ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் பூமியின் மேற்பரப்பு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ‘நிளிசிணி’ திட்டம் என்ற ஆய்வை நடத்தி வரும் இந்த மையம், பூமி எவ்வாறு சுழல்கிறது என்பதை துல்லியமாக கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சமுத்திரங்கள் அதன் பரப்பளவு, கடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஐஸ் பாறைகளின் சலனம் ஆகியவற்றை துல்லியமாக அறிய முடியும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமி மேற்பரப்பில் மஞ்சள் நிறம் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் புவியீர்ப்பு அதிகமாக உள்ளதாகவும் நீல நிறம் உள்ள இடங்களில் குறைவாக உள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.











Leave a comment