இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளில் தேவை அதிகரித்து வருவதே கச்சா எண்ணெய் விலை உயர காரணம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குற்றம்சாட்டி உள்ளார். எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவதை ஒப்புக் கொண்டுள்ள அவர், ''இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளில் தேவை அதிகரித்து வருவதே கச்சா எண்ணெய் விலை உயர முக்கிய காரணம். உதாரணமாக, கடந்த 2010ல் சீனாவில் மட்டும் 1 கோடி கார் விற்பனையானது'' என்றார். 

இதுபோன்ற சூழலில் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதி அளிக்கின்றன. இது நடைமுறை சாத்தியமற்றது என்றார் அவர்.  அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை ஒபாமா எடுத்து வருகிறார். அதேநேரம், தனது தேர்தல் பிரசாரத்துக்கு 3 இந்தியர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



காதர் முஹைதீன்  ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று இலவசமாக  மிதிவண்டி வழங்கப்பட்டது 
இதில் பள்ளியின் தாளாளர்  A.H. அஸ்லம் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு   மிதிவண்டியை வழங்கினார்
மற்றும் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் வழங்கினார்.  இதில் 210 மாணவர்கள் பயனடைதர்கள்.




Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


அஸ்ஸலாமு அழைக்கும்

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு.அப்துல் மஜீது,அவர்களின் மகனும்

 மு.செ.மு.முகமது இபுராஹீம்,மு.செ.மு.முஹ்மூது,ஆகியோரின் சஹோதரும் 
மர்ஹும் அப்துல் வாஹிது,வக்கீல் அப்துல் முனாப்,பெளஜில் அமீர் ஆகியோரின் தகப்பனாரும்,
J.ஜம் ரூத் முகமது அவர்களின் மாமனாரும்மான. மு.செ.மு.அப்துல் காதர் அவர்கள் 
இன்று(24 /02 /12 ) ஜும் ஆ தொழுகைக்கு பிறகு காலமாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 

நாளை(25 /02 /12 )காலை 8 :௦௦ மணி அளவில் மரைக்காப்பள்ளியில் நல்லடக்கம்செய்யப்படும்.     
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட என்கவுன்டர்  வேட்டை  குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.  கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் 5 பேர் கும்பல்  ரூ.25 லட்சம் கொள்ளையடித்தது.  இந்தச் சம்பவத்தின்போது கொள்ளையர்கள் இந்தி மற்றும் தமிழ் பேசியது தெரியவந்தது.  இதனால் முக்கிய வங்கிகளைத் தவிர, சிசிடிவி கேமரா, வாட்ச்மேன் இல்லாத வங்கிகளை போலீசார் தேர்வு செய்து, கண்காணிக்கத் தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து, மடிப்பாக்கம் கீழ்க்கட்டளை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதேபோல பகல் 1.30 மணிக்கு 5 கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் உள்ளே புகுந்து ரூ.14 லட்சத்தை கொள்ளையடித்தனர். இரு வங்கியிலும் ஒரே நேரத்தில், ஒரே கிழமைகளில், ஒரே வகையான கொள்ளைச் சம்பவம் நடந்ததால், ஒரே கும்பல்தான் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்திற்கு போலீசார் வந்தனர். இதனால்,  சிசிடிவி கேமரா உள்ள சில வங்கிகளில் ஆய்வு செய்தனர். அப்போது ஸ்டேட் பாங்க் வங்கியில் ஆய்வு செய்தபோது ஒருவன் சந்தேகப்படும்படியாக வங்கியைச் சுற்றிச் சுற்றி வந்தான். 

அவன் மீது சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வீடியோ காட்சியை மேடவாக்கம், பெருங்குடியில் கொள்ளை நடந்த வங்கிகளில் ஊழியர்களிடம் இந்த வீடியோவை காட்டியபோது, அவன்தான் கொள்ளையன் என்பதை உறுதி செய்தனர். பின் அந்த வீடியோவை எடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் கமிஷனர் போட்டுக் காட்டினர். இதை பார்த்த வேளச்சேரி பெரியார் நகர் நேதாஜி ரோடு ஏ.எல்.முதலி 2வது தெருவில் வசிக்கும் முருகன் என்பவர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது தமிழ்முரசு பத்திரிகையின் போஸ்டரைப் பார்த்துள்ளார். அதில் தனது அக்கா பார்வதி வசிக்கும், வீட்டில் வாடகைக்கு இருக்கும் வினோத்குமார் போன்று இருப்பதை உணர்ந்தார்.

உடனே தனது அக்கா பார்வதியிடம் சொன்னார். அவர் இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணிக்கு போன் செய்தார். ஆனால், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப்படையினர், நேற்று முன்தினம் இரவு கிண்டி போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கொள்ளையர்கள் எங்கு இருப்பார்கள், எப்படி இருப்பார்கள், அவர்களை எப்படி எல்லாம் பிடிப்பது என்று பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் படையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியும் இருந்ததால், அவர் போனை எடுக்கவில்லை.

அதேநேரத்தில், எப்படியும் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கருதிய பெண், தனது தம்பி முருகனை அழைத்து, போலீஸ்நிலையம் சென்று புகார் தெரிவிக்கும்படி கூறியுள்ளார். அவரும் சைக்கிளில் போலீஸ் நிலையம் வந்து, இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மீட்டிங்கில் இருப்பதால் பார்க்க முடியாது. என்ன விஷயம் என்று காவலர் கேட்டுள்ளார். அவரிடம் விஷயத்தை முருகன் தெரிவிக்கவும், உடனே துணை கமிஷனர் சுதாகரிடம் காவலர் தகவலை தெரிவித்தார்.

இது பற்றி கமிஷனர் திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திரிபாதி, கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் கிண்டி காவல்நிலையம் வந்தனர். அவர்கள் எப்படி பிடிப்பது என்று ஆய்வு செய்தனர். பின் வீட்டின் வரைபடம் வரையப்பட்டது. அதன்படி ஆயுதங்களுடன் போலீசார் கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். போலீசார் சுற்றி வளைத்ததைப் பார்த்த கொள்ளையர்கள், வீட்டுக்குள் இருந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் போலீசாரும் ஜன்னலை உடைத்து அதன் வழியாக சுட்டனர். 

அதேநேரத்தில் தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி, துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசீல் ஆகியோர் தலைமையிலான போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று, கொள்ளையர்களை சுட்டனர். அதேநேரத்தில் கொள்ளையர்களும் போலீசாரை நோக்கிச் சென்றனர். இரு தரப்பிலும் நடந்த சண்டையில் கொள்ளையர்கள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் இரு இன்ஸ்பெக்டர்களும் காயமடைந்தனர்.

அதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட கொள்ளையர்களின் உடல்களை மீட்ட போலீசார், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள், ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். பின் சண்டை நடந்த இடத்துக்கு கமிஷனர் திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களையும் பார்த்து விசாரணை நடத்தினர்.

அந்த திக்...திக் வினாடிகள்

இரவு 10 மணி: கொள்ளையர்கள் தங்கி இருப்பதாக கிண்டி போலீசாருக்கு ரகசிய தகவல்.
10.15: கிண்டி இன்ஸ்பெக்டர் மீட்டிங்கில் இருப்பதாக புகார் தாரரிடம் ஏட்டு பதில் அளித்தார்.
11.00: கொள்ளையர்கள் குறித்து துணை கமிஷனரிடம் முருகன் புகார் தெரிவிக்கிறார்.
11.35: இணை கமிஷனர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் அவசர ஆலோசனை.
11:50: போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கு கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு 12.00: கொள்ளையர்களை சுற்றி வளைக்க கமிஷனர் உத்தரவிடுகிறார்.
12.45: கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் ஏ.எல்.முதலியார் தெரு வருகிறது.
அதிகாலை 1 மணி: பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. போலீசார் மீது தாக்குதல் நடத்துகின்றனர் கொள்ளையர்கள். போலீசாரின் எதிர் தாக்குதலில் 5 கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலி. 2 இன்ஸ்பெக்டர்கள் காயம்.
2.00: சம்பவ இடம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை இடங்களில் பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டனர்.
2.05: மீட்கப்பட்ட உடல்கள் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
2.15: கமிஷனர் திரிபாதி காயம் அடைந்த இன்ஸ்பெக்டர்களை பார்க்க வருகிறார். தொடர்ந்து கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு வந்தனர்.
6.00: அனைத்து மக்களும் முற்றுகையிட்டதால் ஏஎல் முதலியார் தெரு பகுதி ஸ்தம்பித்தது.

சென்னையில் முதல் முறையாக 5 பேர் என்கவுன்டர்

இதுவரை நடந்த என்கவுன்டர்கள்:
1996: ஆசைத்தம்பி, கபிலன்
1998: கைபாம் மோகன்
1999: மிலிட்டரி குமார்
2002: சஞ்சய் காட்டியா, முருகேசன், காக்கா ரமேஷ், ஸ்டாலின், சுரா(எ) சுரேஷ், ராஜாராம், புதுக்கோட்டை சரவணன்(ஒரே இடம்), சின்னமாரி உட்பட 3 பேர் (ஒரே இடம்)
2003: அயோத்தியா குப்பம் வீரமணி, வெங்கடேச பண்ணையார்
2005: ரமேஷ், மணிகண்டன்
2006: நாகூரான், பங்க்குமார்
2008: வெள்ளை ரவி, குணா(ஒரே இடம்)
2008: ஜெயக்குமார், சுடலை மணி
2008: பாபா சுரேஷ்
2010: திண்டுக்கல் பாண்டியன், வேலு(ஒரே இடம்)
மாவட்டங்களில்
நடந்த என்கவுன்டர்
2007: மதுரை மாரி முத்து
2008: திருச்சி பாம்பாலாஜி
சிவகாசி சுந்தரமூர்த்தி
கும்பகோணம் மிதுன்
2009: காஞ்சிபுரம் குரங்கு செந்தில்
2010: காஞ்சிபுரம் கொற நடராஜன்
2010: மயிலம் அசோக்குமார்
சாத்தூர் குமார்.
எல்லா என்கவுன்டரிலுமே தனியாகவோ, 3 பேரை மட்டுமோ சுட்டுக் கொன்றனர். ஆனால் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் சென்ற தீவிரவாதி இமாம் அலி மற்றும் அவருடன் இருந்த 4 பேர், தமிழக போலீசாரால் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், சென்னையில் 5 பேர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது இதுதான் முதல்முறை.
நன்றி 
தினகரன்

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Burglar
சென்னை: சென்னை வங்கிக் கொள்ளைகளுக்கு மூல காரணமாக, தலைவனாக செயல்பட்டு தற்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவன், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்த வினோத்குமார் என்பது தெரிய வந்துள்ளது.

வினோத்குமார் குறித்த தகவல் போலீஸாருக்கு தற்செயலாகத்தான் கிடைத்தது. கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் துப்பு துலங்குவது பெரும் சிக்கலாக இருந்தது. இந்த நேரத்தில்தான் போலீஸாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. இரு வங்கிகளிலும் ஒரே மாதிரியாக கொள்ளை நடந்திருப்பதால் நிச்சயம் நோட்டம் பார்த்துதான் இந்தக் கொள்ளையில் திருடர்கள் இறங்கியிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.

இதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட புறநகர்ப் பகுதி வங்கிகளை அணுகி அங்குள்ள கேமராக்களில் பதிவானதைப் பார்த்தனர். பின்னர் அந்தக் காட்சிளை சம்பந்தப்பட்ட இரு வங்கிகளின் ஊழியர்களிடமும் காட்டினர். அதில் யாரையாவது அடையாளம் தெரிகிறதா என்று கேட்டபோது ஒரு நபரை வங்கி ஊழியர்கள் சுட்டிக் காட்டினர். இவன்தான் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்குத் தலைவன் போல வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்று அத்தனை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக கூறினர்.

இதையடுத்து போலீஸாருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. கொள்ளைக் கும்பலின் தலைவனாக இவன் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவன் குறித்த தகவலை சேகரித்தபோது அவனது பெயர் வினோத்குமார் என்றும், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கல்லூரிக்கு ஒரு தனிப்படை விரைந்து வந்தது. வினோத்குமார், 9 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் சேரும்போது கொடுத்த புகைப்படத்தைப் பெற்று, அதை வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்துடன் ஒப்பிட்டபோது இருவரும் ஒருவரே என்பது தெரிய வந்தது.

இதையடுத்து இவன்தான் அவன் என்பது உறுதியானது. வினோத்குமார் படிப்பை முடித்ததும் தனது சொந்த ஊருக்குப் போகவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கியிருந்துள்ளான். கல்லூரிக்குப் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளான். அதாவது தங்களது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை இந்தக் கல்லூரியில் சேர்த்து விட்டால் அதற்கு புரோக்கர் கமிஷனாக கல்லூரி நிர்வாகம் இவனுக்கு கணிசமாக பணம் கொடுக்குமாம். இந்த வேலையை இவன் செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில்தான் அவன் தனது மாநிலத்தைச் சேர்ந்த சிலரை இங்கு வரவழைத்து வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரிய வந்துள்ளது.

கல்லூரிக்கு புரோக்கர் வேலை பார்த்ததன் மூலம் மிகப் பெரிய அளவில் பணம் கிடைத்ததால் இங்கேயே தங்கி வேறு வேலை பார்க்காமல் புரோக்கராகவே மாறிப் போயிருந்தான். தற்போது வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸாரின் புல்லட்டுகளுக்கு இரையாகி விட்டான்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்கிறது

 
ஈரான் பிரச்னை காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை மார்ச் முதல் வாரத்தில் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அணுஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நீண்டகால கோரிக்கையை ஈரான் நிராகரித்து வருகிறது. எனவே, ஈரானை தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஈரானுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன. 

இந்நிலையில், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளையை ஈரான் அதிரடியாக நிறுத்தியது. இதையடுத்து, இந்தியா, சீனா ஆகியவை ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ஈரானில் பிரச்னை நிலவுவதால், கச்சா எண்ணெய் விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத வகையில், ஒரு பேரல் விலை 120 டாலராக உயர்ந்துள்ளது. 

ஏற்கனவே, ரூபாய் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.3 வரை இழப்பு ஏற்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும், உத்தர பிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக விலை உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது. 

கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்துள்ளதால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4 வரை உயரும் என்று நேற்று முன்தினம் தகவல்  வெளியானது. இந்நிலையில், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3ம், சமையல் எரிவாயு விலையை ரூ.50ம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.14ம், சமையல் எரிவாயு விலையில் சிலிண்டருக்கு ரூ.390ம் நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி 
தினகரன் 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


விண்வெளியில் காணப்படும் ஒரு கறுப்பு நிற ஓட்டையால் பெரிய விண்மீன்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது பூமியில் இருந்து 29 கோடி ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் கூட்டத்தில் கருப்பு நிற ஓட்டை இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சியும் மேற்கொண்டனர்.

மேலும், விண்வெளியில் காணப்படும் விண்மீன்கள் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. இந்த கருப்பு நிற ஓட்டைகள் மூலம் சிறிய விண்மீன்கள் அழியும் ஆபத்து ஏற்படும். தொடக்கத்தில் இருந்தே சிறிய விண்மீன்களை அழிக்கும் கருப்பு நிற ஓட்டை மெல்ல மெல்ல பெரிய விண்மீன்களையும் அழிக்கும் ஆபத்து உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


சீனாவுடன் எவ்வித ஆயுதப் போட்டியிலோ அல்லது மோதலிலோ ஈடுபட அமெரிக்கா விரும்பவில்லை என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.ஆசிய பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா தனது படைகளைக் குவிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அப்பகுதி நாடுகளின் விருப்பத்திற்கேற்ப இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சமாதானமும் கூறி வருகிறது.ஆசியாவில் வல்லரசாக உருவாகி வரும் சீனாவுக்கு, இந்நடவடிக்கைகள் எரிச்சலையும், கோபத்தையும் கிளப்பியுள்ளன.

இந்நிலையில், பென்டகன் உயரதிகாரி மார்டின் டெம்ப்சி இதுகுறித்து நேற்று கூறியதாவது:சீனாவுடன், அமெரிக்கா தனது உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த உறவுகளின் விளைவு, சீனாவுடன் ஆயுதப் போட்டியாகவோ அல்லது வேறு வகையிலோ மோதுவதாக இருக்காது.அதேநேரம் பசிபிக் மண்டலத்தில், அமெரிக்கா தனது வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளும். அங்கிருந்து விலக அமெரிக்கா எப்போதும் விரும்பாது.இவ்வாறு டெம்ப்சி தெரிவித்தார்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


அதிராம்பட்டினம் தக்வா பள்ளிக்கு சொந்தமான மார்க்கெட்டில்(பெரிய கடைத்தெரு) மீன் வியாபாரம் செய்துவருபவர்களுக்கும்  தக்வா பள்ளி நிர்வாகத்திற்கும் பெரியளவில் ஏற்பட்டுள்ள விரிசல்களின் காரணமாக நமதூர்சேர்மன் மார்கெட் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தக்வா நிர்வாகத்துடன் சேர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கில் களம்இறங்கினார் இதன் விளைவு அவருக்கும் மீன்மார்க்கெட் வியாபாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஆங்காகங்கே இப்பிரச்சனைகளோடு சேர்மன் அஸ்லம் அவர்களின் பெயர் பரவத்தொடங்கியது.
 அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி பணிகளை சேர்மன் அஸ்லம் அவர்கள் சரிவர செய்துவரவில்லை என்ற கருத்து நமதூர்வாசிகளிடம் பரவியிருக்கின்றன. சில பேர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே பரவலாய் பல  வார்த்தைகளை மக்கள் கோர்த்துபேசி வருகிறார்கள் இதெல்லாம் உண்மையா? ஏன் இப்படி நடக்கிறது என்ற உண்மைச்சம்பவத்தை உள்ளபடி மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்ற நன்னோக்கில் அதிரை மக்கள் பலரிடமும் பேட்டிக்கண்டு கேள்விகளை தொகுத்து அதிரைச்சேர்மன் அஸ்லம் அவர்களை சந்தித்து தெளிவுபடுத்தவேண்டும் நோக்கில் உங்களுக்காக அதிரை பிளஸ்...

   அதிரைபிளஸ் நிருபரும் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்களுக்குமிடையில் நடைபெற்ற பேட்டியின் சிறிய தொகுப்பு :
நிருபர் : தற்பொழுது உங்கள் பெயர் மார்க்கெட் பிரச்சனையில் விருவிருப்பாக பேசப்படுகிறது.உங்களுக்கும் மார்க்கெட்டிற்கும் என்ன பிரச்சனை?
சேர்மன் :எனக்கும் மார்க்கெட்டிற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. மார்க்கெட்டில் கடைக்கட்டுவதற்காக அந்த இடத்தை பார்ப்பதற்காக என்னை தக்வா பள்ளி நிர்வாகம் அழைத்து சென்றார்கள். நான் அந்த இடத்தை பார்ப்பதற்காக சென்றபோது என்னை அதனை பார்க்கவிடாமல் தகாத வார்த்தைகளால் என்னை திட்டினார்கள்.
நிருபர் : இந்த பிரச்சனையை நீங்கள் தலைமை ஏற்று  தீர்வுகாணலாமே?
சேர்மன் : இந்த பிரச்சனை அனைத்து முஹல்லா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நிச்சயம் இந்த பிரச்சனைகள் பற்றி தெளிவாக அறிந்திருப்பார்கள். மேலும் அதிராம்பட்டின பேரூராட்சி நிர்வாகம் சரிவர தெருக்களில் குப்பை கூளங்களை சுத்தப்படுத்துவதில்லை என்ற பிரச்சனை சம்மந்தமாக கேள்வி கேட்கப்பட்டது.
நிருபர் : ஒருசில இடங்களில் நீங்கள் குப்பைகளை அகற்றக்கூடாது என்று கூறியிருக்கிறீர்கள் ஏன்?
சேர்மன் : குப்பைகளை சரிவர குப்பைத்தொட்டிலில் கொட்டாமல் வெளியிலேயே போட்டுவிடுவதால் காற்றில் ஆங்காங்கே பரவுகிறது இதனால் நோய்கள் பல பரவுகிறது. குப்பைத்தொட்டிகள் ஆங்காங்கே வைத்தும் குப்பைகள் வெளியே கொட்டாமல் இருப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
நிருபர் : ஏரிப்புறக்கரைக்குட்பட்ட பகுதிகளை அதாவது சாணாவயல், சவுக்குகொல்லை பகுதிகளை அதிராம்பட்டினத்தோடு இணைக்கப்பபோவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா?
சேர்மன் : இதுவரை இதுபோன்ற தீர்மானம் எதுவும் கொண்டுவரவில்லை. இனிமேல் சேர்க்கவும் முடியாது. சேர்த்தால் இந்த ஊர் நகராடசியாக மாறலாம். அதற்குரிய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை
சுத்தமிருந்தால் சுகமாய் வாழலாம். சுத்தத்தை பற்றி அதிரை பிளஸில் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டேயிருங்கள் மக்களின் சேவைகளை அறிந்து அதிரை பேரூராட்சி நிச்சயம் நன்மைகள் பயக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை நீங்கள் தெளிவுபடுத்துங்கள் என்று கூறினார்.







 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அதிரையில் அடிக்கடி நடக்கும் RDO வாகன சோதனை !


அதிரையில் ECR ரோட்டில் RDO முருகன் தலைமையில் வாகன சோதனை நடைப்பெற்றது
இதில் பல வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன இதில் ஓட்டுனர் உரிமம்,வாகன காப்பிடு,
மற்றும் வாகன உரிமம் பரிசோதித்தனர். RDO கூறுகையிள் ECR ரோட்டில் அதிகபடியான வாகனங்கள்
விபத்துக்குள்ளாகிறது.வாகனம்  வைத்திருப்பவர்கள் பார்த்து கவனமாக செல்லும்படி RDO முருகன் அறிவுறுத்தினார் ,மேலும் முக்கியம்மாக தலை கவசம் அனியும்படி கேட்டுக்கொண்டார்.
அதிரை பிளசின்  வேண்டுகோள் 
வாகன காப்பீடு 
ஓட்டுனர் வுரிமம்
வாகன புத்தகம்  போன்ற அனைத்தும் வாகனம் ஓட்டும்போது எடுத்துசெல்ல வேண்டுகிறது. வாகனத்தை மெதுவாகவும் பாதுகாப்புடனும் ஒட்டுமாறு கேட்டுகொள்கிறோம். 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 
வாஷிங்டனில் எம்.பி.க்கள் கூடும் கேபிடால் கட்டிடத்தை தகர்க்க, மனித வெடிகுண்டாக வந்த ஆசாமியை சரியான நேரத்தில் எப்.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். மொராக்கோவை சேர்ந்தவர் அமின் எல் கலீப்பி. வயது 29. இவர் அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் ஆர்லிங்டன் பகுதியில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பல சதி திட்டங்களை தீட்டியதும், பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதுகுறித்து இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டாக இவரது நடமாட்டத்தை அமெரிக்க போலீசார் (எப்.பி.ஐ.) கண்காணித்து வந்தனர். இந்நிலையில், வாஷிங்டன் கேபிட்டால் ஹில்ஸ் பகுதியில் எம்.பி.க்கள் கூட்டம் நடக்கும் பார்லிமென்ட் கட்டிடத்தை தகர்க்க அமின் சதி திட்டம் தீட்டியது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. 

உடலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு கட்டிடத்தின் அருகில் சுற்றியபோது, எப்.பி.ஐ. அதிகாரிகளும் போலீசாரும் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து எப்.பி.ஐ. உதவி இயக்குனர் மெக்ஜன்கின் கூறுகையில், ÔÔஅமினுக்கும் அல் குவைதா தீவிரவாதி இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறதுÕÕ என்றார். விசாரணையில், இயந்திர துப்பாக்கியை இயக்கும் முறை, வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு இயக்குவது, குண்டுகளை வெடி க்க செய்வது ஆகியவற்றில் சிலரிடம் அவன் பயிற்சி பெற்றது தெரியவந்தது. அமின் கைது ஆனதை தொடர்ந்து கேப்பிடால் கட்டிடத்தின் அருகில் உள்ள வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் மீண்டும் தீவிரவாதி நடமாட்டம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்தார். இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.


நன்றி 
தினகரன் 


Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati




உலகிலேயே மிகச்சிறிய பச்சோந்தியை(பல்லி இனவகை) உயிரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பச்சோந்திகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடலின் நிறத்தை மாற்றும் வல்லமை உடையது. மடகாஸ்கர் நாட்டில் உள்ள காடுகளில் ஜெர்மன் உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய உயிரினங்களை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது 18 மில்லி மீட்டர் உயரமே கொண்ட பச்சோந்திகள் அந்த காடுகளில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே இதுதான் சிறிய பச்சோந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

தமிழகம் முழுவதும் முதல் தவணையாக இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நாடு முழுவதும் நடக்கிறது. அதிரையில் இன்று ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதில் பல குழந்தைகள் பலன் அடைந்தார்கள்  



Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


தமிழக அரசு வல்லுநர் குழுவுடன் போராட்டக் குழு இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் முடிந்தது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பான நிலையில் தான் உள்ளது என்று வல்லுநர் குழுவில் உள்ள சீனிவாசன் கூறியுள்ளார். இதனையடுத்து, உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவுடன் வல்லுநர் குழு பேச்சு நடத்தியது. ஆலோசனை கூட்டத்தில் தமிழக வல்லுநர் குழுவினர் விஜயராகவன், இனியன், அறிவொளி, சீனிவாசன் பங்கேற்றனர். 

பேரலை வந்தாலும் பாதிக்காத அணுமின் நிலையம்

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வல்லுநர் குழு ''பேரலை வந்தாலும் பாதிக்காத உயரத்தில் அணுமின் நிலையம் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 25 அடி உயரத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 திறன் கொண்ட நிலநடுக்கம் தாக்கினாலும் உலைக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறினார்கள். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் 'மக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததால் மக்களின் உணர்வுகளை அறிய முடிந்தது. உணர்வுகளை புரிந்து கொண்டதால் மக்களை நேரடியாக சந்திக்க தேவையில்லை' இவ்வாறு கூறினார்கள்.

மக்களின் அச்சத்தை தவிர்ப்பது எங்கள் பணி அல்ல
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்களின் அச்சத்தை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழக அரசு வல்லுநர்களிடம் கேட்டதற்கு 'மக்களின் அச்சத்தை தீர்க்க வேண்டியது தங்கள் பணி இல்லை' என்று கூறினார்கள். மேலும், அணுமின் நிலையத்தை மூடும்படி போராட்டக் குழு தங்களிடம் கூறவில்லை என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. மேலும் வல்லுநர்கள் கூறுகையில் 
'கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3வது தலைமுறையை சேர்ந்த முன்னேறிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் முன்னேறி வடிவமைப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டக் குழுவுடன் நடைபெற்ற பேச்சு சுமூகமாக இருந்தது' என்றனர்.

பேச்சுவார்த்தை 'ஒரு தொடக்கம் தான்' : போராட்டக்குழு
நெல்லை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுமார் 2 மணிநேரமாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார், தமிழக வல்லுநர் குழுவுடன் நடைபெற்று இந்த பேச்சுவார்த்தை 'ஒரு தொடக்கம் தான்' என்று கூறினார். மேலும் உதயகுமார் கூறுகையில் 'கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களை வல்லுநர் குழு நேரடியாக சந்திக்க வேண்டும். மேலும், போராட்டக்குழுவின் நிபுணர் குழுவுடன் அரசு நியமித்த குழு ஆலோசிக்க வேண்டும். இந்நிலையில் தமது கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு தெரிவிப்பதாக அரசு குழு என்னிடம் கூறியுள்ளது.' எனக் கூறினார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக வல்லுநர் குழுவின் அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati