உலகிலேயே உயிரினப் பன்மைக்கு பெயர் போன இந்தோனீசியாவிற்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவுகளில் உலகின் சிறிய இனத் தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெறும் 7 மில்லிமீட்டர் அளவுள்ள இந்த தவளையே
முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் சிறியது என்றும் நம்பப்படுகிறது. இந்த தவளை இனத்திற்கு பாடோஃபின் அமாவுவென்சிஸ் என உயிரியல் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இதனை விட சற்று பெரிய பிறிதொரு இனமும் (பாடோஃபின் ஸ்விஃப்ட்டோரம்) அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தவளை இனங்கள் காடுகளின் நிலப்பரப்பில் குப்பை கூளங்களில் மறைந்து வாழ்வதால் இவற்றை அவ்வளவு இலகுவாக கண்டுபிடிக்க முடியாது என்று இந்த ஆய்வை நடத்திய அமெரிக்க உயிரியலாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை இதற்கு முன்னர் உலகின் சிறிய இன தவளை இனமான பிரேசில் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனம் கோல்ட் ஃப்ராக்கும் அங்கு இருந்ததாக தெரிகிறது.

Leave a comment