2013ல் விண்வெளி சுற்றுலா




விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துப் போவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விண்கலங்கள் புறப்பட்டு செல்வதற்கான ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் வேலை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டது வர்ஜின் குழுமம். இது விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதற்காக வர்ஜின் கேலக்டிக் என்ற தனி நிறுவனத்தை

தொடங்கியிருக்கிறது. விண்வெளி சுற்றுலா திட்டம் 2013ல் தொடங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள லாஸ் க்ரூசஸ் பகுதியில் பிரமாண்ட ஸ்பேஸ் போர்ட் அமைக்கப்பட்டு வருகிறது. 
1800 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுபற்றி ஸ்பேஸ் போர்ட் அதிகாரிகள் கூறியதாவது: விண்கலங்கள் புறப்படும் இடம் என்பதால் 3 கி.மீ. நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுற்றுலா செல்லும் விண்கலத்துடனான தொடர்பை தொடர்ந்து கண்காணிக்கும் தரை கட்டுப்பாட்டு மையமும் இந்த வளாகத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் இந்த ஆண்டு கடைசிக்குள் முடிந்துவிடும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 2013ல் விண்வெளி சுற்றுலா திட்டம் தொடங்கப்படும். சுற்றுலா வாகனம் ஸ்பேஸ்ஷிப்-2 சோதனை பலகட்டமாக நடந்து வருகிறது.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment