இதயநோயை தடுக்கும் வால்நட்!

Walnuts Lower Cholesterol Other Cv  ‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ‘வால்நட்' எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டிஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும். உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


வேலூர்: வேலூரில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றார். ஆனால் அதில் 3 குழந்தைகள் இறந்துவிட்டன.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் மனைவி பானுப்பிரியா. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று காலை பிரசவ வலி எடுத்ததையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குமரேசன் சேர்த்தார்.
அங்கு சுகப்பிரசவத்தில் பானுப்பிரியாவுக்கு அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் அடக்கம். ஆண் குழந்தைகள் 740 மற்றும் 610 கிராம் எடையுடன் பிறந்தன. பெண் குழந்தைகள் 540 மற்றும் 590 கிராம் எடை கொண்டதாக இருந்தன. குழந்தைகள் எடை குறைவாக பிறந்ததால் பிறநதவுடன் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டன.
இந்நிலையில் 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை இறந்தன. 740 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை மட்டும் இன்குபேட்டரில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்த செய்தி அறிந்த குமரேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து டாக்டர் கூறுகையில்,
ஒரே பிரசவத்தில் 3 அல்லது 4 குழந்தைகளை பெற்றெடுப்பது அரிதாகும். கடந்த வாரம் கூட ஒரு பெண் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டன. நேற்று பிறந்த 4 குழந்தைகளில் 3 இறந்துவிட்டன.
கருவறையில் போதிய இடம் இல்லாததால் குழந்தைகள் வளர முடியாமல் எடை குறைவாகப் பிறக்கின்றன. எனவே, கர்ப்பிணிகள் துவக்கத்திலேயே ஸ்கேன் செய்து பார்த்து அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


கோலாலம்பூர்: மலேசியாவில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் இறந்த பச்சிளம்குழந்தையின் உடல் இருந்த தனது சக மாணவியின் பையை 17 மணிநேரமாக வைத்திருந்துள்ளார். அவருக்கு பையில் குழந்தையின் உடல் இருந்தது தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. இதையடுத்து அவர் குழந்தையின் உடலை புத்தகப்பையில் வைத்து தன்னுடன் படிக்கும் 16 வயது மாணவி ஒருவரிடம் கொடுத்துவிட்டார். அவரும் பைக்குள் புத்தகம் தான் இருக்கிறது என்று நினைத்து அந்த பையை 17 மணிநேரம் வைத்துள்ளார்.
இதற்கிடையே பிரசவித்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்படவே அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்களிடம் நடந்ததையெல்லாம் தெரிவித்துவிட்டார்.
இது குறித்து ஏசிபி மனோகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
புத்தகப்பையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தன் தோழி கொடுத்த பையில் இருந்தது குழந்தையின் சடலம் என்பது தெரிய வந்ததும் அந்த மாணவி பீதியடைந்தார். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அது பிறந்தவுடன் தலையில் காயம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் இறந்தது என்பது தெரிய வந்துள்ளது என்றார்.
மலேசியாவில் சிறுமிகள் இதுபோன்று கர்ப்பமாகி குழந்தையைப் பெற்று அதை எங்காவது போடுவது தொடர்கதையாகிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 31 குழந்தைகள் கைவிடப்பட்டுள்ளன. அதில் 10 குழந்தைகள் உயிருடன் உள்ளன. 19 குழந்தைகள் இறந்துவிட்டன. மேலும் 2 குழந்தைகளின் நிலை குறித்து மருத்துவமனைகள் இன்னும் தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு அரசு அதிகாரி ஹர்ஜித் சிங் தெரிவித்தார்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

India More Than 12 Lakh Candidates Sit Tnpsc Group 4 Tomorrow  சென்னை: தமிழகத்தில் அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
குரூப் 4 மூலம் வரி வசூலிப்பாளர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோகிராபர், டைப்பிஸ்ட், டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக அனைவரும் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைத் தட்டி விட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை தமிழகத்தில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் விரிவான முறையில் ஏற்பாடுகளையும் தேர்வாணையம் செய்துள்ளது.
தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் அரசுத் தேர்வாணைய தேர்வை எழுதப் போவது இதுவே முதல் முறை என்பதால் இந்த 12 லட்சம் பேரின் குடும்பங்களும் பெரும் டென்ஷனுடன் காத்துள்ளனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்!


காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
குழந்தைப்பேறு
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும். பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள். கணவனோ, மனைவியோ உடனே பெற்றோர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள்ளிப் போட நினைக்கலாம். எனவே எல்லாவற்றையும் யோசித்து, நன்றாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுங்கள்.
எல்லைகள் வகுத்துக்கொள்ளுங்கள்
கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் விரும்பக் கூடும். புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்னரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் அதுவே சிக்கலை ஏற்படுத்திவிடும்.
பண விவகாரம்
பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கணவன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பொறுமையாக விவாதியுங்கள். வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங்கள் கூட்டுக் கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர்களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் பங்கு என்ன? என்பத குறித்து இருவரும் முன்பே பேசி முடிவுக்கு வந்து விடுவது நல்லது.
செலவழிக்கும் பழக்கம்
பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திருமணத்துக்கு முன்பே விரிவாக, தெளிவாகப் பேசி விடுங்கள். வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடலாமா?, மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?, பொழுது போக்குக்கு என்ன செய்யலாம்? என்றெல்லாம் விலாவாரியாகப் பேசி விடுங்கள்.
தெளிவுபடுத்துங்கள்
கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் சரியாக ஒத்துப்போக முடியுமா? என்பதை இருவரும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து அவரவர்களின் நம்பிக்கையை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகலாம். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கை சுமூகமாகப் போக உங்கள் துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம்பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதும் முக்கியம்.
நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிறவராக இருந்தால் அங்கே பிரச்சினை எழலாம். நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் நிச்சயம் பிரச்சினை உருவாகும். எனவே தாலி கட்டும் முன்பே சில விசயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு நமக்கு ஒத்து வரும் என்று தெரிந்தால் மட்டுமே மணவாழ்க்கையில் இணைவது நல்லது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 பெங்களூர்: உலக அளவில் இப்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் கொடுப்பது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதற்காக பேரணிகள் நடத்துகிறார்கள், கூட்டம் போடுகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள பல கல்லூரிகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக கிளப்களை ஆரம்பிப்பது அதிகரித்து வருகிறதாம்.
முன்பெல்லாம் ரகசியமாக செயல்பட்டு வந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் இப்போது பல்வேறு உரிமைகளைக் கோரும் அளவுக்கு பகிரங்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் பெங்களூரில் உள்ள பல கல்லூரிகளில் ஓரினச் சேர்க்கை பழக்கம் கொண்ட மாணவ, மாணவியருக்கு ஆதரவாக கிளப்களைத் தொடங்கி வருகிறார்களாம்.
டெல்லி, புனே போன்ற நகரங்களில் இதுபோன்ற கிளப்கள் ஏற்கனவே உள்ளன. இந்த நிலையில் பெங்களூரில் 3 பேர் சேர்ந்து ஒரு கிளப்பை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படிப்பவர்கள். 9 மாதங்களுக்கு முன்பு இவர்கள் கிளப் தொடங்கினர். இதுகுறித்து அவர்களில் ஒருவர் கூறுகையில், ஓரினச்சேர்க்கைப் பழக்கம் கொண்ட பெரியவர்களுக்கு மட்டுமே இதுவரை கிளப்கள் உள்ளன. ஆனால் மாணவ, மாணவியருக்காக அது தொடங்கப்படவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கத்தான் நாங்கள் தொடங்கியுள்ளோம். நாங்கள் ஓரினச் சேர்க்கைக்கும், அதில் ஈடுபட்டுள்ளோருக்கும் ஆதரவாக இருப்போம் என்றார்.
இதேபோல பல கல்லூரிகளில் அமைதியான முறையில் இப்படிப்பட்ட கிளப்கள் செயல்பட்டு வருகின்றனவாம். விளம்பரம் இல்லாத வகையில்,இவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனராம்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Sl Army Claims Big Arms Cache Kilinochi  கிளிநொச்சி: விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியில், பெரும் ஆயுதக் குவியலை கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி. ஈழத்தில் உள்ள இந்த நகரானது தற்போது பெரும் சுடுகாடாக மாறிப் போய் விட்டது. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் ஆடிய வெறியாட்டத்தில் நகரமே சின்னாபின்னமாகி விட்டது.
இந்த நிலையில் கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியலைக் கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த ஆயுதங்களில் 2 லட்சம் ரவுண்டு வரை சுடக் கூடிய துப்பாக்கி குண்டுகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் இருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்த மேல் விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 Nithyanantha Is Kodaikanal With His Supporters  கொடைக்கானல்: நித்தியானந்தா தனது ஆதரவாளர்கள் புடை சூழ கொடைக்கானலுக்கு வந்து ஒரு ஹோட்டலில் 60 அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் ஹோட்டலை விட்டு அனுமதி பெறாமல் வெளியேறக் கூடாது என்று போலீஸார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. அங்கு யாரும் இல்லை. நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தமிழகத்திற்குள் புகுந்துள்ளனர். ஆங்காங்கு தங்கியுள்ளனர். நித்தியானந்தாவுடன் ஏராளமானோர், மதுரை ஆதீன மடத்தி்ல தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் கொடைக்கானலுக்கு கிளம்பி வந்துள்ளார் நித்தியானந்தா. அத்தனை பேரும் நள்ளிரவுக்கு மேல் மலை ஏறி வந்தனர். பின்னர் அட்டுவம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அவ்வளவு பேரும் ரூம் எடுத்துத் தங்கினர். மொத்தம் 60 அறைகளை அவர்கள் புக் செய்துள்ளனராம். ஜூலை 22ம் தேதி வரை இங்குதான் அத்தனை பேரும் முகாமிடப் போகிறார்களாம்.
எதற்காக இந்த திடீர் தங்கல் என்பது தெரியவில்லை. ஆனால் ஏதோ யோகா முகாம் என்று கூறப்டுகிறது.
இந்த ஹோட்டலுக்குள் நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் மற்றும் ஹோட்டலில் தங்கியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஹோட்டல் வாட்ச்மேன் தவிர நித்தியானந்தாவின் கட்டுமஸ்தான சில ஆதரவாளர்களும் வாசலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும் கூட்டமாக நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் கொடைக்கானல் வந்திருப்பதால், போலீஸ் அனுமதி இல்லாமல் யாரும் வெளியே போகக் கூடாது என்று நித்தியானந்தா தரப்புக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளதாம்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

 மதுரை: பிளஸ்டூவில் 1100 மார்க் வாங்கி, பொறியியல் படிப்பில் சேர காத்திருக்கும் ஒரு மாணவன், தனது ஆசிரியைகள் உள்பட ஏராளமான பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும், செல்போனில் ஆபாசமாகப் பேசியும் போலீஸில் சிக்கி சிறுவர் சிறைக்குப் போயுள்ள பரிதாபம் நடந்துள்ளது மதுரையில்.


மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவன் மணிகண்டன். பிளஸ்டூ முடித்துள்ளான். பிளஸ்டூ தேர்வில் 1100 மதிப்பெண் வாங்கியுள்ளான். நன்கு படிக்கக் கூடிய மாணவன். யாருடனும் அதிகம் பேச மாட்டானாம், வீட்டில் கூட எப்போதும் தனது அறைக்குள்ளேயே முடங்கியிருப்பானாம். இதனால் ஏதோ படிக்கிறான் போல என்று நினைத்து வீட்டில் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் அந்த மாணவின் செயல் இன்று அவனது குடும்பத்தை மட்டுமல்லாமல், அந்த மாணவனின் பெருமையையும் தலைகுப்புற கவிழ்த்துப் போட்டு விட்டது.

50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் கூறி கைது செய்யப்பட்டுள்ளான் மணிகண்டன்.
அவன் ஆபாசமாக பேசியது, எஸ்.எம்.எஸ் அனுப்பியவர்கள் பட்டியலில் அவனது பள்ளி ஆசிரியைகள் சிலரும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனது பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை ஒருவருக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ். அனுப்பி வந்துள்ளான் மணிகண்டன்.மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாகவும் பேசியுள்ளான். இவனது தொல்லை தாங்க முடியாமல்ஆசிரியை போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையில் மாணவன் மணிகண்டன் வசம் செல்போன் இருப்பதும், அவன்தான் இப்படிச் செய்கிறான் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவனைக் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர் போலீஸார். அவன் பயன்படுத்தி வந்த போனிலிருந்து யார் யாருக்கெல்லாம் அழைப்பு போயிருக்கிறது என்பதை ஆராய்ந்தனர். அதில் பெரும்பாலான எண்கள் பெண்கள் வைத்திருந்ததாகும். அவர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ் வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவன் மணிகண்டனின் முகவரியைக் கண்டுபிடித்த போலீஸார், முதலில் மணிகண்டனின் செல்போனுக்கு ஒரு ஆண் கான்ஸ்டபிள் மூலம் மிஸ்ட் கால் கொடுத்தனர். இதையடுத்து அந்த எண்ணை அழைத்த மணிகண்டன், எதிர்முனையில் யார் பேசுகிறார்கள் என்பதைக் கூட உணராமல், எடுத்த எடுப்பிலேயே ஆபாசமாக பேச ஆரம்பித்தான். தான் போலீஸ்காரருடன் பேசுகிறோம் என்று தெரியாமல் அவன் பேசினார். இந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு மணிகண்டன் வீடு புகுந்தனர் போலீஸார்.
அவனைக் கைது செய்த போலீஸார், அவனது அறையை சோதனை போட்டனர். அப்போது அங்கிருந்து ஒன்பது சிம் கார்டுகள், 2 மொபைல் போன்கள், 2 மெமரி கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கை குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கூறுகையில், முதலில் நாங்கள் அவனது அறைக்குள் போக முயன்றபோது எங்களைத் தடுத்து நிறுத்தி கத்தினான் மணிகண்டன். அறைக்குள் வந்து சோதனை போட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி அழுதான். இருப்பினும் அவனை சமாதானப்படுத்தி விட்டு சோதனை போட்டோம்.
நன்கு படிக்கக்கூடிய இந்த மாணவன், மிகப் பெரிய கிரிமனல் ஒருவன் செயல்படுவது போல பல்வேறு சிம் கார்டுகள், செல்போன்கள், மெமரி கார்டுகளை வைத்துக் கொண்டு இப்படி நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்றார்.
மணிகண்டனின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியுடன் உள்ளனர். மிகவும் அமைதியான பையன், யாருடனும் அதிகம் பேச மாட்டான், பழக மாட்டான். அவன் இப்படிச் செய்திருப்பான் என்பதை நம்பவே முடியவில்லை என்று கூறி அவர்கள் அழுதனர்.
மணிகண்டன் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், இது எனக்குப் பொழுதுபோக்கு. நான் பாட்டுக்கு ஏதாவது எண்ணைப் போடுவேன். பெண்கள் வந்தால் ஆபாசமாக பேசுவேன், எஸ்எம்எஸ் அனுப்புவேன்.
எனது பள்ளியிலிருந்து ஆசிரியைகளின் செல்போன் எண்கள் கிடைத்தன. அதை கொண்டு அவர்களுக்கும் அனுப்பினேன் என்று கூறியுள்ளான்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், சிறார் பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


  காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொதிக்கும் சாம்பார் சட்டிக்குள் விழுந்த 4 வயது சிறுமி உடல் வெந்து பரிதாபமாக பலியானாள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த களியப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். அவரது 4 வயது மகள் பத்மா. கடந்த 28ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பத்மா வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தான் சமையல் முடித்து கொதிக்கும் சாம்பார் சட்டியை கீழே இறக்கி வைத்திருந்தனர்.
ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த பத்மா சாம்பார் சட்டிக்கு அருகிலும் சென்றாள். அப்போது எதிர்பாராவிதமாக சாம்பார் சட்டிக்குள் சிறுமி விழுந்தாள். இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பதறிய பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் பத்மா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati