தொழிலாளர்களுக்கான தேர்வு இல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதற்கு 40 ஆயிரம் இந்தியர்களுக்கு கூடுதலாக அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா , ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தக உறவை அதிகரிப்பது தொடர்பாக இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இதுதொடர்பான தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, தொழிலாளர்களுக்கான தேர்வு இல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்வதற்கு 40 ஆயிரம் இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது. இதில் பிரிட்டனில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும்.
ஐரோப்பிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 12 சதவீத பங்கு வகிக்கும் பிரிட்டன், 40 ஆயிரத்தில் 30 சதவீதம் இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு தேவைப்படுவதாக கூறியுள்ளது. அண்மையில் பிரிட்டன் வெளிநாட்டவர்களுக்கான விசா நடைமுறைகளை கடுமையாக்கியது. இந்நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் இந்தியர்கள் குறிப்பாக ஐ.டி. ஊழியர்கள் 6 மாதங்களுக்கு தங்கி பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதற்காகவே ஐரோப்பிய யூனியன் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments














