பெண்களுக்கும் ஆண்களைப்போலவே மாரடைப்பு நோய் ஏற்படும், ஆனால் அதற்கான அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களுக்கு வித்தியாசமானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாரடைப்பு குறித்த அறிகுறிகளை பெண்கள் தெரிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக்கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண்களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அறிகுறிகள் என்னென்ன?
இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும்.
புகைப்பிடிக்கும் பெண்கள்
இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.
புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது.
உடல் எடையை கவனியுங்கள்
மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடையை பராமரிப்பது, சத்தான உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துணவுகள்
ஆரோக்கியமான இருதயத்திற்கு ஊட்டச்சத்துள்ள உணவைச் சாப்பிடுங்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன.
பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். எனவெ ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Why India Voted Against Sri Lanka  கொழும்பு: கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்ததால், அதற்கு பிரதியுபகாரமாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்திய அரசு வாக்களிக்க முடிவு செய்ததாக இலங்கையின் திவயின என்ற நாளிதழ் ஒரு செய்தியைப் போட்டுள்ளது.

இந்த நிமிடம் வரை தங்களுக்கு எதிரான ஒரு நீர்த்துப் போன தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது குறித்து பொங்கிப் பொறுமிக் கொண்டுள்ளனர் இலங்கையர்கள். இந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்று அவர்கள் ஆளாளுக்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், திவயின என்ற நாளிதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், ஜெயலலிதாதான் இலங்கைக்கு எதிராக இந்தியா செயல்படக் காரணம் என்பது போல சொல்லியுள்ளனர்.

இதுகுறித்து அந்த செய்தியில் கூறியிருப்பதாவது...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சமூகமாக முறையில் இயங்கச் செய்ய முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்ததே, இந்தியாவின் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம்.

அணு உலை உருவாக்கத்திற்கு ஆதரவளித்தமையினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அரசாங்கம் வாக்களிக்க முடிவுசெய்தது.

இதை பிபிசியின் இந்தியப் பிரிவு செய்தியாளர் நரேன் பூஷன் உறுதி செய்துள்ளார்.இலங்கைக்கு எதிராக வாக்களித்தால்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு தமிழக அரசு ஆதரவு தரும் என்று மத்திய அரசிடம், முதல்வர் ஜெயலலலிதா திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்தே மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati




கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்ததை எதிர்த்து அசோக் பாண்டே என்ற சட்டத்தரனி பொது நல வழக்கு தொடரந்துள்ளார்.
இவ்வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் சட்டம் 80 (3)-ன் கீழ் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறந்தவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி அளிக்க முடியும்.
விளையாட்டு வீரருக்கு இப்பதவி அளிக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று தனது வழக்கு மனுவில் அசோக் தெரிவித்துள்ளார்.
ஆகவே, அரசியல் சட்டத்தை மீறி டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati





தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் அம்மாநில முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
ஏற்கனவே கன்னோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான உள்ள அகிலேஷ் யாதவ் உத்திரபிரதேச முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் மாநில முதல்வராகப் பதவியேற்றால் 6 மாதங்களுக்குள் அவர் அம்மாநிலத்தில் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு உறுப்பினராக வேண்டும். இல்லாவிடில் அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாது.
அதன்படி அகிலேஷ் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக சமீபத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
எனவே இன்று அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் சபாநாயகர் மீராகுமாரிடம் அளித்தார்.
அகிலேஷின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி உறுப்பினர்களின் பலம் 22லிருந்து 21 ஆகக் குறைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் பரம எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியும் 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 சென்னை: வரும் ஜூன் 12 ம் தேதி நடக்கவிருக்கும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க., ஜகா வாங்கியுள்ளது. தோல்வி பயம் காரணமாக பின்வாங்கியதா என அ.தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி பலியானார். ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதால் இந்த தொகுதி உள்பட பிறமாநிலங்கள் சேர்த்து 27 தொகுதிகளுக்கு வரும் ஜூனம் மாதம் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தரப்பில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் அறிவிக்கும் முன்னதாக அதாவது தேர்தல் தேதி மாலையில் வெளியானது. காலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் இந்த தி.மு.க.,போட்டியிடாது என தி.மு.க.,தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; இந்த தேர்தலில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது இங்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இணைந்து முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் இங்கு மற்ற கட்சிகளுக்கு தோல்வி உறுதி. எனவே வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என கூறியுள்ளார்.

இந்திய கம்யூ., பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏற்கனவே இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தே.மு.தி.க., ம.தி.மு.க., தனது நிலையை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சங்கரன்கோவிலில் டிபாசிட் போனது : சங்கரன் கோவில் இடைத்தேர்தல் தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் டிபாசிட் பறிபோனது நினைவிருக்கலாம். இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் முத்துச்செல்வி 50 ஆயிரத்திற்கு மேலான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றறார். இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் ஜெயிக்கும் என்பது வரலாறு. இது போன்று கடந்த காலத்தில் தி.மு.க., ஆளும்கட்சியாக இருந்த நேரத்தில் அ.தி.மு.க.,வும் சில இடைத்தேர்தல்களை புறக்கணித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


சீனாவின் ஜீலின் எனும் மாகாணத்தில் 3D ஓவியங்களின் கண்கவர் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரபல 3D ஓவியரான Ai Weiwei என்பவரின் கைவண்ணத்தில் உருவான இவ் ஓவியங்கள் மிக நேர்த்தியான முறையில் பிரதிப்பலிப்பதைக் காணலாம்.


Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி  பல்ப் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.
அதாவது சுமார் 100,000 மணி நேரகள்   இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் பல்ப் னது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான ‘பிலிப்ஸினால் உற்பத்தி செய்யப்படுகின்றது. 
மேலும் அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் பல்ப் 10மில்லியன்  டாலர் பரிசினையும் இந்த  பல்ப் வென்றுள்ளது. சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த  பல்ப் ன் விலை 60 அமெரிக்க  டாலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதனைப் பயன்படுத்தும் காலத்தில் சுமார் 165 அமெரிக்க  டாலர்கள் வரையான மின்சக்திச் செலவினை சேமிக்க முடியும் என பிலிப்ஸ் தெரிவிக்கின்றது. எனினும் சில இடங்களில் இதனை 25 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக பிலிப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ரஷிய தலைநகர் மொஸ்கோவுக்கு மேலாக கடந்த 26 ஆம் திகதி வானத்தில் திடீரென்று பச்சை நிற முகில்கள் பரவலாக தோன்றின. இதனால் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
உலகத்தின் இறுதி நாள் வந்து விட்டது என்று சொல்லிசிலர் திகிலை ஏற்படுத்தினர்.வேற்றுக் கிரகவாசிகளின் வேலையாக இருக்குமோ? என்று சிலர் சந்தேகப்பட்டனர்.இன்னும் சிலர்கடவுளுடைய அருளின் வெளிப்பாடு என்கின்றனர்.
ஆனால் பெரும்பாலானோர் இரசாயன பேரழிவு ஒன்றை இது கட்டியம் கூறுகின்றது என்றே நம்பினர். மக்கள் அமைதியாக இருக்க வேண்டும், பதற்றம் அடைய வேண்டாம் என்று அரசு கோரியது.
மொஸ்கோவில் உள்ள பாரிய இரசாயன தொழில்சாலை ஒன்று தீப்பற்றி எரிந்தது என்றும் இங்கிருந்து கிளம்பி சென்ற இராசாயன பொருட்கள்தான் பச்சை முகில்களாக சூழ்ந்து நிற்கின்றன என்றும் பொதுமக்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் தற்போது பூச்ச மரங்கள் பூத்து உள்ளன என்றும் இவற்றில் இருந்து வெளியேறிய மகரந்தங்கள்தான் பச்சை முகில்களாக சூழந்து நிற்கின்றன என்றும் இவை பாரதூரமான ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. இதனால் மொஸ்கோவில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும் அரசு உண்மையை மறைக்கின்றது என்றே பெருமளவிலானோர் சந்தேகிக்கின்றனர்.


Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 கவுகாத்தி: அசாமில், பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 100 க்கும் மேற்பட்டோர் பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. பலர் உடல்களை மீட்பதில் புயல் , மழை பெரும் இடையூறாக இருப்பதாவும், தேசிய பேரிடர் ஆணையத்தினர் மற்றும் ராணுவ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
அசாம், துப்ரி பகுதியிலிருந்து ஹத்சிங்கிமரி பகுதிக்கு செல்வதற்காக, 250 முதல் 300 பேர் ஒரு படகில் சென்றனர். பகிர் கஞ்ச் அருகே, பிரம்மபுத்திரா ஆற்றில், படகு சென்ற போது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 100 க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 103 பேரது சடலம் மீட்கப்பட்டது. 25 பேர் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்ததாக தெரிகிறது. இன்னும் 100 பேர்கள் மாயமாகி விட்டனர். இவர்களை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

விபத்து நடந்த இடத்திற்கு, ராணுவம், தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆறு படகுகள் மூலம் எல்லைப் பாதுகாப்புப் படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். கடும் மழையுடன், பலமான காற்றும் வீசியதால், இந்த விபத்து நடந்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெரு விழா கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) அரவாணிகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடக்கிறது.

இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அரவாணிகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

விழாவையொட்டி நேற்று காலை விழுப்புரத்தில் அரவாணிகளுக்கான மிஸ் கூவாகம்-2012-க்கான அழகிப்போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அரவாணிகள் (மகளிர்) நலச்சங்க தலைவர் ராதாம்மாள் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத் கலந்து கொண்டு அழகிப்போட்டியை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக நல வாரியத்துறை தலைவி நடிகை சி.ஆர்.சரஸ்வதி கலந்துகொண்டு பேசும்போது, இந்த திருவிழாவை காண பல ஊர்களில் இருந்து,

மாவட்டங்களில் இருந்து, நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளீர்கள். அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது உங்களது விழா. இதில் நானும் பங்கேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.


நிகழ்ச்சியில் அரவாணிகளுக்கு விளையாட்டு போட்டி, வினாடி-வினா போட்டி, நடன போட்டி, அழகிப்போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. இந்த விளையாட்டு போட்டிகளை முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான அரவாணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

அழகிப்போட்டியில் விழுப்புரம், மும்பை, பெங்களூர், சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தர்மபுரி, புதுச்சேரி, ஐதராபாத், செகந்திராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அரவாணிகள் கலந்துகொண்டு விதவிதமான கண்ணை கவரும் வகையிலான வண்ண, வண்ண உடைகளில் மேடையில் கவர்ச்சியாக தோன்றி ஒய்யாரமாக நடந்துவந்து பார்வையாளர்களை அசத்தினர்.

அழகிப்போட்டியில் பங்கேற்றவர்களில் நடை, உடை, பாவணையின் அடிப்படையில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பொது அறிவுத்திறன், எய்ட்ஸ், எச்.ஐ.வி.யின் அறிகுறிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் சிறப்பாக பதில் அளித்த திருவண்ணாமலையை சேர்ந்த ஹரினி "மிஸ் கூவாகம்- 2012'' ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையை சேர்ந்த தீபிகா 2-வது இடத்தையும், தர்மபுரியை சேர்ந்த சாயாசிங் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

நடன போட்டியில் மும்பையை சேர்ந்த ரோஜா முதலிடமும், நாகர்கோவில் நிஷா 2-ம் இடமும், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஐஸ்வர்யா 3-ம் இடமும் பிடித்தனர். விளையாட்டு போட்டியில் பெங்களூர் பூமிகா முதலிடமும், மாயாவரம் ரமா 2-ம் இடமும், திருவண்ணாமலை மோகி 3-ம் இடமும் பிடித்தனர். வினாடி-வினா போட்டியில் மும்பை ரோஜா முதலிடமும், நாகர்கோவில் நிஷா 2-ம் இடமும், பெங்களூர் நிலா 3-ம் இடமும் பிடித்தனர்.

இதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை ஹரினிக்கு `ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்பட புகழ் நடிகை மதுமிதா, கிரீடத்தை அணிவித்து பரிசு வழங்கினார்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டாலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல கோழிக்கறி நிறுவனமான கே.எப்.சி.க்கு, உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள கே.எப்.சி நிறுவன கிளையில் இருந்து மோனிகா என்ற சிறுமிக்கு, அவரது பெற்றோர் கோழிக்கறி வாங்கி தந்தனர்.
இந்த கறியை சாப்பிட்ட மோனிகாவுக்கு உடல் நிலை பாதித்து, ஆறு மாதம் கோமா நிலைக்கு சென்றாள். அதன் பின் அவளது கை, கால்கள் முடங்கி போயின.
விஷமாகி போன கோழி கறியை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கே.எப்.சி நிறுவனத்தின் மீது, மோனிகாவின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
கோழிக்கறி விஷமானதற்கு பொறுப்பேற்க கே.எப்.சி மறுத்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நியூசவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், மோனிகாவுக்கு 80 லட்சம் டாலர் இழப்பீடு அளிக்கும் படி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எப்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் போன்றது. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எந்த முறையிலாவது குழந்தையை பெற்றெடுத்த உடன் அப்பாடா என்ற நிம்மது பிறக்கும். சில சமயம் டெலிவரி ஆனாவுடன் மனதில் பாரம் குடியேறும் ஒரு வித மன அழுத்தம் ஏற்படும். இது அனைத்துப் பெண்களுக்கும் இயல்பாக ஏற்படுவதுதான். எனவேதான் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் மருத்துவர்கள் கூறுவதைக் கேளுங்களேன்.

அழுகையும் ஆர்பாட்டமும்

பிரசவமானதும் மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் பெண்கள் பெண்கள் தாங்களாகவே காரணமின்றி அழுவார்கள். குழந்தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத்தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்கு பேபி ப்ளூஸ் Baby Blues என்று மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். பிரசவித்த ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.

மனநோய் கோளறுகள்

சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டுள்ளனர் மருத்துவர்கள். இது ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்லதல்ல. காரணம், அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இந்தச் சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பதுதான் நல்லது.

ஆவேச நிலை

சில பெண்கள் ஆவேசத்தின் உச்சியில் தங்களையும் அறியாமல் குழந்தையைப் பாதிக்கக் கூடிய அளவுக்கேகூடச் செல்வார்கள்!

தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவர, மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டியிருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இதுபோன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படுவது இயற்கைதான் என்றாலும் அவர்களை பத்திரமாக பாதுகாத்து ஆறுதல் படுத்தவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati