கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் தமிழகம் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்த கரையில் நேற்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்க கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். அப்போது 43 பெண்கள் உள்பட 178 பேரை போலீசார் கைது செய்து பாளை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வந்தனர்.
போலீசாரால் அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. ஆனால் தங்களை கைது செய்ததை கண்டித்து அவர்கள் சாப்பிட மறுத்துவிட்டனர். இன்று காலை அவர்கள் நாம்தமிழர் இயக்கத்தை சேர்ந்த வக்கீல் சிவகுமார் அளித்த உணவை சாப்பிட்டனர். பின்னர் அவர்களை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக வேன்களில் கொண்டு சென்றனர். மதியம் அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கூடங்குளம் போராட்டக்காரர்களை அடைப்பதற்காக திருச்சி மத்திய சிறையில் உள்ள கேம்ப் சிறை வளாகத்தை சிறை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர்.
இங்கு 4 ஆயிரம் பேர் வரை அடைக்கப்பட்டது உண்டு. இந்த கேம்ப் சிறை வளாகத்துக்கென கழிவறை வசதிகள் உள்ளன. தேவைப்படும்போது சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கப்பட்டு, குடிநீர் வசதி செய்யப்படும். அதன்படி தற்போது இந்த கேம்ப் சிறை வளாகத்தில் சின்டெக்ஸ் டேங்கு கள் அமைக்கப்பட்டு வருகிறது.











Leave a comment