கிளிநொச்சி: விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியில், பெரும் ஆயுதக் குவியலை கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி. ஈழத்தில் உள்ள இந்த நகரானது தற்போது பெரும் சுடுகாடாக மாறிப் போய் விட்டது. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் ஆடிய வெறியாட்டத்தில் நகரமே சின்னாபின்னமாகி விட்டது.
இந்த நிலையில் கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியலைக் கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த ஆயுதங்களில் 2 லட்சம் ரவுண்டு வரை சுடக் கூடிய துப்பாக்கி குண்டுகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் இருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்த மேல் விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.











Leave a comment