பாக்தாத்: சிரியாவில் உள்நாட்டுக் கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்துக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 9 ஆயிரம் அகதிகள் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
சிரியாவிலிருந்து எல்லை தாண்டி அகதிகள் தொடர்ச்சியாக வருகை தருவதாகவும் அவர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஈராக்கின் குர்திஷ் பிராந்திய குடியேற்றத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை மொத்தம் 9 ஆயிரம் அகதிகள் ஈராக் வந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் அகதிகளை பராமரிப்பது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் குர்திஷ் பிராந்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அதிகரித்து வரும் சிரிய அகதிகளை பராமரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் இது ஈராக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடும் என்றும் ஈராக் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சிரியாவில் 2011-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அது தற்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 President Wagon From Ambassador To Mercedes Benz கொல்கத்தா: பிரணாப் முகர்ஜியின் முகவரி மட்டுமல்ல, அவரது காரும் கூட மாறப் போகிறது. இதுநாள் வரை தனது மேற்கு வங்க மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட அம்பாசடர் காரையே பயன்படுத்தி வந்த பிரணாப் முகர்ஜி இனிமேல் மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் பயனபடுத்தப் போகிறார்.
கடந்த ஐம்பது ஆண்டு்களாகவே அம்பாசடர் காரில் மட்டுமே பயணித்து வந்தவர் பிரணாப் முகர்ஜி. ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அவர் முதல் முறையாக காரை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவருக்கான காராக ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 காரே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீளமான லிமோசின் காரான இந்த பென்ஸானது, பல்வேறு வசதிகளுட்ன் கூடியதாகும். டிரைவருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையேயான பகுதி, சவுண்ட் புரூபுடன் கூடிய கண்ணாடியால் பிரிக்கப்பட்டுள்ளது.
பிடித்தமான இசையைக் கேட்கக் கூடிய வசதி உள்ளே இருக்கிறது. அதேபோல திரைப்படம் பார்க்கும் வீடியோ திரை வசதியும் உள்ளது. டிவியும் உள்ளது. செய்திகளையும் கேட்கலாம், பார்க்கலாம். அனேகமாக பிரணாப் முகர்ஜி செய்தி கேட்பதையே விரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தக் காரின் பாதுகாப்பு வசதி மிகவும் சிறப்பானது. அதாவது ஏவுகணையை விட்டுத் தாக்கினாலும் கூட இது சேதமடையாதாம். அந்த அளவுக்கு பக்காவான பாதுகாப்பு வசதி இதில் உள்ளது. அதேபோல எத்தனை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டாலும் ஒரு குண்டு கூட உள்ளே போகாது. கிரேனட் தாக்குதலிலிருந்தும் கூட இது தப்பி விடும். வெடிகுண்டுகள் வெடித்தாலும் கூட காருக்கு ஒன்றும் ஆகாதாம்.
இதுகுறித்து கார் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், ஏகே.47, எம் 67 ஆகிய துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டாலும் காருக்கு ஒன்றும் ஆகாது. அதேபோல அதி நவீனமான அமெரிக்க தயாரிப்பு கிரெனேடைத் தூக்கி வீசினாலும் காருக்கு ஒன்றும் ஆகாது.
காரின் கண்ணாடிகள் அனைத்தும் 60 மில்லிமீட்டர் பாலிகார்பனேட் கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடிகள் ஆகும்.
காரின் எரிபொருள் டேங்க்கின் கொள்ளளவு 90 லிட்டர் ஆகும். காரில் ஏதாவது தீவிபத்து ஏற்பட்டு விட்டால், எரிபொருள் டேங்க் தானாகவே மூடிக் கொள்ளும்.
டயர்கள் கூட புல்லட் புரூப் கொண்டவை. அதாவது டயரைப் பார்த்து யார் சுட்டாலும் கூட டயருக்கு ஒன்றும் ஆகாது. மேலும் கார் டயரில் சுத்தமாக காற்றழுத்தம் இல்லாவிட்டாலும் கூட, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில், 30 கிலோமீட்டர் வரை தொடர்ந்து காரை ஓட்ட முடியும்.
காருக்குள் இருப்போர் ஏதாவது பிரச்சினை என்றால் எந்த இடத்திலிருந்தாலும் பேனிக் அலார்மை ஒலிக்க வைக்க முடியும். பேனிக் அலார்மை தொட்டு விட்டால், காரின் அனைத்துக் கதவுகளும் தானாகவே மூடிக் கொள்ளும். அதேசமயம், காருக்குள் இருப்போர் உள்ளே இருக்கும் தகவல் தொடர்பு வசதி மூலம் வெளியில் இருப்போருடன் பேச முடியும்.
இந்தக் காரில் 14 ஸ்பீக்கர்களுடன் கூடிய அட்டகாசமான ஹர்மான் கார்டன் லாஜிக்7 ஸ்டீரியோ மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக ஜிபிஎஸ் சாட்டிலைட் நேவிகேஷன் வசதியும் உள்ளது. போதிய அளவுக்கு வெளிச்சம் தரும் வகையிலான விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கார் சீட்டுகள் அருமையான லெதர் குஷன் சீட்களாகும். இந்த இருக்கைகள் மழை மற்றும் குளிர்காலத்தில் மிதமான சூட்டைக் கொடுக்கும். அதேசமயம், வெயில் காலத்தில் குளிர்ச்சியைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக சிறிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவர் கேபின் தவிர குடியரசுத் தலைவர் அமரும் பகுதியில் இரண்டு வரிசை சீட்கள் உள்ளன. இரண்டு வரிசையும், எதிரும் புதிருமாக இருப்பது போல அமைக்கப்பட்டுள்ளன. அதாவது குடியரசுத் தலைவர், தன்னுடன் பயணிப்போருடன் அமர்ந்து பேசிக் கொண்டு செல்லும் வகையில் இந்த இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
காருக்குள்ளேயே சிறிய பிரிட்ஜும் உள்ளது. எனவே எத்தகைய சூடான பிரச்சினையாக இருந்தாலும் ஏதாவது கூலாக சாப்பிட்டுக் கொண்டு பேச முடியும்.
இப்படி சகல வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காரின் விலை ஜஸ்ட் ரூ. 12 கோடிதான். இதுவரை பிரணாப் முகர்ஜி பயன்படுத்தி வந்த புல்லட் புரூப் பொருத்தப்பட்ட அம்பாசடர் காரின் விலை ரூ. 10 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

போபால்: ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது என்று மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைசச்ர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
கடந்த 9ம் தேதி குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு சிறுமியை நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில்,
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் உடைகள் இருக்க வேண்டும். அவர்களின் பேஷன், வாழ்க்கை முறை மற்றும் நடத்தை இந்திய கலாச்சாரத்தின்படி இருக்க வேண்டும்.
ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் வகையில் உள்ளன என்றார்.
விஜயர்வர்கியா இது போன்று கருத்து தெரிவிப்பது இது ஒன்றும் முதல் முறையன்று. அவர் தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே பெண்களின் ஆடைகள் பற்றி பேசுவதாகக் கூறப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Pranab Mukherjee Wins Presidential Election டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.
இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார்.சங்மாவுக்கு சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் உற்சாகமாகக் கொண்டாடின. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்பு
நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25-ந் தேதி முற்பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டுவரை பிரணாப் முகர்ஜி பதவி வகிப்பார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati