அகமதாபாத்: குஜராத் கலவரத்தில் 23 பேரை குற்றவாளிகளாக நேற்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனைதொடர்ந்து, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வருகின்ற 12 ஆம் அறிவிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா நகரில் அயோத்தி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த ராம பக்தர்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 பேர் பலியானார்கள். இதனைத்தொடர்ந்து, குஜராத் முழுவதும் கலவரம் ஏற்பட்டதில், ஏராளமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ஓதே கிராமத்தில் 2002ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பயங்கர கலவரம் வெடித்த போது, அங்குள்ள பிர்வாலி பகோய் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட சிறுபான்மையினர் 23 பேர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு படை விசாரணை நடத்தியதில், 47 பேர் மீது ஆனந்த் மாவட்ட உள்ளூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

மேலும், கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கிய விசாரணை கடந்த ஆண்டு மே மாதம் முடிவடையும் நிலையில் இருந்தது. ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி திடீரென சொந்த காரணங்களுக்காக வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து, நீதிபதி பூனம் சிங் வழக்கை மீண்டும் விசாரித்தபோது மொத்தம் 150 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் நீதிபதி பூனம் சிங் நேற்று தீர்ப்பளித்தார். தனது தீர்ப்பில் 23 பேர் குற்றவாளிகள் என்ற அவர், மீதமுள்ள 23 பேரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 12ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறியுள்ளார் என தெரிகிறது.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment