ஐபிஎல் தொடரின் 6வது போட்டியில், டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற டெக்கான் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாஃப் டூ பிளசிஸ், ஜடேஜா, பிராவோ போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய டெக்கான் அணி 17.1 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.











Leave a comment