
வாஷிங்டனில் எம்.பி.க்கள் கூடும் கேபிடால் கட்டிடத்தை தகர்க்க, மனித வெடிகுண்டாக வந்த ஆசாமியை சரியான நேரத்தில் எப்.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். மொராக்கோவை சேர்ந்தவர் அமின் எல் கலீப்பி. வயது 29. இவர் அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் ஆர்லிங்டன் பகுதியில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பல சதி திட்டங்களை தீட்டியதும், பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டாக இவரது நடமாட்டத்தை அமெரிக்க போலீசார் (எப்.பி.ஐ.) கண்காணித்து வந்தனர். இந்நிலையில், வாஷிங்டன் கேபிட்டால் ஹில்ஸ் பகுதியில் எம்.பி.க்கள் கூட்டம் நடக்கும் பார்லிமென்ட் கட்டிடத்தை தகர்க்க அமின் சதி திட்டம் தீட்டியது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
உடலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு கட்டிடத்தின் அருகில் சுற்றியபோது, எப்.பி.ஐ. அதிகாரிகளும் போலீசாரும் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து எப்.பி.ஐ. உதவி இயக்குனர் மெக்ஜன்கின் கூறுகையில், ÔÔஅமினுக்கும் அல் குவைதா தீவிரவாதி இயக்கத்துக்கும் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறதுÕÕ என்றார். விசாரணையில், இயந்திர துப்பாக்கியை இயக்கும் முறை, வெடிகுண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு இயக்குவது, குண்டுகளை வெடி க்க செய்வது ஆகியவற்றில் சிலரிடம் அவன் பயிற்சி பெற்றது தெரியவந்தது. அமின் கைது ஆனதை தொடர்ந்து கேப்பிடால் கட்டிடத்தின் அருகில் உள்ள வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் மீண்டும் தீவிரவாதி நடமாட்டம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அதிபர் ஒபாமா தெரிவித்தார். இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.
நன்றி
தினகரன்











Leave a comment