மின் கட்டண உயர்வு அறிவிப்பு


மின்கட்டண உயர்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் இன்று மாலை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 37% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ந் தேதி அமல் படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

புதிய கட்டண உயர்வு விவரம் : 

*100 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு ரூ. 1.10 கட்டண உயர்வு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
*100 யூனிட்டுக்கு கீழ் பயன்படுத்துவோருக்க 1 யூனிட்டுக்கு ரூ.25 காசு உயர்த்தப்பட்டுள்ளது.

*தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு ரூ.4-லிருந்து. ரூ.5.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

*100-200 யூனிட் ஒன்றிற்கு ரூ.1.80 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*வேளாண் சார்ந்த பணிகளுக்கு தனித்தனியே மின் கட்டணம்.

*200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அரசு மானியம் கிடையாது.

*200 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 மின் கட்டணம் வசூல் செய்யப்படும்.

*500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு ரூ.5.75 மின் கட்டணம் வசூல் செய்யப்படும்.
 
*மாதாந்திர குறைந்தபட்ச மின் கட்டணம் அனைவருக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக,

*150 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.220 ஆக மின் கட்டணம் இருக்கும்.

*200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.620 ஆக மின் கட்டணம் இருக்கும்.

*300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.980 ஆக மின் கட்டணம் இருக்கும்.

*500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,680 ஆக மின் கட்டணம் இருக்கும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ஸ்பெயினில் சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வழக்கு விசாரணை
சவுதி அரேபியா இளவரசர் அல்வால்ட் பின் தலால். உலக கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஸ்பெயினில் உள்ள யாசிட் நகரில் உள்ள இபிஷா என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார். அப்போது 20 வயது மாடல் அழகியை கற்பழித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதை அவர் மறுத்தார்.
 
இதுகுறித்து ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசர் தலால் மீது கற்பழிப்பு வழக்கு தொடரலாம் என தீர்ப்பு கூறியது. அதை தொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரிடம் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள் தயாரிக்கிறது
அமேசான்.காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மிகச்சிறிய கணினியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தயாரிப்புகளுக்கு சவால் விடும் விதமாக ஆசிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கூகுள் நிறுவனமும் மிகச்சிறிய கணினியை தயாரிக்க இருக்க இருக்கிறது.
 
ஏழு இன்ச் அளவில் இந்த கணினி வடிவமைக்கப்பட இருக்கிறது. இதனை ஆசியாவைச் சேர்ந்த கணினியை உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து  மிச்சிறிய கணினியை உருவாக்க இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
டிஜிட்டிமஸ் மற்றும் வால்ஸ்டீரீட் பத்திரிக்கையில் தெரிவித்துள்ள தகவலின் படி, ஆன்ட்ராய்ட் மென்பொருள் நிறுவனம் சாம்சங் மற்றும் ஆசுச்டேக் நிறுவனங்களுடன் இணைந்து ஐ-பேடு மற்றும் கிண்ட்லே சாதனங்களுக்கு போட்டியாக இச்சிறிய கணினி உருவாக்கப்பட இருக்கிறது.
 
இக்கணினி 199 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10000 ரூபாய்) விலையில் வரும் மே மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று  அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

கூடங்குளம் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்



கூடங்குளம் போராட்டக் குழு தலைவர் உதயகுமார் உட்பட, போராட்டக்கார்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆயினும் கூடங்குளம் விவகாரத்தில் வெவ்வேறு வடிவத்தில தொடரும் என உதயகுமார் தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்திலுள்ள பிரச்சனைகளை பற்றி 9 சர்வதேச அமைப்புகளுக்கு புகார் தெரிவிக்கப்படும் என உதயகுமார் கூறினார். மேலும் இதுதொடர்பாக, சர்வதேச அணுசக்தி ஒழுங்காற்று ஆணையத்துக்கும் புகார் அனுப்பி வைக்கப்படும் என உதயகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய உதயகுமார், சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்பட்ட புகரால் பலன் கிடைக்கும் என தான் நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டாலும், அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என உதயகுமார் கூறியுள்ளார்.
nanri 
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


தஞ்சாவூர்: மன்னார்குடி-பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மன்னார்குடி, பட்டுக்கோட்டையை இணைக்கும் புதிய அகல ரயில் பாதை அமைப்பதுக்கான திட்டத்தை ரயில்வே துறை அறிவித்து, அதற்கான நில சர்வே பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தால் 350 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும்.
இப்பகுதியில் வசிக்கும் ஒன்றரை லட்சம் பேரின் வாழ்வாதாரம் சிரமத்துக்குள்ளாகும் என வலியுறுத்தி அகல ரயில்பாதை எதிர்ப்புக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரனிடம் நேற்று மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய அகல ரயில்பாதை 42 கி.மீ., தூரத்தில் அமைகிறது. இதற்கு, இடைப்பட்ட பகுதியில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த 21 கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 1.50 லட்சம் மக்கள் உள்ளனர். பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி, பரம்பரை பரம்பரையாக வசிக்கின்றனர்.
கண்ணன் ஆறு, பாட்டுவனாச்சி, நசுவினி ஆறு போன்ற காட்டாறுகளும், பாமினியாறு, கல்யாண ஓடை வாய்க்கால், தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால் போன்ற பாசன வாய்க்கால்களும் உள்ளது. இவற்றில் குறுக்கே ஏழு ஆற்றுப்பாலங்களும் புதிய ரயில்பாதைக்காக கட்டப்பட வேண்டும்.
இடையே குறுக்கிடும் நெடுஞ்சாலைகளில் ஒன்பது மேம்பாலங்கள் கட்டவும் பல கோடி ரூபாய் செலவிட வேண்டும். மேற்கண்ட திட்டத்துக்காக 350 ஏக்கர் விவசாய நிலங்களை ரயில்வேதுறை கையகப்படுத்த வேண்டும். இதனால், மா, தென்னை விவசாயம் அடியோடு அழியும். 1.50 லட்சம் மக்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
இதுதவிர, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான ஏரி, குளங்கள், ஃபோர்வெல்களையும் புதிய திட்டத்துக்காக அழிக்க நேரிடும். இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் மன்னார்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு 32 கி.மீ., தூரம் உள்ளது. மூன்று வழித்தடத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை பஸ் வசதி ஏற்கனவே உள்ளது.
மன்னார்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆறு கி.மீ.,தூரத்தில் உள்ள மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு போக்குவரத்து வசதி இல்லை. இதற்கான ஆட்டோ கட்டணம், ரயில்வே கட்டணம் சேர்த்து 75 ரூபாய் செலவாகும்.
ஆனால், தற்போது பஸ்ஸில் வெறும் 15 ரூபாய் செலவில் பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு பொதுமக்கள் சென்று விட முடிகிறது. இடைப்பட்ட தூரத்தில் முக்கிய சுற்றுலா தலம் ஏதும் இல்லாததால் வேறு ரயில்வே ஸ்டேஷன்களை அமைக்க முடியாது.
அதனால், புதிய திட்டத்தால் அரசுக்கு எவ்விதத்திலும் வருவாய் கிடைக்காது. விவசாயத்தை பாதிக்கும் வகையிலும், 1.50 லட்சம் பேரின் வாழ்வாதாரத்தை சிதைத்தும், வீணாக போடப்பட்டுள்ள புதிய அகல ரயில்பாதை திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.



Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 

கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னை தொடர்பாக போராட்டக்குழுவினர் நடத்தி வரும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை சுமூகமாக முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடலோர கிராமங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள ரூ.500 கோடிக்கான திட்டங்கள் மற்றும் 7 மாத காலத்தில் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் வாங்குவது ஆகியவை குறித்து ஆலோசிக்க ஏடிஜிபி ஜார்ஜ் இன்று நெல்லை வந்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க தமிழக அமைச்சரவை ஆதரவு அளித்ததையொட்டி அங்கு கடந்த 18ம் தேதி இரவு முதல் போலீசார் குவிக்கப்பட்டனர். 

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் உட்பட 950 பேர் வேலைக்கு வந்தனர். அங்கு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடங்குளம் அணுமின்நிலைய பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், உறுப்பினர் புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் கடந்த 19ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். 6வது நாளான இன்றும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையே சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட போராட்டக்குழுவினர் சில நிபந்தனைகளை விதித்துள்ளனர். கடந்த 7 மாதங்களாக போராட்டக்குழு மற்றும் பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே தமிழக அரசும் இந்த போராட்டத்தை சுமூகமாக முடிக்க திட்டமிட்டுள்ளது. போராட்டக்காரர்களை கோர்ட் உத்தரவு பெற்று கைது செய்வது என்றும், அவர்கள் தவிர பொதுமக்கள் மீது 7 மாத  போராட்டக் காலத்தில் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்குவது குறித்து ஆலோசிப்பது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது. இது தவிர  கூடங்குளத்தில் சிறப்பு வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்தபடி ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அணுமின்நிலைய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க இன்று கூடங்குளத்திற்கு ஏடிஜிபி ஜார்ஜ் கூடங்குளம் வந்தார். அங்கு அணுமின்நிலைய அதிகாரிகளுடனும், போலீஸ் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ரூ.500 கோடி திட்டங்கள் குறித்து அணுமின்நிலைய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.  கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விடுமுறை நாளான இன்றும் முழுவீச்சில் பணிகள் நடந்தன. வழக்கம் போல் அனைத்துப் பணியாளர்களும் வேலைக்கு வந்தனர். 7 மாதங்களாக முடங்கி கிடந்த பணிகளை விரைவில் முடிக்க 3 ஷிப்ட்களில் பொது விடுமுறை நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati