புளோரிடா : அமெரிக்காவில் மூடுபனியால் கார்கள் ஒன்றோடொன்று மோதி தீப்பிடித்த விபத்தில் 10 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாண கெய்னெஸ்விலே பகுதியின்
நெடுஞ்சாலையில் நிலவிய கடும் மூடுபனி காரணமாக வாகனங்கள் வருவதே கண்ணுக்கு தெரியவில்லை. இதனால், கார்களும், லாரிகளும் ஒன்றன் மீது ஒன்று பயங்கரமாக மோதியதில், வாகனங்களில் தீப்பற்றியது. கடும் மூடுபனி மற்றும் எரியும் வாகனங்களில் இருந்து வெளியேறிய புகையால் மீட்புபணியை தீவிரப்படுத்த முடியவில்லை. அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்ததால் விபத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. காயமடைந்தவர்கள் வலி தாங்காமல் எழுப்பிய அலறல் மற்றும் முனங்கல்¢ சத்தத்தை வைத்து மீட்கப்பட்டனர். வாகனங்களுக்குள்ளே உடல் கருகிய நிலையில் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a comment