படிப்பை முடித்தவுடன் 2 ஆண்டுகளுக்கு வேலை உறுதி என்பதால், படிப்பு செலவை நிச்சயம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இந்திய மாணவர்கள் செலவைப் பற்றி கவலைப்படாமல் இங்கிலாந்து சென்றனர். அத்துடன் அனுபவம் கிடைப்பதால் இந்தியாவிலோ, வேறு நாடுகளிலோ நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.
இந்நிலையில், இதுபோன்ற விசாவை இன்று முதல் ரத்து செய்வதாக அந்நாட்டு உள்துறை அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. இப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன், தேர்தல் பிரசாரத்தின் போது வெளிநாட்டினர் வருகையை கட்டுப்படுத்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்களும் வேறு வழியில் விசா பெற்றால் மட்டுமே தொடர்ந்து இங்கிலாந்தில் பணியாற்ற முடியும்.
இல்லாவிட்டால் தாயகம் திரும்ப வேண்டியதுதான். இது இந்திய மாணவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும் அரசின் இந்த முடிவால் வெளிநாட்டு மாணவர்கள் வருகை கடுமையாக பாதிக்கும் என பல்கலைக்கழகங்களும், பிரிட்டிஷ் கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.











Leave a comment