பட்டுக்கோட்டை - தஞ்சை வழியே புதிய வழித்தடம் அமைக்க, 1932 ஆம் ஆண்டிலேயே சர்வே செய்யப்பட்ட வழித்தடத்தில் விரைந்து பணியினை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வர்த்தக சங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,
ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள், ஜீனியர் சேம்பர் ஆப் காமர்ஸ்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம், அகில இந்திய மருத்துவ சங்கம் மற்றம் நகர வர்த்தகர்கள் சார்பில் மத்திய ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.
பட்டுக்கோட்டை - தஞ்சை வழித்தடம் 1932ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்திலேயே திட்டமிடப்பட்டு 1949 ம் ஆண்டு ரயில்வே நிர்வாகத்தினால் ஏற்றுகொள்ளப்பட்டு 1997 -- 98ம் ஆண்டில் 100.77 கோடி மதிப்பில் திட்டமதிப்பிடப்பட்டது.
பட்டுக்கோட்டையிலிருந்து தினசரி 5நிமிட இடைவெளியில் தஞ்சை செல்லும் பேருந்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் செல்கின்றனர். பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை மற்றும் பிற நகர்பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் டன்னுக்கு குறையாமல் நெல், உப்பு. தேங்காய், உலர்கருவாடு மற்றும் விவசாய பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் சாலைவழியே கொண்டு செல்லப்படுகின்றன.
பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர். பேராவூரணி போன்ற பகுதிகளுக்கு சில்லரை சரக்குகள் மற்றும் ஜவுளிகள் ஏற்றிவரும் வாகனங்கள் அனைத்தும் சாலையையே பயண்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலும், சாலை விபத்துக்களும் நடக்கின்றன. பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சையளிக்க முடியாமல் மேல் சிகிச்சைக்காக தஞ்சை செல்லும் நோயாளிகள் போக்குவரத்து நெரிசலாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போல பஸ், பாஸ் வைத்துள்ள மாணவ மாணவியர்கள் தனியார் பேருந்தில் செல்லமுடியாமல் சிரமமப்படுகின்றனர். மேலும் இவர்கள் கல்லூரிக்கு செல்ல பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடியே செல்வதால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும் இருக்கிறது. பேருந்து கட்டணங்கள் அதிகளவில் இருப்பதால் ஏழை எளியவர்கள் சிரமப்படுகிறார்கள்.
பட்டுக்கோட்டை - தஞ்சை வழித்தடத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை,ஒரத்தநாடு, தஞ்சாவூர் மற்றும் திருவையாறு என ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கி வருவதால் வர்த்தக நோக்கத்திலும் இத்திட்டம் வெற்றிகரமானதாக அமையும்.
தஞ்சை மாவட்டத்தின் வருவாய் நிர்வாக பகுதிகள் தஞ்சை - பட்டுக்கோட்டை பகுதியில் அதிகளவில் இருப்பதால் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக மாவட்ட தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள தஞ்சாவூருக்கு அடிக்கடி வந்து போக வேண்டிய அவசியமும் இருப்பதால்
பட்டுக்கோட்டை - தஞ்சை ரயில் பாதை திட்டத்தை விரைந்து தொடங்கிட இந்த பகுதி மக்களின் 80 ஆண்டுகால கணவு திட்டமான இந்த திட்டத்தை நிறைவேற்றி தரும்படி கோரிக்கை மனுவினை கொடுத்து அவர் நெடுஞ்சாலை துறையில் செய்த சாதனையால் பொதுமக்கள் பெரும் நன்மை அடைந்ததற்கும் நன்றி தெரிவித்தனர்.
இதில் பட்டுக்கோட்டை - தஞ்சை போராட்ட குழு தலைவர் கந்த கல்யாணம், இமானுவேல்ராஜ் உள்ளிட்டவர்கள் மன்னார்குடிக்கு வந்த டி.ஆர் பாலுவிடம் நேரில் சென்று கொடுத்தனர்.











Leave a comment