தமிழ்நாட்டில் இதுவரை 29 பேர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் தெரிவித்துள்ளார்.
இப்பன்றிக்காய்ச்சல் பல்வேறு இடங்களுக்கு பரவும் தோற்றுநோய் இல்லை எனவும், இது அங்கும் இங்கும் நிகழ்கிற நோய்தான் என்றும் தெரிவித்துள்ளார். பன்றிக் காய்ச்சல் சென்னை, கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தாக்கி இருப்பதாக தெரிவித்த அவர், இதுகுறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இந்நோய் குழந்தைகள் மற்றும் வயது முதியோர்களை மட்டுமே தாக்குவதாகவும், அதிலும் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையே தாக்குவதாக தெரிவித்தார்.
தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் குறித்து இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்த அமைச்சர் கிங் இன்ஸ்ட்டியுட், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், மற்றும் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனைகள் தவிர 12 தனியார் மருத்துவமனைகளிலும் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் 25,000 தடுப்பு மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் ஆய்வு கூடங்களில் பணிபுரிபவர்களுக்கும் முதலில் வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மாநில நுழைவு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூரியுள்ளார்











Leave a comment