இன்றிரவு நிலாவுடன் ஜோடி சேரும் செவ்வாய்




ஐதராபாத்: இன்றிரவு 9 மணிக்கு பிறகு கிழக்கு வானத்தில் நிலாவுக்கு அருகில் செவ்வாய் கிரகம் தோன்றும் என பிளானட்டெரி சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பூமி, சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி உள்பட 8 கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கிரங்கங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும். அப்போது பூமியில் இருந்து வெறும் கண்களாலே இவற்றை தெளிவாக பார்க்கலாம். இன்று இரவு 9 மணிக்கு மேல் கிழக்கு வானில் நிலாவுக்கு அருகில் சிவப்பு நிறத்தில் மினுமினுக்காத நட்சத்திரம் போன்ற வெளிச்சம் தெரியும். இது செவ்வாய் கிரகமாகும். மறுநாள் காலை வரை இந்த அரிய காட்சியை வானில் பார்க்கலாம். ஆனால் விடியற்காலையில் பார்க்க விரும்புகிறவர்கள் மேற்கு பக்கம் பார்க்க வேண்டும். இதே போல் வரும் 12ம் தேதி இரவு 11.30 மணிக்கு மேல் நிலாவுக்கு அருகில் சனிக்கிரகத்தை பார்க்கலாம். ஐதராபாத் பிளானட்டரி சொசைட்டி பொது செயலாளர் ரகுநந்தன் குமார் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati



அதிரை சுன்னத்வல் ஜமா அத் ஐக்கியப் பேரவையின் மூன்றாம் ஆண்டு இஸ்லாமிய அறிவமுத போட்டி

அதிராம் பட்டினம் ( ஏறிபுரக்கரை) கடற்கரை சாலை காந்தி நகரில் அறிவமுத போட்டி மிக சிறப்பாக 10/02/2012
நடைபெற்றது இதில் 100கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு அவர்களுடைய இஸ்லாமிய போதனைகள் மற்றும் நபிமார்களின் சரித்திரம்,சூராக்கள் ஒப்பிப்பது, பயான் கூறுவது,
திரு குர் ஆன் மனனம் ஒப்பித்தல்,அழகிய தோரனையில் மாணவ மாணவிகள் வெளிப்படித்தினார்கள் இவர்களுக்கு பல பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன
இஸ்லாமிய அறிவமுத போட்டியை அதிரை சுன்னத்வல் ஜமா அத் ஐகிய பேரவை தலைவறும்
ஆதம் நகர் இமாம் மௌலவி M.F. ஷேக்தாவூது (மிஸ் பாஹி )அவர்கள் விழவை தொகுத்து வழங்கினார்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

மரண அறிவிப்பு


அஸ்ஸாலாமு அழைக்கும்.மரண அறிவிப்பு.
கடற்கரை தெருவை சேர்ந்த. ஹாஜி, MS . முஹமது அலி,
MS . முஹமது காசீம், NM .முஹமது இக்பால் , SMN . முஹமது மீரா,
இவர்களின் பெரியதாயாறும் மாகிய.ஹாஜீமா, பாத்துமுத்து ஜொஹரா
அவர்கள் நேற்று(9/02/2012) இரவு 8 :30 மணி அளவில் காலமாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனஷா இன்று கலை 9 :30 மணி அளவில்
கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மய்யவாடில் நல்லடக்கம் செய்யபடும்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

அதிரையில் உன்மை மரைக்கப்பட்டதா? மறக்கப்பட்டதா?



கடந்த 14 05 1992 மகரிப்  தொழுக்கைகு பின் அதிராம்பட்டினம்

புதுமனைதெருவில் அடித்து கொலைசெயபட்ட அப்பஸ் ஹாஜியரின்

உன்மையனா கொலை குற்றவாலி யார்? இன்று வரை கன்டுபிடிக்ககபடவிலை

மேற்பபடி உன்மையனா கொலை  குற்றவாலியை கன்டுபிடித்து சட்டதிற்க்கு

முன் நிறுத்தி சட்டபடி தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி  உரிய சட்டபூர்வ

நடவடிக்க மெர்கொல்வதில் யார்கெனும் ஏதெனும் ஆட்சேபனை இருந்தல்

தாரலமஹா தெரியப்படுத்தலாம்
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதியற்றது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 2008ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைகோள் அனுப்பிய புகைப்படங்களையும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.

3 வருட ஆய்வுக்கு பிறகு தற்போது உயிரினங்கள் வாழ செவ்வாய் கிரகம் தகுதியற்றது என கண்டறிந்துள்ளனர். ஏனெனில் அங்கு 60 கோடி ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவுகிறது. எனவே அங்கு உயிர் வாழ போதிய அளவு தண்ணீர் இருக்க வாய்ப்பில்லை. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் ஐஸ்கட்டிகள் படர்ந்துள்ளன. அதனால் தான் அங்கு தண்ணீர் இருப்பதாக கருதப்பட்டது. அவை தவிர மற்ற பகுதிகளில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை மற்றும் தகுதி இல்லை என உறுதியான முடிவுக்கு வந்துள்ளது இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


மின் பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது. கோடைக்காலம் துவங்கும் நேரத்தில், அதிகரிக்கப்பட உள்ள இந்த மின்வெட்டு, மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். மின்
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 சமீப காலமாக நமது ஊர் சேர்மன் அகமது அஸ்லம் அவர்கள் விரு விருப்பான செய்திகளை மக்களுக்கு காதில் போட்டுவிட்டு இதை யாரிடமும் சொல்லாதிங்க என்று எல்லோரிடம் டைம் போட்டு சொல்லிதிருகிறாராம்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Karunanidhi, Jayalalitha and Vaiko சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத் தேர்தல் களத்தில் தற்போதைய நிலவரப்படி மதிமுகதான் படு தீவிரமாக உள்ளது. அடுத்து அதிமுக உள்ளது. 3வது இடத்தில் திமுக உள்ளது. தேமுதிகவின் நிலை குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பூர்வாங்கப் பணிகளை முதலில் தொடங்கியது மதிமுகதான். இந்தத் தொகுதி உறுப்பினரான கருப்பசாமி மறைந்ததுமே அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான களப் பணிகளில் மதிமுக இறங்கியது. அதிமுகவே சற்று அயர்ந்து போகும் அளவில் படு சுறுசுறுப்பாக, பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர் மதிமுகவினர்.

சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுகவுக்கென்று கணிசமான வாக்குகள் உள்ளதால் அந்தக் கட்சி பெருத்த தெம்புடன் உள்ளது. இத்தொகுதியில் மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை வேட்பாளரை அறிவித்து விட்டார்கள். நகராட்சித் தலைவராக உள்ள முத்துலட்சுமிதான் வேட்பாளராக இறக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அதிமுகவும் ஆரம்ப கட்டப் பணிகளை முடுக்கி விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது.

திமுக தரப்பிலும் விருப்ப மனுக்கள் வாங்க ஆரம்பித்துள்ளனர். அது முடிந்ததும் வேட்பாளரை இறுதி செய்து திமுக ஆரம்பிக்கும். பூர்வாங்கப் பணிகள் ரேஸில் தற்போது 3வது இடத்தில்தான் இருக்கிறது திமுக.

பாமகவுக்கு இந்தத் தொகுதி சற்றும் சம்பந்தமில்லாதது என்பதால் அந்தக் கட்சியும் ஒதுங்கி ஓரம் கட்டியுள்ளது. தற்போதைய பெரும் கேள்வி தேமுதிகவின் நிலை என்ன என்பதுதான்.

சட்டசபையில் நடந்த பெரும் மோதலுக்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவிலில் திராணி இருந்தால் தனித்து நின்று காட்டுங்கள் என்று தேமுதிகவுக்கு சவால் விட, ஆளுநர் ஆட்சியில் தேர்தல் நடத்துங்கள், நாங்கள் தனித்து நிற்கிறோம் என்று விஜயகாந்த்தும் பதில் சவால் விட்டுள்ளார்.

இதனால் இந்தத் தேர்தலில் தேமுதிக போட்டியிடுமா, போட்டியிடாதா என்பதில் குழப்பம் நிலவுகிறது. பேச்சுக்குத்தான் கேப்டன் அப்படிக் கூறினார். மற்றபடி போட்டியிடாமல் இருக்க மாட்டார் என்று தேமுதிக தரப்பில் கூறுகிறார்கள். இருப்பினும் தேமுதிக போட்டியிடுமா அல்லது திமுகவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்க தீர்மானிக்குமா என்பது தெரியவில்லை.

இதுவரை சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தொடர்பாக தேமுதிகவின் நிலை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே அதற்காக அக்கட்சித் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati