சென்னையில் 2 பேருக்கு பன்றிக் காயச்சல் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வடமாநிலங்களுக்கு சென்று வருபவர்கள் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என்று பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த வாரம் வேலை நிமித்தமாக டெல்லி சென்றார். பிறகு சென்னை வந்த அவருக்கு 100 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல், உடல்வலி, தும்மல் போன்றவை ஏற்பட்டன. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. இதையடுத்து, கிருஷ்ணனின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், இவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி தங்கராஜன் தலைமையிலான குழுவினர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 2 பேரின் வீடுகளுக்கு சென்று டாமி புளு மாத்திரைகளை கொடுத்தனர். கிருஷ்ணனுக்கு பன்றிக் காய்ச்சலில் பாதிப்பு குறைவாக இருப்பதால், அவரை ஒரு வாரத்துக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினர்.
அறிகுறிகள் இருந்தால் உஷார்
அதிக காய்ச்சல், சளி தொந்தரவு, உடல் வலி, தலை வலி, தொடர்ந்து தும்மல், தொண்டை வறண்டு போதல், வயிற்று போக்கு, வாந்தி, உடல் சோர்வு, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் முன்னெச்சரிக்கையாக பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது சுகாதார துறை தகவல்
இதேபோல் ஆதம்பாக்கத்தை சேர்ந்த ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி தங்கராஜன் தலைமையிலான குழுவினர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 2 பேரின் வீடுகளுக்கு சென்று டாமி புளு மாத்திரைகளை கொடுத்தனர். கிருஷ்ணனுக்கு பன்றிக் காய்ச்சலில் பாதிப்பு குறைவாக இருப்பதால், அவரை ஒரு வாரத்துக்கு வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தினர்.ரவிக்கு பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தனியார் மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 2 பேருடைய உறவினர்கள், பெற்றோர், குழந்தைகள், அக்கம் பக்கத்தினருடைய சளி, ரத்த மாதிரிகள் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொது சுகாதார துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பன்றிக்காயச்சல் முழுமையாக கட்டுப்பட்டுள்ளது. வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்களால்தான் இந்த காய்ச்சல் பரவுகிறது. எனவே, தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு சென்று வருபவர்கள் கட்டாயமாக மருத்துவமனைகளில் பரிசோதித்து கொள்ள வேண்டும். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 11 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதில் 9 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சல் பரவுவது அதிகமாக இருந்தால் அதனை தடுப்பதற்கு தனியாக சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.











Leave a comment