டு கூறிவிடுகிறது ப்ரீத் அனலைசர் கருவி. ஆனால், போதிய அளவு காற்றை ஊதினால்தான் இந்த கருவி துல்லியமாக கணக்கிடும்.

இதில், சிலர் குறைந்த அளவு காற்றை ஊதிவிட்டு தப்பிக்க வழியுண்டு. ஆனால், தற்போது வரும் கருவிகள் போதிய காற்றை ஊதவில்லை என்றால் அதுகுறி்த்த தகவலை தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. எனவே, ப்ரீத் அனலைசரை ஏமாற்ற முடியாது.

மேலும், ஸ்ட்ரா போன்ற குழாய் கொண்ட வடிவிலும், டிஜிட்டல் மீட்டர் போன்ற வடிவிலும் ப்ரீத் அனலைசர் கருவிகள் வருகின்றன. இதில், தற்போது பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் ப்ரீத் அனலைசர் கருவிகளில் உள்ள ஸ்ட்ராவில் அனைவரும் வாய் வைத்து ஊத வேண்டியிருக்கிறது. 

இதற்கு பதில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் வகையில் டிஸ்போசல் ஸ்ட்ரா கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைள் எழுந்துள்ளது. டிஸ்போசல் ஸ்ட்ராவை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 ஆணோ, பெண்ணோ அனைத்து தரப்பினரும் உபயோகிக்கும் ஒரு உடையாக இருக்கிறது ஜீன்ஸ். எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் துவைக்காமல் போட்டுக்கொள்ளலாம் அப்படி ஒரு சவுகரியம் அந்த உடையில் உள்ளது. ஆனால் ஜீன்ஸ் உடையில் சில அசௌகரியங்களும் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆண்களுக்கு ஆண்மை குறைபாடும், பெண்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும் ஏற்படுவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜீன்ஸ் அணிந்த இளசுகளை கேட்டாலே அந்த உடையைப் பற்றி கதை கதையாக கூறுவார்கள். சவுகரியமான உடை, தன்னம்பிக்கை தரக்கூடிய உடை, அழகை எடுப்பாக எடுத்துக்காட்டும் என்றெல்லாம் கூறுவார்கள். ஜீன்ஸ் உடை அணிய எத்தனை காரணங்களை கூறினாலும் இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது.

பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அது உடலை இருக்கிப் பிடித்து `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிடும். 

ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்குவதால் பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக செல்லும் மெல்லிய நரம்பு பாதிக்கப்படும் என்று கூறும் மருத்துவர்கள் இதனால் கடுமையான கால் வலி ஏற்படும் என்கின்றனர்.

ஜீரணம் பாதிக்கும்

நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. 

அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்மைக் குறைபாடு

பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம்.. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்' என்று சுவீடனில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். ஆண்களின்

இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது ஆண்களின் விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இருக்கமான உடை அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர்களாக ஆகக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரோக்கியமான உடை

ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.

`ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது. தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும். தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati