மூணாறு:கேரள சிறுமி கற்பழிக்கப்பட்டதை மறைக்க அவரது பெற்றோரிடம், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தரப்பில் பல லட்ச ரூபாய் பேரம் பேசியது, விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

கேரளா, பம்பனார் லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்த சந்திரன் - சுசிலா தம்பதி மகள் மேகலா, 15 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில், வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன், அங்கு கற்பழித்து கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ராஜ்குமார், உதவியாளர் அன்பரசன், மகேந்திரனை, கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
மேகலாவை தமிழகத்திற்கு அழைத்துச் சென்ற ஏஜன்டுகள் பாம்பனார் குமாரபுரம் காலனி பன்னீர்செல்வம், 48, குமுளி செங்கரை விஜயகுமார், 36, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மற்றும் மற்றொரு ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் மேகலாவின் பெற்றோரை சந்தித்து, "வேலைக்கு அனுப்பினால் அதிக தொகை கொடுப்பதாக'க் கூறியுள்ளனர். இதற்காக விஜயகுமார், பன்னீர்செல்வத்திற்கு தலா 3,000 ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது. கொலைக்கு பின், ஏஜன்ட் ஹரிகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார்.

மேகலா ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த போது, சம்பவத்தை மறைக்க, அவரது பெற்றோரிடம், பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதும், விசாரணையில் தெரிந்துள்ளது.

இதனிடையே, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார், ஜெய்சங்கர், அன்பரசன், மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பன்னீர்செல்வத்தை கேரள மாநிலம் பீர்மேடு பகுதியில் கைது செய்த போலீசார், அவரை பெரம்பலூருக்கு கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

லாகூர்:குழந்தை பெரிய முகத்துடன் பிறந்ததால், அதை உயிரோடு புதைக்க முயன்ற தந்தையை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கனிவால் நகரத்தை சேர்ந்தவர் சந்த்கான். இவருக்கு, ஏற்கனவே, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம், இவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தை, பெரிய முகத்துடன் இருந்ததால், அதை அவலட்சணமாக கருதிய சந்த்கான், மனைவிக்கு தெரியாமல், குழந்தையை எடுத்துச் சென்று புதைக்க முடிவு செய்தார்.மசூதிக்கு எடுத்துச் சென்று, இறுதிச் சடங்கு செய்த போது, குழந்தை திடீரென அழுதது. இதைக் கண்டதும், அங்கிருந்தவர்கள் போலீசுக்கு புகார் செய்தனர். "குழந்தை அவலட்சணத்துடன் பிறந்ததால், அதை புதைக்க நினைத்தேன்' என, சந்த்கான் தெரிவித்துள்ளார். அவர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 கொழும்பு:இலங்கையில், போரின் போது வீடுகளை இழந்த, 43 ஆயிரம் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டித் தர, இந்தியா முன்வந்துள்ளது.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், வீடுகளை இழந்து, அகதிகள் முகாமுக்கு சென்றனர். விடுதலை புலிகளுடனான சண்டை, முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன.இதற்கிடையே, தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர, இந்தியா உறுதியளித்தது. இதன் ஒரு கட்டமாக, யாழ்பாணம், கிளிநொச்சி மற்றும் மூன்று மாவட்டங்களில் ஏற்கனவே ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.இந்நிலையில், வடகிழக்கு மாகாணங்களில், 43 ஆயிரம் வீடுகளை 1,500 கோடி ரூபாய் செலவில், கட்டித் தருவதற்குரிய ஒப்பந்தம், கடந்த 13ம் தேதி, கொழும்பில் கையெழுத்தானது. இந்திய தூதர் அசோக் காந்தா, இலங்கை பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷே ஆகியோர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.ஒளிவு மறைவற்ற முறையில், பயனாளிகளுக்கு, வீடுகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இந்திய தூதரகத்தின் மூலம், உரிய பயனாளிகளின் வங்கி கணக்கில், பணம் செலுத்தப்பட உள்ளதாக, இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

லண்டன்:லண்டன் தபால் அலுவலகத்தில், 3.5 கோடி ரூபாய் திருடி விட்டு, ஊமையாக நடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி இந்தியர் அம்ரித்பால் மெகாத்,26. கடந்த 2008ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, மான்செஸ்டரில் உள்ள தபால் அலுவலகத்தில், மற்றொரு பெண்ணின் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி, 3.5 கோடி ரூபாய் வரை திருடியுள்ளார். இதையடுத்து, 2009ம் ஆண்டு, இவர் பிடிபட்டார். ஆனால், பிடிபட்ட நாள் முதல் கொண்டு, இவர் ஊமையாகவே நடித்துள்ளார். இதனால், இவரது வாக்குமூலத்தை கோர்ட்டில் பதிய முடியாமல் போனது.பஞ்சாப் மொழி தெரிந்த மனோதத்துவ நிபுணர் மூலம், இவருடன் பேசச் செய்து, கோர்ட்டில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பின், முதன் முறையாக, அவர் நேற்று முன்தினம் கோர்ட்டில் பேசினார். "கடவுள் என்னை ஊமையாக்கி விட்டார்' என, நீதிபதியிடம் அம்ரித்பால் கூறினார்.ஆனால், அவரது பித்தலாட்டத்தை ஏற்காத நீதிபதி, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பு கூறினார். இரண்டு மாத காலத்துக்கு, மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறவும், அம்ரித்பாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

ஈரோடு:"டச் ஸ்கிரீன்' மொபைல் போன்களில், வக்கிர உணர்வைத் தூண்டும் விதமாக, ஆபாச விளையாட்டுகள் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்தியாவில், மொபைல் போன்கள், பட்டி தொட்டி வரை பரவ, சீன மொபைல்களே காரணம். நோகியா, சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட மொபைல் போன் நிறுவனங்கள், ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கி, மார்க்கெட்டில் அறிமுகம் செய்தால், மறு வாரமே, அதே மாடல்களில், நெட், விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்ட, சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்து விடுகின்றன.இந்நிறுவனங்களின் மொபைல் போன் ஒன்றின் விலை, 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு வசதியுடன் கூடிய, சீன மொபைல், வெறும், 1,000 ரூபாயில் துவங்கி, அதிகபட்சமாக, 5,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதிகப்படியான மாடல்கள், குறைந்த விலை என்பதால், இதையே மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்."கீ பேட்' இல்லாமல், "டச் ஸ்கிரீன்' மாடலில் மொபைல் போன்கள், விற்பனைக்கு வந்துள்ளன. கம்பெனி தயாரிப்புகளைப் போல வசதியும், இளைஞர், சிறுவர்களைக் கவரும் வகையில், ஆபாச விளையாட்டுகளுடனும் விற்பனை செய்கின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் விதமான விளையாட்டுகள், இந்த போன்களில் உள்ளன.ஒரு பெண், முழுமையான ஆடையுடன் நிற்கும் படம் உள்ளது. "டச் ஸ்கிரீனில்' கை வைத்து சுரண்டினால், அப்பெண் போட்டுள்ள ஆடை, கொஞ்சம் கொஞ்சமாக உரிகிறது. ஒரு கட்டத்தில், "டூ பீஸ்' ஆடையுடன் பெண் இருப்பது போல படம் வருகிறது.மற்றொரு படத்தில், பெண் ஒருவர் நிற்கிறார். டச் ஸ்கிரீனில் இருந்து, நாம் காற்றை ஊதினால், அந்த பெண்ணின் ஆடை மேல் நோக்கி பறக்கிறது. வெட்கத்தில் அந்தப் பெண் கத்தும் சத்தத்தை மொபைல் வெளிப்படுத்துகிறது.
இது போன்று பல விளையாட்டுகளை, இணையதளத்தில் இருந்து, மொபைல் போனில், பதிவு இறக்கம் செய்து, விற்பனை செய்கின்றனர்.
கம்பெனி தயாரிப்புகளில், இது போன்ற ஆபாச விளையாட்டுகள் இல்லை; சீன போன்களில் மட்டுமே உள்ளது. கடைக்காரர்கள், வியாபார உத்திக்காக, இதுபோன்ற பதிவு இறக்கத்தை செய்துள்ளனர். தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி, தங்களின் சாதாரண மொபைல்களைக் கொடுத்து, இது போன்ற, "டச் ஸ்கிரீன்' மொபைல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சைபர் கிரைம் போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati