அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்றில் கேரட் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை ஆரம்ப நிலையில் காணப்படும் மார்பக புற்றுநோயை தடுக்க கூடியது என தெரிய வந்துள்ளது. இவற்றில் உள்ள வைட்டமின் 'ஏ' வழியே பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம் ஆனது செல்க    ளின் வளர்ச்சி, புதுப்பொலிவு மற்றும் செல் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி தோல் வனப்புடன் இருப்பதற்கும் உதவுகிறது. 

மனிதனின் உடலில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜீன் ரெட்டினாய்க் அமிலத்தின் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கும் பணியினை செய்கிறது. இதனால் ரெட்டினாய்க் அமிலம், ஆரம்ப நிலையில் காணப்படும் புற்றுநோய் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது என அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் உருளைக்கிழங்கு முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.

உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்குவதற்கும் கேரட் துணை புரிகிறது.

இந்த துர்நாற்றத்திற்கு வாயோ, பற்களோ காரணம் அல்ல. வயிற்றிலிருக்கும் கோளாறுதான் காரணம். வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும். உருளைகிழங்கு சாப்பிடுவதன் மூலம் ஆரம்ப கால புற்றுநோயை தடுக்கும்

ஆரம்ப புற்று நோய் இருப்பின் கேரட் மற்றும் உருளை கிழங்கு சேர்த்து புற்றுநோயை தடுக்கலாம் 
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment