கொல்கத்தா : ஐபிஎல் 5வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில் சென்னை அணியை மும்பை அணி வென்றது. 2வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி & கொல்கத்தா அணிகள் இடையே நேற்றிரவு நடந்தது. முன்னதாக மழையால் ஆட்டம் தாமதமானது. மழை நின்றதும் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாசில் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் அடுத்தடுத்து 3 விக்கெட் இழந்து 20 ரன்களே எடுத்தனர்.
பிறகு 54 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த அந்த அணி 12 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. அதிகபட்சமாக லஷ்மி சுக்லா 26 ரன் எடுத்தார். 98 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் சேவக், ஆரோன் பின்ச் ஜோடி 49 ரன் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தது.
பின்ச் 30 ரன்னில் ஆட்டமிழக்க, இர்பான் பதான் வந்து அதிரடியை தொடங்கினார். சேவக் 20 ரன்னில் பெவிலியன் திரும்ப, பதானுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். பதான் பவுலர்களை பந்தாட 20 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 42 ரன் குவித்தார். கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதமிருக்க டெல்லி அணி 100 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற் றது.











Leave a comment