ராதாபுரத்திற்குள் நுழைய 144 தடை உத்தரவு


 
கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்யும் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் தனிநபர்கள் ராதாபுரம் தாலுகாவிற்குள் ஏப்ரல் 2ம் தேதி மாலை வரை நுழைய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நெல்லை கலெக்டர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூடன்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுக்களின் அறிக்கை மற்றும் அணுமின் திட்டத்திற்கு எதிரான மனு விரிவாக ஆராயப்பட்டதில் நில நடுக்கம், சுனாமி போன்றவை அப்பகுதியில் ஏற்பட வாய்ப்பில்லை என்பதும், கூடன்குளம் அணுமின் நிலையம் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களை கொண்டதும் என்பது தெரிய வந்துள்ளது.அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காது என்பதும், அப்பகுதி மக்களிடையே ஏற்படும் சந்தேகங்களுக்கு மத்திய அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பதில் அளித்துள்ளதை கருத்தில் கொண்டு அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்பது தெரிய வந்துள்ளது.

மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத நிலையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, கூடன்குளம் அணுமின்நிலையத்தை உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில் கூடன்குளம் அணுமின் நிலையப் பணிகள் நேற்று(19ம் தேதி) முதல் செயல்படத்துவங்கியுள்ளது. அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு உதவுவதோடு, கூடன்குளம் பகுதி பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை தடுப்பதற்கும், கூடன்குளம் அணுமின் நிலையத்தில் சட்டப்படி பணிபுரிபவர்களை தடுக்காமல் இருப்பதற்காகவும், அவர்களை பாதுகாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாக்கவும், கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கூடன்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவிற்கு உதவி செய்வது, அவர்களை தூண்டிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், அமைப்புகள்,இயக்கங்கள் மற்றும் நபர்கள் நேற்று(19ம் தேதி) மாலை 3 மணி முதல் வரும் ஏப்ரல் 2ம் தேதி மாலை 3 மணி வரை ராதாபுரம் தாலுகாவிற்குள் நுழைய 144 தடை உத்தரவு பிறப்பபிக்கப்படுகிறது.இவ்வாறு கலெக்டர் செல்வராஜ் அறிக்கையில் கூறியுள்ளார்.

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment