சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் 94,977 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 26,220 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் 20,678 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் 12,144 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற வந்தபோது அவருடன் பலர் முண்டியடித்து வந்ததன் விளைவாக அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் மற்றும் வெற்றி சான்றிதழ் பெறும்போது, வேட்பாளருடன் 4 பேர் இருக்க அனுமதி என்பது தேர்தல் விதி. முத்துச்செல்வி, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, தேர்தல் விதியின்படி, 4 பேர் மட்டுமே வந்தனர். ஆனால் இன்று அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற வந்தபோது, 10க்கும் மேற்பட்டவர்கள் முத்துச்செல்வியுடன் வந்தனர். அவர் போட்டோவிற்கு போஸ் கொடுக்க தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டதன் விளைவாக அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது.











Leave a comment