சென்னை: தமிழகத்தில் அரசு தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது. மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்தத் தேர்வில் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.
குரூப் 4 மூலம் வரி வசூலிப்பாளர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோகிராபர், டைப்பிஸ்ட், டிராப்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. ஆன்லைன் மூலம் முதல் முறையாக அனைவரும் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைத் தட்டி விட்டுள்ளனர். இவர்களுக்கு நாளை தமிழகத்தில் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் விரிவான முறையில் ஏற்பாடுகளையும் தேர்வாணையம் செய்துள்ளது.
தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் அரசுத் தேர்வாணைய தேர்வை எழுதப் போவது இதுவே முதல் முறை என்பதால் இந்த 12 லட்சம் பேரின் குடும்பங்களும் பெரும் டென்ஷனுடன் காத்துள்ளனர்.











Leave a comment