வெளிநாடு...! வெளிநாடு என்ற மோகம் சற்றே நமதுVரில் குறைந்துள்ளது என்பது இங்கு புதிய தொழில்கள் மற்றும் தொழில் உதவிகள் செய்யும் நண்பர்கள் அனைவரின் அரவணைப்பிலும் வெளிச்சமாய் சுடர்கொண்டு தெரிகிறது. துபையில் உனக்கு ரூ.15000 சம்பளம் ஓவர் டைமும் உண்டு என்று கூறும் விசா வழங்கும் நிறுவனத்திற்கு நமது மக்கள் கூறும் பதில் சென்னையில் வாகனத்திற்கு டிரைவராய் சென்றாலே ரூ.15,000 சம்பளம் கிடைக்கின்றது என்று கூறும் இளம் சகோதரர்கள் தற்பொழுது ஊரில் கால்பதித்தும் உள்ளார்கள் என்பது சந்தோசத்திற்குரிய செய்தியாய் இருக்கிறது.
மேலும் நம்முடைய படிப்புச் சான்றுகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்துக்கொள்ளுங்கள். இந்த ஆண்டு 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிந்து மதிப்பெண் பட்டியல் வெளிவந்தவுடன் அவர்களையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய தூண்டுகோளாய் முன்வாருங்கள்.....
நம்மை சூழ்ந்துள்ள சமுதாயம் காவல்துறையினர், அரசு அலுவலகர்கள் அனைவரும் நம்முடைய சூழ்நிலையை அறிந்துகொண்டு நமக்கு (மனிதர்களுக்கு) வழங்கக்கூடிய மரியாதைகளை கொடுப்பதில்லை. நாமும் வெளிநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற அச்சத்தில் அவர்களின் வார்த்தைகளுக்கு தலையசைக்க கூடியவர்களாய் இருக்கின்றோம். இனி வரும் சமுதாயம் நம் வாழ்க்கையில் சரித்திரம் படைக்கட்டுமே.












inimel engal kulanthaigal vurilaye velaiparkalam...