பீஜிங்: சீனாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில், 650 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. சீனாவில் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அணுமின் உலை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு பகுதியில் உள்ள ஜீஜியாங் மாகாணத்தில் குயின்ஷான் பகுதியில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இந்த அணுமின் நிலைய பணிகள் தொடங்கின என்று திட்டத்தின் செயல் தலைவர் கூறினார். சீனாவில் அணுமின் திட்டங்கள் மூலம் 12.528 ஜிகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டின் மின் உற்பத்தியில் 1.1 சதவீதம். இப்போது அணுமின் உற்பத்திக்காக பல இடங்களில் அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 2015ம் ஆண்டுக்குள் இவை படிப்படியாக செயல்படும்போது, 41 ஜிகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.











Leave a comment