தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தனித் தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 1,874 மையங்களில் இன்று பிளஸ்-2 தேர்வு நடந்தது. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இதனை கண்காணிக்க பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர். தேர்வில் காப்பி அடித்தால் 2 வருடம் சிறை தண்டனை என்றும், நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த அளவு கூடுதல் கண்காணிப்பு இருந்தும், விழுப்புரத்தில் 3 மாணவர்கள் காப்பியடித்தற்காக பிடிபட்டனர். உடனே அவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேற்றப்பட்டனர். மேலும் இவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
இந்த மாணவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் எனவும் தவறு நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.











Leave a comment