சென்னை: வரும் ஜூன் 12 ம் தேதி நடக்கவிருக்கும் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடாமல் தி.மு.க., ஜகா வாங்கியுள்ளது. தோல்வி பயம் காரணமாக பின்வாங்கியதா என அ.தி.மு.க.,வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த முத்துக்குமரன் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி பலியானார். ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதால் இந்த தொகுதி உள்பட பிறமாநிலங்கள் சேர்த்து 27 தொகுதிகளுக்கு வரும் ஜூனம் மாதம் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தரப்பில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த கார்த்திக்தொண்டைமான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தல் அறிவிக்கும் முன்னதாக அதாவது தேர்தல் தேதி மாலையில் வெளியானது. காலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த தி.மு.க.,போட்டியிடாது என தி.மு.க.,தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; இந்த தேர்தலில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது இங்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இணைந்து முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் இங்கு மற்ற கட்சிகளுக்கு தோல்வி உறுதி. எனவே வரவிருக்கும் தேர்தலில் தி.மு.க., போட்டியிடாது என கூறியுள்ளார்.
இந்திய கம்யூ., பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏற்கனவே இந்த தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். தே.மு.தி.க., ம.தி.மு.க., தனது நிலையை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கரன்கோவிலில் டிபாசிட் போனது : சங்கரன் கோவில் இடைத்தேர்தல் தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் டிபாசிட் பறிபோனது நினைவிருக்கலாம். இங்கு போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் முத்துச்செல்வி 50 ஆயிரத்திற்கு மேலான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றறார். இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் ஜெயிக்கும் என்பது வரலாறு. இது போன்று கடந்த காலத்தில் தி.மு.க., ஆளும்கட்சியாக இருந்த நேரத்தில் அ.தி.மு.க.,வும் சில இடைத்தேர்தல்களை புறக்கணித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.











Leave a comment