
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிற்பகல் 12.35 மணியளவில் தொடங்கி 1.30 வரை அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கூடங்குளம் தொடர்பாக அமைச்சர்களிடம் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அணுமின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்காது : ஜெ
அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக வல்லுநர் குழு அறிக்கை குறித்தும், போராட்டக்குழு அறிக்கை குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து, 'கூடங்குளம் அணுமின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு இருக்காது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நன்றி
தினகரன்











Leave a comment