கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்ததை எதிர்த்து அசோக் பாண்டே என்ற சட்டத்தரனி பொது நல வழக்கு தொடரந்துள்ளார். |
| இவ்வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 80 (3)-ன் கீழ் கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறந்தவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி அளிக்க முடியும். விளையாட்டு வீரருக்கு இப்பதவி அளிக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று தனது வழக்கு மனுவில் அசோக் தெரிவித்துள்ளார். ஆகவே, அரசியல் சட்டத்தை மீறி டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். நாளை இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. |











Leave a comment