தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். |
| சமீபத்தில் நடைபெற்ற உத்திரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற சமாஜ்வாடி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் அம்மாநில முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். ஏற்கனவே கன்னோஜ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான உள்ள அகிலேஷ் யாதவ் உத்திரபிரதேச முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் மாநில முதல்வராகப் பதவியேற்றால் 6 மாதங்களுக்குள் அவர் அம்மாநிலத்தில் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு உறுப்பினராக வேண்டும். இல்லாவிடில் அவர் முதல்வர் பதவியில் தொடர முடியாது. அதன்படி அகிலேஷ் மாநில சட்டப்பேரவை உறுப்பினராக சமீபத்தில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். எனவே இன்று அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர் சபாநாயகர் மீராகுமாரிடம் அளித்தார். அகிலேஷின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் நாடாளுமன்றத்தில் சமாஜ்வாடி உறுப்பினர்களின் பலம் 22லிருந்து 21 ஆகக் குறைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சியின் பரம எதிரியான பகுஜன் சமாஜ் கட்சியும் 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. |











Leave a comment