இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளில் தேவை அதிகரித்து வருவதே கச்சா எண்ணெய் விலை உயர காரணம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குற்றம்சாட்டி உள்ளார். எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவதை ஒப்புக் கொண்டுள்ள அவர், ''இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட வளரும் நாடுகளில் தேவை அதிகரித்து வருவதே கச்சா எண்ணெய் விலை உயர முக்கிய காரணம். உதாரணமாக, கடந்த 2010ல் சீனாவில் மட்டும் 1 கோடி கார் விற்பனையானது'' என்றார்.
இதுபோன்ற சூழலில் எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சிகள் பொய்யான வாக்குறுதி அளிக்கின்றன. இது நடைமுறை சாத்தியமற்றது என்றார் அவர். அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை ஒபாமா எடுத்து வருகிறார். அதேநேரம், தனது தேர்தல் பிரசாரத்துக்கு 3 இந்தியர்களை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.











Leave a comment