சவூதியில் அண்ணன்-தம்பிக்கு ‌தலை துண்டித்து தண்டனை


ரியாத்: சவூதியில் ‌வியாபார போட்டியில் சகநண்பரை கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பி இருவருக்கும் தலைதுண்டித்து தண்டனை விதிக்கப்பட்டது. சவூதியில் கொலை,கற்பழிப்பு, ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களுக்கு‌ கொடூர தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சவூதிஅரேபியான் ஜெட்டா நகரைச்சேர்ந்தவர்கள் முகமது, சலீம் அல்-மதிரிபி. இவர்கள் ஷாத்-அல் மதிரிபி என்ற வியாபாரியை , முன்விரோதம் மற்றும் வியாபார போட்டியால் ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் தாக்கி கொலை செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது ஷரியா சட்டத்தின் கீழ் அவர்களுக்கு நேற்று கூர்மையான வாளினால் தலை துண்டித்து தண்டனை விதிக்கப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


பீஜிங்: சீனாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில், 650 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. சீனாவில் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அணுமின் உலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு பகுதியில் உள்ள ஜீஜியாங் மாகாணத்தில் குயின்ஷான் பகுதியில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்த அணுமின் நிலைய பணிகள் தொடங்கின என்று திட்டத்தின் செயல் தலைவர் கூறினார். சீனாவில் அணுமின் திட்டங்கள் மூலம் 12.528 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டின் மின் உற்பத்தியில் 1.1 சதவீதம். இப்போது அணுமின் உற்பத்திக்காக பல இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 2015ம் ஆண்டுக்குள் இவை படிப்படியாக செயல்படும்போது, 41 ஜிகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


அகமதாபாத்: குஜராத் கலவரத்தில் 23 பேரை குற்றவாளிகளாக நேற்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனைதொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகின்ற 12 ஆம் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா நகரில் அயோத்தி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ராம பக்தர்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 பேர் பலியானார்கள். இதனைத்தொடர்ந்து, குஜராத் முழுவதும் கலவரம் ஏற்பட்டதில், ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஓதே கிராமத்தில் 2002ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பயங்கர கலவரம் வெடித்த போது, அங்குள்ள பிர்வாலி பகோய் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட சிறுபான்மையினர் 23 பேர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு படை விசாரணை நடத்தியதில், 47 பேர் மீது ஆனந்த் மாவட்ட உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

மேலும், கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கிய விசாரணை கடந்த ஆண்டு மே மாதம் முடிவடையும் நிலையில் இருந்தது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி திடீரென சொந்த காரணங்களுக்காக வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து, நீதிபதி பூனம் சிங் வழக்கை மீண்டும் விசாரித்தபோது மொத்தம் 150 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நீதிபதி பூனம் சிங் நேற்று தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில் 23 பேர் குற்றவாளிகள் என்ற அவர், மீதமுள்ள 23 பேரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறியுள்ளார் என தெரிகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


கோவை:பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதலுக்குள்ளாகி, நேற்று முன்தினம் இரவு மட்டும், கோவை அரசு மருத்துவமனையில், நான்கு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுடன் சேர்த்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


சாடம்: வீட்டு பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த ஆறாம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததில் மாணவனின் விலா எலும்பு உடைந்தது. இதைப்பற்றி கேட்கப்போன தாயையும், ஆசிரியர் எட்டி உதைத்தார்.

ஆந்திரா சித்தூர் மாவட்டம் சாடம் என்ற ஊரைச் சேர்ந்த மாணவன் உதய்குமார், 11. இவன் அதே ஊரில் உள்ள குருகுல பள்ளியில், விடுதியில் தங்கி, ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டுபாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்றான். அவன் வீட்டுப் பாடம் செய்யாததை அறிந்த ஆசிரியர், அவனை அடித்து வெளியே அனுப்பியுள்ளார். இதில், அவனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதைப்பார்த்த கிராமத்தினர் சிலர், ஆசிரியரை கண்டித்தனர். கிராமத்தினர் அங்கிருந்து சென்றதும், மீண்டும் அந்த மாணவனை அழைத்த ஆசிரியர், "நீ ஏன் கிராமத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்னாய்' எனக்கேட்டு, மாணவனின் நெஞ்சில் உதைத்துள்ளார்.

அன்றைய தினம் வலியுடனேயே இருந்த மாணவன், மறுநாள் தன் வீட்டுக்குச் சென்று நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தான். அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டாக்டர்களிடம் பரிசோதித்தனர். மேலும், எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது, மாணவனின் விலா எலும்பு உடைந்திருப்பது தெரிந்தது. ஆத்திரமடைந்த மாணவனின் தாய், பள்ளிக்கு சென்று இது குறித்து ஆசிரியரிடம் கேட்டார். அதில், மேலும் ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த பெண் ணையும் எட்டி உதைத்து விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாணவனின் விலா எலும்பை உடைத்த ஆசிரியர், ஒப்பந்த அடிப்படையில், அந்தப் பள்ளியில் பணியாற்றி வந்தார் எனக் கூறப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


விர்ஜினியா: விர்ஜினியாவில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது கப்பற்படையை சேர்ந்த ஜெட் விமானம் மோதி நொறுங்கியது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அல் கய்தா தீவிரவாதிகள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக புகழ் பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோதி தகர்த்தனர். அதன்பின் அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் விர்ஜினியா மாநிலத்தில் கடற்கரையோரம் இருந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நேற்று ஜெட் விமானம் ஒன்று திடீரென மோதி நொறுங்கியது. 

அங்கிருந்தவர்கள் தீவிரவாதிகள் தாக்குதலாக இருக்குமோ என்ற பீதியில் அலறி ஓடினர். கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். விமானம் நொறுங்கிய இடத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. தீவிர விசாரணையில் அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த ஜெட் விமானம் என்பதும், அதில் வந்த 2 பைலட்கள் பாராசூட்டில் தப்பியதும் தெரிய வந்தது. விர்ஜினியாவில் அமெரிக்காவின் கப்பற்படை முகாம் உள்ளது. இங்கு பயிற்சியில் ஈடுபட்ட போது ஜெட் விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


தமிழ்நாட்டில் இதுவரை 29 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: அமைச்சர் விஜய் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை 29 பேர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் தெரிவித்துள்ளார்.
 
இப்பன்றிக்காய்ச்சல் பல்வேறு இடங்களுக்கு பரவும் தோற்றுநோய் இல்லை எனவும், இது அங்கும் இங்கும் நிகழ்கிற நோய்தான் என்றும் தெரிவித்துள்ளார். பன்றிக் காய்ச்சல் சென்னை, கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தாக்கி இருப்பதாக தெரிவித்த அவர், இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இந்நோய் குழந்தைகள் மற்றும் வயது முதியோர்களை மட்டுமே தாக்குவதாகவும், அதிலும் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே தாக்குவதாக தெரிவித்தார்.
 
தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் குறித்து இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்த அமைச்சர் கிங் இன்ஸ்ட்டியுட், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், மற்றும் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைகள் தவிர 12 தனியார் மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் சுமார் 25,000 தடுப்பு மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆய்வு கூடங்களில் பணிபுரிபவர்களுக்கும் முதலில் வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மாநில நுழைவு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூரியுள்ளார்
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati


ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற டெக்கான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாஃப் டூ பிளசிஸ், ஜடேஜா, பிராவோ போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய டெக்கான் அணி 17.1 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Read more »
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati