சசிகலாவின் தம்பி திவாகரன் கைது

திருவாரூர் : சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று அதிகாலை திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து வலங்கைமான கொண்டுவரப்பட்டு அங்கே நீதிபதி முன் திவாகரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரை வரும் 16ந் தேதி வரை நீதிமன்றக் காவலில்
வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா ரிஷியூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி பாலசுப்ரமணியன் அவரது தந்தை மாணிக்கத்தின் வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. திவாகரன் தூண்டுதலின்பேரில் வீடுகள் இடிக்கப்பட்டதாக பாலசுப்ரமணியன் மனைவி கஸ்தூரி புகார் அளித்தார். இந்த வழக்கில் திவாகரனை கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவானார். முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திவாகரன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் திவாகரன் மனைவி ஹேமலதா அவரது மகன், மகளுடன் நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து நேற்று மாலை 4.32க்கு திவாகரன் மனைவி ஹேமலதா வக்கீல்களுடன் நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் வந்தார். அவரிடம் நாகை ஏடிஎஸ்பி மணிவண்ணன்  விசாரணை நடத்தினார். திவாகரன் எங்கு உள்ளார் என அவரிடம் துருவித்துருவி கேட்டபோதும், தனக்கு தெரியாது என்று அவர் கூறியதாக ஏடிஎஸ்பி மணிவண்ணன் தெரிவித்தார்.

இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று அதிகாலை திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திவாகரனை வரும் 16ந் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment